Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 3 குணங்கள் இருப்பவர்கள் சின்ன வயசுலேயே பெரிய தொழிலதிபரா ஆகிருவங்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசில்வாதியும், பொருளாதார நிபுணரும் ஆவார். ஆச்சார்யா சாணக்கியர் தனது கொள்கைகளில் பணம், வணிகம், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கருத்துக்களை அடிக்கடி பகிர்ந்துள்ளார்.
சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தில் இதுபோன்ற பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, அதனை சரியாக பின்பற்றினால் வாழ்க்கையில் புகழை பெறுவதுடன் வெற்றியின் பாதையில் வேகமாக செல்லலாம்.

அதே நேரத்தில், சாணக்கியர் ஒருவரிடம் இருக்க வேண்டிய சில குணங்கள் பற்றி கூறியுள்ளார், இந்த குணங்கள் ஒருவரிடம் இருந்தால், அவர் தனது வேலை அல்லது தொழிலில் நிறைய முன்னேற்றம் அடைய முடியும் என்று கூறியுள்ளார். அந்த குணங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பது
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்க்கையில் தோல்வியை சந்திக்க ஒரு போதும் பயப்படக்கூடாது. பல நேரங்களில் வேலை அல்லது வியாபாரத்தில் ஒருவர் தவறான சுழல்களில் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால் அந்த நேரத்தில் சாதக பாதகங்களைப் பற்றி கவலைப்படாமல், தீவிரத்தன்மையை அடையாளம் காண சில ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம், அப்படிப்பட்டவர்கள்தான் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். மேலும் அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவார்கள்.
இலக்குகளை புரிந்து கொள்பவர்கள்
ஆச்சார்யா சாணக்கியர் சொல்வது போல், ஒரு நபர் தனது இலக்கை அறிந்தால் மட்டுமே எந்த ஒரு பணியிலும் வெற்றி பெற முடியும். அப்போதுதான் அவர் திட்டமிட்டபடி நடக்க முடியும். உங்கள் வேலையை எளிதாக்குவதும், சரியான நேரத்தில் முடிப்பதும் சாத்தியமாகும், நமது இலக்குகளை நாம் அறிந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும்.
விசுவாசம்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒவ்வொரு நபரும் தனது வேலைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் வேலையை கவனக்குறைவாக செய்தால், வெற்றிகரமான ஒரு வேலை கூட உங்கள் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
இது உங்கள் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மறுபுறம், நீங்கள் உங்கள் வணிகத்தில் அல்லது வேலையில் லாபம் சம்பாதிக்க விரும்பினால், உங்கள் வேலையில் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். இது சமூகத்தில் உங்கள் மரியாதையை அதிகரிக்கும்.
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, மேலே உள்ள 3 குணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம், ஒரு நபர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றியையும் முன்னேற்றத்தையும் அடைகிறார் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த குணங்களை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.



Click it and Unblock the Notifications
