Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க.. இல்லன்னா பண பிரச்சனைகளை சந்திப்பீங்க...
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதில் வெள்ளிக்கிழமை மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. ஏனெனில் வெள்ளிக்கிழமையானது செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படும் லட்சுமி தேவிக்குரிய நாளாகும்.
இந்நாளில் லட்சுமி தேவியை வணங்கி, சிறப்பு பூஜைகளை செய்து வந்தால், லட்சுமி தேவியின் பரிபூர்ண அருளைப் பெறலாம். ஆனால் அதே சமயம் வெள்ளிக்கிழமை அன்று ஒருசில விஷயங்களை செய்யக்கூடாது. அப்படி செய்தால், அதன் விளைவாக லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

லட்சுமி தேவி ஒருவர் மீது கோபம் கொண்டால், அந்நபர் பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். எனவே உங்களிடம் செல்வம் பெருக வேண்டும் என்று விரும்பினால், வெள்ளிக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை செய்வதைத் தவிர்த்திடுங்கள்.
வீட்டை அசுத்தமாக வைத்திருப்பது
லட்சுமி தேவி தூய்மையான இடத்தில் வசிப்பவள். எனவே நீங்கள் உங்கள் வீட்டை வெள்ளிக்கிழமைகளில் அசுத்தமாக வைத்திருந்தால், லட்சுமி தேவி உங்கள் வீட்டில் குடியேறமாட்டாள். அதோடு, லட்சுமி தேவி வீட்டிற்கு வரும் நேரத்தில் வீடு அசுத்தமாக இருந்தால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். எனவே வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமானால், வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
கடன் வாங்குவதை அல்லது கொடுப்பதைத் தவிர்க்கவும்
வெள்ளிக்கிழமைகளில் பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். இந்த நாளில் கடன் வாங்குவது அல்லது கொடுப்பது நல்லதல்ல. ஒருவேளை கடன் வாங்கினாலோ அல்லது கொடுத்தாலோ, லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகி பண இழப்பை சந்திக்க நேரிடும்.
சர்க்கரையைக் கொடுக்கக்கூடாது
வெள்ளையான பொருட்களில் லட்சுமி தேவி இருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. அதுவும் சர்க்கரை, உப்பு போன்றவற்றில் லட்சுமி தேவி குடியிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே வெள்ளிக்கிழமையில் யாரேனும் உங்களிடம் வந்து சர்க்கரையை கேட்டால், அவர்களுக்கு கொடுக்காதீர்கள். அவ்வாறு கொடுத்தால், சுக்கிரன் வலுவிழப்பதோடு, வீட்டில் வறுமையும் அதிகரிக்கும்.
அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்
இந்து மதத்தில் சைவ உணவுகளை மட்டுமே உண்ண அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இறைச்சிகளை அறவே தொடக்கூடாது. ஒருவேளை அவ்வாறு சாப்பிட்டால், வீட்டில் வறுமையும், பிரச்சனைகளும் அதிகரிக்கும். எனவே வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால், அசைவ உணவுகளை வெள்ளிக்கிழமைகளில் சாப்பிடாதீர்கள்.
கெட்ட வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம்
பொதுவாக எப்போதும் கெட்ட வார்த்தைகளை உபயோகிகக்கூடாது. அதுவும் வெள்ளிக்கிழமைகளில் கெட்ட வார்த்தைகளில் மற்றவர்களை திட்டுவதை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகி, பண பிரச்சனையை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
