Latest Updates
-
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
10 கிராம் 1 கோடிக்கு விற்கப்படும் உலகின் விலையுயர்ந்த மரம் எது தெரியுமா? இதுல அப்படி என்னதான் இருக்கு? -
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற இராஜதந்திரி மற்றும் அரசியல்வாதி ஆவார். சாணக்கியர் இயற்றிய சாணக்கிய எந்த காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகும். இதில் குடும்பம், சமூகம், வணிகம், பொருளாதாரம் மற்றும் இராஜதந்திரக் கொள்கைகள் குறித்து மக்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பல விஷயங்களை சாணக்கிய நீதி விவரிக்கிறது. வீட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் சில விஷயங்களை சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ஒரு குடும்பத்தலைவருக்கு என்னென்ன குணங்கள் தேவை என்பதை சாணக்கியர் விளக்கியுள்ளார்.

குடும்பத்தலைவர் புத்திசாலியாக இருந்தால், அவர் எந்த சூழ்நிலையிலும் தனது குடும்பத்தை முன்னேற்றுவார், எனவே அவர்களிடம் சில குணங்கள் இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, குடும்பத்தலைவரிடம் இந்த குணங்கள் இல்லையென்றால், அந்த வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்காது. சாணக்கியர் குறிப்பிட்டுள்ள அந்த குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பணத்தை சேமிக்கும் திறன்
சாணக்கியரின் கூற்றுப்படி, வீட்டின் அதிபதி பணத்தை சேமிக்கும் திறனைக் கொண்டவராக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் தங்கள் குடும்பத்தின் இக்கட்டான காலங்களில் அவர்கள் யாரிடமும் கைநீட்டாமல் இருக்க, பணத்தைச் சேமிப்பது குடும்பத் தலைவரின் பொறுப்பாகும். ஒரு நல்ல குடும்பத் தலைவர் அதனை சரியாக செய்ய வேண்டும்.
எடுத்த முடிவில் உறுதியாக இருப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி, குடும்பத் தலைவரிடம் எடுக்கும் எந்த முடிவையும் கடைப்பிடிக்கும் திறன் இருக்க வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருந்தால்தான் குடும்பம் முன்னேற முடியும். குடும்பத் தலைவர் வீட்டில் ஒழுக்கமான சூழலைப் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டும். இப்படி செய்தால் தான் வீட்டில் உள்ளவர்கள் ஒழுக்கமாக இருப்பதுடன் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.
எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு குடும்பத் தலைவர் ஆதாரம் இல்லாமல் எந்த விஷயத்தையும் நம்பக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். யார் சொன்னாலும் அதனை நம்பி விடக்கூடாது. வீட்டில் தகராறு ஏற்பட்டால், இரு தரப்பினரின் நியாயத்தையும் கேட்டு, விஷயத்தை உறுதி செய்த பிறகே பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். யாருக்கும் பாரபட்சம் காட்டாமல் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்.
கவனமாக முடிவெடுப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு குடும்பத் தலைவர் ஒரு முடிவை எடுக்கும்போது, அவருடைய முடிவு குடும்பத்தில் உள்ள எவருக்கும் தீங்கு விளைவிக்காது என்பதில் உறுதியாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்ப வாழ்க்கையையும், குடும்பத்தையும் நல்ல வழியில் கொண்டு செல்ல முடியும்.
செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்
சாணக்கியரின் கொள்கையின்படி, சம்பாதிக்கும் பணத்திற்கு ஏற்ப குடும்பத்தை நடத்துவது குடும்பத் தலைவரின் பொறுப்பாகும். அத்தகைய சூழ்நிலையில், தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத் தலைவர் இதைச் செய்யாவிட்டால், அவரின் குடும்பமே பின்னர் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். குடும்பத் தலைவர் தனது அனைத்து முடிவுகளையும் கவனமாக எடுக்க வேண்டும். எனவே, பணத்தின் மதிப்பை வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு புரிய வைக்க அதிக பணம் செலவழிக்கக் கூடாது.
குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டும்
சாணக்கிய நீதியின் படி, குடும்பத்தை ஒற்றுமையாக வீட்டுக்காரரின் பொறுப்பாகும். அத்தகைய சூழ்நிலையில், வீட்டுக்காரர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் பேசுவது மிகவும் முக்கியம். இதன் மூலம் உங்களுக்கு இருக்கும் எந்த பிரச்சனையையும் புரிந்து கொண்டு தீர்க்க முடியும் மற்றும் குடும்பத்தில் பரஸ்பர அன்பு நிலைத்திருக்கும்.



Click it and Unblock the Notifications
