Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்கள் இல்லாதவங்க வாழ்க்கையில் எப்பவும் ஜெயிக்க முடியாது... சீக்கிரம் கத்துக்கோங்க!
Chanakya Niti: வாழ்க்கையைப் பற்றிய சாணக்கியரின் கருத்துக்கள் நன்கு அறியப்பட்டவை. அதனால்தான் அவருடைய சாணக்கிய நீதி இன்றும் பிரபலமான நூலக இருக்கிறது. சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் எதையும் சாதிக்க முடியும் மற்றும் அவரது வாழ்க்கையை எளிதாக்க முடியும்.
சாணக்கிய நீதி என்பது பல்வேறு அனுபவங்களிலிருந்து சாணக்கியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பாகும். அதை விரிவாகப் பார்த்தால், நம் அன்றாட வாழ்கைக்குத் தேவையான பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

அனைவருமே சமூகத்தில் மரியாதை பெற விரும்புகிறார்கள். ஆனால் சில பழக்கவழக்கங்களால் அவர்கள் தங்கள் நற்பெயரை கெடுத்துக் கொள்கிறார்கள். அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. எனவே வாழ்க்கையில் சில விதிகளை கடைபிடிப்பது நல்லது. சாணக்கியரின் கூற்றுப்படி, சமூகத்தில் மரியாதையைத் தக்கவைக்க வாழ்க்கையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
இந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றால், நீங்கள் நிம்மதியாக வாழ முடியாது. சாணக்கியர் உங்கள் மரியாதையை அதிகரிக்கும் சில வழிகளை தனது சாணக்கிய நீதியில் கொடுத்துள்ளார். அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நல்ல நண்பர்கள்
சாணக்கிய நீ தியின் கூற்றுப்படி, ஒரு நபர் எப்போதும் சரியான நண்பர்களைப் பெற முயற்சிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் உங்கள் நண்பர்கள் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறார்கள். இதன் பலன்கள் மற்றும் விளைவு உங்கள் நடத்தை மற்றும் குணத்தில் தெரியும். தவறான நபர்களிடமிருந்து எப்போதும் விலகியே இருங்கள். நல்லவர்களுடன் பழகினால் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் நல்ல பலன் கிடைக்கும்.
நல்ல விஷயங்களை மட்டுமே பேசுவது
சாணக்கிய நீதியின் படி, ஒரு நபர் தனது பேச்சில் எப்போதும் எளிமையையும், பணிவையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுவார்கள். உங்கள் பேச்சு உங்கள் குணத்தையும், ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது. எனவே எப்போதும் இனிமையாக பேசுங்கள்.
தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
தங்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் வெற்றிகரமாகவும், நிம்மதியாகவும் இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒருவன் தன் தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டால், அவர் சமுதாயத்திற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார்.
பணிவு
ஒரு நபர் தனது நடத்தையில் எப்போதும் பணிவையும், கண்ணியதையும் கடைபிடிக்க வேண்டும். அத்தகையவர்கள் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார்கள். நல்ல நடத்தையைக் கடைப்பிடிப்பவர்கள் தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் தீர்க்க முடியும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவ மற்றவர்கள் எப்போதும் முன்வருவார்கள்.
ஞானம்
ஒருவரின் ஞானம் அவரின் மரியாதையை அதிகரிக்க உதவுகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் எப்போதும் தனது அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க ண்டும். ஞானமுள்ளவர்கள் சமூகத்தில் எப்போதும் மதிக்கப்படுவார்கள். எனவே அறிவைப் பெறுவதற்கான எந்த வாய்ப்பையும் தவற விடக்கூடாது.



Click it and Unblock the Notifications

