Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த குணங்கள் உள்ளவர்கள் வெற்றியை ஒருபோதும் நெருங்க கூட முடியாதாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பல நூற்றாண்டுகளாகியும் இன்றும் புகழ்பெற்ற அறிஞராக இருக்கிறார். சாணக்கியர் தனது அனுபவங்களிலிருந்து தொகுத்த சாணக்கிய நீதியில், ஆச்சார்ய சாணக்கியர் மனிதர்களின் நற்பண்புகள் மற்றும் தீமைகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கியுள்ளார். ஒருவர் தனது நற்பண்புகளால் வாழ்க்கையில் வெற்றியை அடையும் அதேசமயம் ஒரு வெற்றிகரமான வேலை கூட தீய செயல்களால் தோல்வியாக முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
ஒருவருக்கு சில மோசமான குணங்கள் இருந்தால், அவர் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவரால் வெற்றி பெற முடியாது. ஆச்சார்ய சாணக்கியர் ஒருவர் வாழ்க்கையில் வெற்றிபெற இந்த விஷயங்களிலிருந்து எப்போதும் விலகி இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார். ஒருவரின் வாழ்க்கை முறையும், அவரிடமுள்ள குணங்களும், குறைபாடுகளுமே அவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்கிறார் சாணக்கியர்.

மனிதர்களாக பிறந்த அனைவருக்குள்ளும் சில குறைபாடுகள் இருக்கும். ஆனால் இந்தக் குறைபாடுகளில் சிலவற்றை சரியான நேரத்தில் உங்களுக்குள் இருந்து அகற்றாவிட்டால், உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கிய நீதியின் படி ஒருவரின் வாழ்க்கையில் தோல்விக்கு காரணமாக இருக்கும் குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உறுதியில்லாத மனம்
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க அமைதியான மனம் மிகவும் முக்கியம் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். அமைதியற்ற மனம் உள்ள எவரால் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அமைதியற்ற மனம் கொண்டவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவோ அல்லது எந்த வேலையையும் சிறப்பாகச் செய்யவோ முடியாது. அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் ஆபத்துகளும், பிரச்சினைகளும் சூழ்நிலைகளும் நிறைந்திருக்கும். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்திப்பார்கள்.
மற்றவரின் மகிழ்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுவது
மற்றவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு வருத்தப்படும் போக்கு தற்போது பலரிடம். இந்த குணம் உள்ள மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தனியாகவே இருக்கிறார்கள், மற்றவர்களின் வெற்றிகளால் அவர்கள் நிம்மதி இழக்கிறார்கள். அத்தகையவர்கள் வாழ்க்கையில் வெற்றியையோ அல்லது மற்றவர்களிடமிருந்து ஆதரவையோ ஒருபோதும் பெற மாட்டார்கள்.
மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள்
ஒருவர் தனது முழு உடலையும் தனது மனதின் மூலமே கட்டுப்படுத்துகிறார் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். ஒருவரின் மனது அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் அவர்கள் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது. இத்தகைய நிலையற்ற மனம் கொண்டவர்களால் எந்தப் பணியிலும் கவனம் செலுத்தி வெற்றியை அடைய முடியாது. ஒருவரின் தோல்விக்கு மிகவும் முக்கியமாக காரணமாக இருப்பது இதுதான்.
தனிப்பட்ட ஒழுக்கமின்மை
தனிப்பட்ட ஒழுக்கம் இல்லாதவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. ஒருவேளை ஒழுக்கமில்லாதவர்கள் வெற்றி பெற்றாலும், அது நீண்ட காலம் நீடிக்காது. வெற்றிபெற உங்கள் வேலையை ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் செய்வது மிகவும் முக்கியம். ஒழுக்கமும், நேர்மையும் இல்லாமல் யாராலும் வெற்றியை அடைய முடியாது.
அறியாமை
அறிவே ஒருவரின் உண்மையான நண்பனாகும். சாணக்கியரின் கூற்றுப்படி, அது புத்தக அறிவாக இருந்தாலும் சரி, அல்லது அனுபவத்தின் மூலம் பெறப்பட்ட அறிவாக இருந்தாலும் சரி, அது ஒருபோதும் வீணாகாது. எனவே அறிவு அல்லது அனுபவம் இல்லாத ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிகவும் கடினமாகும்.
சோம்பேறித்தனம்
சோம்பேறித்தனம் உள்ளவர்கள் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார். வெற்றிக்காக ஒருவர் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். வாழ்க்கையின் சிரமங்களை சமாளித்து வெளியே வர கடின உழைப்பு மட்டுமே உதவும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
