Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி பால் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - தித்திப்பா சூப்பரா இருக்கும் -
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யப்படுவதில்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தேடிவரப்போகுதாம் -
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது.. -
ஆடி மாத ராசிபலன் 2026: ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் மாதமாக இருக்கப்போகுதாம் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சுய ஒழுக்கமுள்ளவர்களாம் - வெற்றியும், செல்வமும் இவர்களை தேடிவருமாம் - உங்க ராசி என்ன -
Aadi 2026: ஆடி முதல் நாளில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி? - விளக்கும் தேச மங்கையர்கரசி!
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல தலைவரிடம் இந்த 4 குணங்கள் அவசியம் இருக்கணுமாம்... உங்ககிட்ட எத்தனை இருக்கு?
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த சமய அறிஞர் மட்டுமல்லாமல், ஒரு சிறந்த அரசியல்வாதி, ராஜதந்திரி மற்றும் பொருளாதார நிபுணராகவும் விளங்கினார். அவருடைய திறமையான ராஜதந்திரத்தால்தான் சந்திரகுப்த மௌரியர் மகதப் பேரரசின் சக்கரவர்த்தியானார். ஆச்சார்யர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையின் அனைத்து துறைகளைப் பற்றிய தனது கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை. தற்போதைய காலத்திலும், அவருடைய கொள்கைகள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் ஆச்சார்ய சாணக்கியரின் கொள்கைகள் இன்றும் உலகம் முழுவதும் புகழ்பெற்றவையாக உள்ளன. ஒரு நல்ல தலைவர் உருவானால் அவர் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார். ஆனால் நல்ல தலைவராக வேண்டுமென்று ஆசைப்படும் எல்லோராலும் நல்ல தலைவராக இருக்க முடியாது.

ஒரு நல்ல தலைவராக இருப்பதற்கு சில தகுதிகளும், குணங்களும் இருக்க வேண்டும். ஒரு நல்ல தலைவரின் குணங்களைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நல்ல தலைவருக்கு இருக்க வேண்டிய குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொறுமை
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, பொறுமை அல்லது நிதானம் ஒரு நல்ல தலைமைப் பண்பின் முக்கியமான அடையாளமாகும். கடினமான காலத்திலும் பொறுமையாக இருக்க தெரிந்தவர்கள், சிறிய மற்றும் பெரிய வேலைகள் அனைத்தையும் மிக எளிதாகக் கையாளக் கூடியவர்களாக இருப்பார்கள். ஒருவரின் இந்தக் குணம் அவரை அவர்களின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறச் செய்கிறது. ஒருவர் தலைவராக விரும்ன்பினால் அவர்கள் நிச்சயம் பொறுமையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
திட்டமிடல்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தவொரு வேலையும் சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அதை திட்டமிட்டுச் செய்தால், அந்த வேலையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்கள் வேலையைப் பற்றியும் இலட்சியத்தை அடைவதற்கான வழிகளைப் பற்றியும் அதற்கான உங்களின் திட்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது ஒரு நல்ல தலைமைப் பண்பின் அடையாளமாகும். ஏனெனில், அவ்வாறு ரகசியமாக வைத்திருப்பது எதிர்காலத்தில் உங்களுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்காது. அது அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் பாதுகாக்கும்.
கவனமாக இருப்பது
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நல்ல தலைவர் என்பவர், ஒரு வேலை முழுமையாக முடியும் வரை அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல தலைவர் என்பவர், வேலை முடிவதற்கு முன்பே கொண்டாடாமல், அது முடியும் வரை அந்த வேலையில் முழு விழிப்புடன் இருக்க வேண்டும். அதேசமயம் அவர்கள் தோல்வியடைந்து விட்டால் விரக்தியடையாமல் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அடுத்தகட்ட நகர்வை நம்பிக்கையுடன் தொடர வேண்டும்.
சக ஊழியர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நல்ல தலைவரின் அடையாளம் என்னவென்றால், அவர் எந்தவொரு முயற்சிகளைப் பற்றியும், பிரச்சினைகளைப் பற்றியும் தனது சக ஊழியர்களுடன் கலந்தாலோசிப்பார். இவ்வாறு செய்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் அவர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். மற்றவர்களின் ஆலோசனைகள் கேட்பவர்களே ஒரு நல்ல தலைவராக இருக்க முடியும் என்று சாணக்கியர் உறுதியாக நம்பினார். ஏனெனில் சாணக்கியரின் ஆலோசனைகளை ஏற்றே சந்திர குப்த மௌரியர் சிறந்த அரசராக உருவானார்.



Click it and Unblock the Notifications
