Latest Updates
-
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க
சாணக்கிய நீதி படி உங்களை பற்றிய இந்த 5 விஷயங்களை நீங்க யாருகிட்டயாவது சொன்னா உங்க வாழ்க்கை காலியாம்...!
Chanakya Niti: கௌடில்யர் என்று அழைக்கப்படும் சாணக்கியர், சிறந்த ஆசிரியர், தத்துவவாதி மற்றும் இராஜதந்திரியாக விளங்கினார். மனித வாழ்வு தொடர்பான பல விஷயங்களை சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். எனவே வாழ்க்கையை வெற்றிகரமாக வழிநடத்த விரும்புபவர்கள் சாணக்கிய நீதியை பின்பற்றலாம்.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதி புத்தகத்தின் 7 வது அத்தியாயத்தின் முதல் வசனத்திலேயே பெண்கள் மற்றும் பணம் பற்றி பேசியுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, சில விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பது அல்லது யாரிடமும் சொல்லாமல் இருப்பது புத்திசாலித்தனமானது.

சாணக்கியரின் கூற்றுப்படி, மனைவி மற்றும் பணம் தொடர்பான சில விஷயங்களை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது, அதே சமயம் சோகமாக இருக்கும்போது சொல்லக் கூடாத சில விஷயங்களையும் சாணக்கியர் கூறியுள்ளார். இது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் உங்களை ஆபத்தில் கூட சிக்க வைக்கும்.
எந்தெந்த தருணங்களில் மனதை கட்டுப்படுத்த வேண்டும்?
செல்வம் கரையும் போதும், மனதுக்குள் வருத்தம் ஏற்படும் போதும், மனைவியின் நடத்தை பற்றிய சந்தேகம், மோசமான ஒருவரிடமிருந்து சில தீய விஷயங்களைக் கேட்கும் போதோ அல்லது அவர்களால் அவமானப்படுத்தப்படும் போதோ, மனதில் தோன்றுவதை யாரிடமும் சொல்லக் கூடாது சாணக்கியர் கூறியுள்ளார்.
பணக்கஷ்டத்தை நெருங்கியவர்களிடம் கூற வேண்டாம்
வியாபாரம், வேலை, பரிவர்த்தனை போன்றவற்றில் பண நஷ்டம் ஏற்பட்டாலோ, உங்கள் பணத்தை யாராவது திருடினாலோ, அப்படிப்பட்ட விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது. அவர் எவ்வளவு நெருக்கமான நபராக இருந்தாலும் சரி.
உண்மையில், ஒரு நபர் பொருளாதாரரீதியாக பலவீனமாக இருக்கும்போது, அவரது நெருங்கிய நண்பர்கள் கூட அவரை ஆதரிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் யாரிடமாவது பணக்கஷ்டம் பற்றி சொன்னால், எதிரில் இருப்பவர்கள், நீங்கள் அவரிடம் உதவி கேட்க வந்ததாக நினைத்து உங்களை அவமதிப்பார்கள்.
உங்கள் மனக்கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள்
நீங்கள் மகிழ்ச்சியில்லாமல் இருக்கும்போது அல்லது எந்த வேலையும் செய்ய விரும்பாத நிலையில், அத்தகைய சூழ்நிலையைப் பற்றி நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. இல்லையேல் நஷ்டம் உங்களுக்குத்தான்.
மக்கள் உங்களைப் பற்றி அறிந்து உங்கள் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். எனவே சோகமான மனநிலையில் இருக்கும் போது உங்கள் மனதின் நிலைகளை யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது.
மனைவி மீது சந்தேகம் இருந்தால் பகிர வேண்டாம்
மனைவியைப் பற்றி சாணக்கியர் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியிருக்கிறார், ஒருவருக்கு தனது மனைவியின் குணாதிசயங்கள் அல்லது அவரது பழக்கவழக்கங்கள் பற்றி சந்தேகம் இருந்தால், இந்த விஷயத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
கணவன் அல்லது மனைவியின் குணாதிசயம் தொடர்பான விஷயங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால், சூழ்நிலைகளைக் கையாள்வது கடினமாகிவிடும். சமூகத்தின் மத்தியில் அமர்ந்திருக்கும் போது, ஒருவன் அவமானப்படுத்தப்படுகிறான், பல சமயங்களில் அவர் ஒரு பாவப்பட்டவராக பார்க்கப்படுகிறார்.
உங்களின் ஈகோ
சாணக்கியரின் கூற்றுப்படி, உங்கள் ஈகோ உங்களுடைய தன்னம்பிக்கையின்மையின் அடையாளமாகும். உங்களுடைய ஈகோவை பாதுகாக்க போராடுவது என்பது நீங்கள் உங்கள் நம்பிக்கைக் குறைவை ஈடுசெய்ய முயற்சிக்கிறீர்கள் என்பது தெளிவான அறிகுறியாகும். முடிந்தவரை உங்கள் ஈகோவை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
