பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா?

2026 ஆம் ஆண்டின் முதல் பாதி கண்ணை மூடி திறப்பதற்குள் முடிந்து விட்டது. ஆண்டின் இரண்டாம் பாதி வேகமாக நகரத் தொடங்கிவிட்டது. எதிர்காலத்தைக் கணிப்பதற்கு புகழ்பெற்ற பாபா வாங்கா 2026 ஆம் ஆண்டுக்கான சில அதிர்ச்சியூட்டும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். கண்பார்வையற்றவரான இந்த பல்கேரிய தீர்க்கதரிசி, தனது தீர்க்கதரிசனங்களுக்காகப் பெரிதும் புகழ்பெற்றவராக விளங்குகிறார்.

Baba Vanga Shocking 2026 Predictions World War 3 Rise of AI Natural Disasters and Alien Visit

எதிர்காலத்தில் நடக்கப்போகும் முக்கிய உலக நிகழ்வுகள் குறித்த தரிசனங்களை அவர் பெற்றிருந்ததாக நம்பப்படுகிறது. பாபா வங்கா 2026 ஆம் ஆண்டில் உலகில் நிகழப்போகும் பல மாற்றங்களைக் குறித்து முன்னறிவித்ததாக, அவரை பின்பற்றுபவர்கள் கூறுகின்றனர். உலகப்போர் பற்றிய அவரது கணிப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கிட்டதட்ட நிறைவேறிவிட்டது. ஏனெனில் ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-அமெரிக்கா-ஈரான் போர் என பல போர்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் அவரது 2026 பற்றிய பல கணிப்புகள் உலகை மேலும் அச்சுறுத்தி வருகிறது. இந்த பதிவில் 2026-ல் நிகழப்போகும் சம்பவங்கள் குறித்து பாபா வாங்காவின் கணிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மூன்றாம் உலகப்போர் பற்றிய கணிப்பு

பாபா வாங்காவின் கூற்றுப்படி, ஒரு போர் கிழக்குப் பகுதியில் தொடங்கி மேற்குப் பகுதிக்கும் பரவும். இந்த போர் மேற்குலகை அழித்து, ரஷ்ய அதிபர் புதின் ஒரு உலகத் தலைவராக உருவெடுக்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் ஒரு வலிமைமிக்க ஆளுமையாக மாறி, 'உலகின் அதிபதியாக' உருவெடுப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாபா வாங்காவின் தீர்க்கதரிசனங்களை நம்புவோர், இந்தப் போர் மோதலின் முன்னணியில் புதின் இருப்பார் என்பதையும், அனைத்து அதிகாரங்களும் அவர் கையிலேயே குவிந்திருக்கும் என்பதையும் இந்த முன்னறிவிப்பு சூசகமாக உணர்த்துவதாகக் கருதுகின்றனர்.

ஏலியன்களுடனான தொடர்பு

பாபா வாங்கா, 2026-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வேற்றுகிரகவாசிகள் பூமியைத் தொடர்புகொள்வார்கள் என்றும் முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரை பின்தொடர்பவர்களின் கூற்றுப்படி, ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வின் போது வேற்றுகிரகவாசிகள் மனிதர்களைத் தொடர்புகொள்வார்கள் என்று அவர் கணித்திருந்தார். 2026-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, நவம்பர் 2026-ல் ஒரு பெரிய விண்கலம் பூமிக்கு வரும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். இதுவே, பூமிவாசிகளுக்கும் வேற்றுகிரகவாசிகளுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வத் தொடர்பாக இருக்கும் என்று அவர் கணித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் இயற்கைப் பேரழிவுகள்

பாபா வங்கா அவர்களின் கூற்றுப்படி, 2026-ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் உலகிற்குப் பெரும் அழிவை ஏற்படுத்தும். மேலும் வழக்கத்தை விட அதிகமான நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் நிகழும். இயற்கை சீற்றங்கள் பூமியின் நிலப்பரப்பில் 7 முதல் 8 சதவீதம் வரையிலான பகுதியை மாற்றியமைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இது சூழல் மண்டலங்களைப் பாதித்து, அது உலகையே உலுக்கும்.

செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம்

பாபா வாங்கா கணிப்பு படி, 2026-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் முடிவெடுக்கும் திறனை மாற்றியமைக்கத் தொடங்கும் என்றும், இது முக்கிய வேலைகளைப் பாதித்து, மக்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். இது தற்போதைய பிரச்சினைகளுக்கு ஏற்ப அமைந்திருந்தாலும், இது பெரும்பாலும் அவரது கூற்றுகளையே அடிப்படையாகக் கொண்டது.

ஆசியா உலக வல்லரசாக மாறலாம்

2026-ஆம் ஆண்டில், உலகளாவிய ஆதிக்கமானது ஆசியா அல்லது சீனாவை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் நகரும். இது எல்லை தொடர்பான சிக்கல்கள் அல்லது விரிவாக்கங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம் என்பது பரவலாக நிலவும் கணிப்பாகும். இதை மெய்ப்பிக்கும் வகையில் சீனா உலகளவில் முன்னெப்போதும் இருந்ததை விட சக்திவாய்ந்த நாடாக மாறிவருகிறது.

Story first published: Wednesday, June 3, 2026, 17:56 [IST]
Desktop Bottom Promotion