ஜூன் மாசம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படப் போகுது..

Career Horoscope For June 2023: ஜூன் மாதத்தில் நுழைந்துவிட்டோம். ஒவ்வொரு மாதத்தில் நுழையும் போதும், அந்த மாதத்தை நாம் ஒருவித தன்னம்பிக்கை மற்றும் இலக்குகளுடன் தொடங்குவோம். பலருக்கும் புதிய மாதத்தில் நுழையும் போது, அந்த மாதத்தில் தொழில் மற்றும் வியாபாரம் எப்படி இருக்கும் என்பதை பற்றிய கவலை இருக்கும்.

நீங்கள் 2023 ஜூன் மாதம் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

Career Horoscope For June 2023 In Tamil

ஏனெனில் கீழே கிரக நிலைகளைப் பொறுத்து, 12 ராசிக்காரர்களுக்கும் 2023 ஜூன் மாதம் தொழில் ரீதியாக எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது தொழில் ரீதியாக சற்று டென்சனாக இருக்கும். இம்மாதத்தில் பணிபுரிபவர்களால் வேலையில் சரியாக கவனத்தை செலுத்த முடியாமல் போகும். வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். புதிதாக ஒரு தொழிலைத் தொடங்கும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! பணிபுரிபவர்கள் ஜூன் மாதத்தில் கடினமாக உழைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். வணிகர்கள் இம்மாதத்தில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வேலை தொடர்பான பயணங்களால், முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. கார்மென்ட் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் நல்ல வெற்றியையும், லாபத்தையும் காணக்கூடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது வியாபாரிகளுக்கு அற்புதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொழலில் இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் இம்மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு பாழாக வாய்ப்புள்ளது.

கடகம்

கடக ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் கூட்டு தொழில் செய்பவர்கள், தங்கள் கூட்டாளருடன் நல்லுறவைப் பேண முயற்சிக்க வேண்டும். விவாதத்தைத் தவிர்க்க வேண்டும். இந்த மாதத்தில் பணிபுரிபவர்கள் கடினமாக உழைத்தால் பதவி உயர்வைப் பெறலாம். வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் இம்மாதம் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! ஜூன் மாதம் தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல வெற்றியைத் தரும் மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் அரசாங்கத்தால் நல்ல பலன்கன் கிடைக்கு. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதே சமயம் சம்பள உயர்வும் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு இந்த மாதத்தில் நல்ல லாபமும், முன்னேற்றமும் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் நல்ல பண பலன்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். கையில் நிறைய பணம் சேரும். பணிபுரிபவர்களுக்கு இந்த மாதமானது சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! ஜூன் மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும். வணிகர்களுக்கு இந்த மாதம் மூன்றாம் நபரின் உதவியால் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! ஜூன் மாதமானது தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும். அரசாங்கத்தால் நல்ல நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். அதோடு சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் மாத இறுதியில் சற்று எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் உங்கள் வேலையில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த மாதத்தில் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று நடந்து கொள்ளுங்கள். வியாபாரிகளின் திட்டங்கள் வெற்றி பெறுவதோடு, நல்ல லாபமும் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! ஜூன் மாதம் அலுவலக சூழல் சற்று பதற்றமாக இருக்கும். இருப்பினும், நீங்கள் உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த மாதத்தில் நிதி இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! ஜூன் மாதம் பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். அலுவலகத்தில் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இல்லாவிட்டால், அது பணியிடத்தில் உங்கள் நிலையை பாதிக்கும். வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதத்தில் அரசாங்கத்தால் நல்ல ஆதாயத்தைப் பெற வாய்ப்புள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் பணிபுரிவர்கள் அலுவலகத்தில் சகஊழியரின் முழு ஒத்துழைப்பைப் பெறுவார்கள். இதனால் அலுவலகத்தில் வேலைகள் அனைத்தும் சுலபமாக முடியும். வியாபாரிகள் மாத தொடக்கத்தில் எந்த ஒரு முக்கிய வேலைகளையும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் போக போக அந்த வேலைகளை செய்ய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் முன்பும், நிலைமையைப் புரிந்து செய்ய வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, June 1, 2023, 11:20 [IST]
Desktop Bottom Promotion