Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
உங்களுக்கு திங்கட்கிழமை அதிர்ஷ்டமானதா இருக்கணுமா? அப்ப இத செய்யுங்க..
அனைவருமே அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற விரும்புவோம். அதற்காக எந்த விஷயங்களை செய்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும் என்பதை அறிந்து அவற்றை மேற்கொள்ள முயற்சிப்போம். ஒவ்வொரு நாள் தொடங்கும் போது, அந்நாள் சிறப்பாக, அதிர்ஷ்டமானதாக, வெற்றிகளைத் தரக்கூடிய நாளாக இருக்க வேண்டுமென ஆசைப்படுவோம்.
அதிர்ஷ்டமானது கடவுளின் கையில் உள்ளது. நமக்கு என்ன வேண்டும் என்பதை முதலில் நாம் தீர்மானித்து, அதற்கான முயற்சியை நம்பிக்கையுடன் எடுக்க வேண்டும். அப்படி முழு முயற்சியுடன் ஒருசெயலை செய்யும் போது, கடவுள் நல்வழியை காட்டுவார். வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி எந்த வேலையையும் செய்யக்கூடாது, ஒருவரது கடின உழைப்பு இருந்தால், நிச்சயம் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.

நாம் என்ன தான் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று வெளியே கூறிக் கொண்டாலும், இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்குமே ஜோதிடத்தில் ஒருவித நம்பிக்கை இருக்கும். குறிப்பாக ஜோதிடத்தில் செல்வத்தை அதிகரிக்கும் விஷயங்களை பலரும் பின்பற்றுவோம். அந்த வகையில் ஜோதிடத்தில் திங்கட்கிழமையில் அதிர்ஷ்டத்தை ஈர்க்க செய்ய வேண்டி சில விஷயங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்பதை இப்போது காண்போம்.
* திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. எனவே திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு காலையில் எழுந்ததும் நீரால் அபிஷேகம் செய்தால், சிவனின் அருளைப் பெறலாம்.
* திங்கட்கிழமையானது புதிய நிதி அல்லது வியாபார செயல்பாடுகளில் ஈடுபட சிறந்த நாளாகும். இதனால் நல்ல வெற்றி கிடைக்கும்.
* திங்கட்கிழமைகளில் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கொண்டு எந்த செயலை செய்தாலும், அது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
* திங்கட்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளை அணிவதோ அல்லது கருப்பு நிற ஷூக்களை அணிவதையோ தவிர்க்க வேண்டும்.
* ஒரு நல்ல காரியத்திற்கு வீட்டில் இருந்து செல்லும் முன், ஒரு டம்ளர் பாலைக் குடித்து விட்டு சென்றால், அந்த காரியம் தடையின்றி வெற்றிகரமாக நடைபெறும்.
* அதேப் போல் தேன் மற்றும் வெள்ளரிக்காயை உட்கொள்வதும் திங்கட்கிழமைகளில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
* திங்கட்கிழமைகளில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, உங்கள் முகத்தை கண்ணாடியை பார்த்து விட்டு செல்வதும், உங்களுக்கு நல்ல வெற்றியைத் தரும்.
* திங்கட்கிழமைகளில் முத்து மோதிரங்களை அணிவது வாழ்வில் பணம், அமைதி மற்றும் வளர்ச்சியைக் காண உதவி புரியும். இந்த முத்து மோதிரத்தின் சக்தியை அதிகரிக்க லட்சுமி மந்திரங்களை சொல்ல வேண்டும்.
* உங்கள் ஜாதகத்தில் சந்திரன் மோமான நிலையில் இருந்தால், திங்கட்கிழமைகளில் சிவலிங்கத்திற்கு பால், வில்வ இலைகளால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
* குடும்பத்தில் அதிக பிரச்சனைகளைக் கொண்டவர்கள், திங்கட்கிழமைகளில் ஏதாவது ஒரு மாவை வீட்டிற்கு வாங்குங்கள்.
* வாழ்வில் சந்திரனால் சந்திக்கும் மோசமான தாக்கத்தைக் குறைக்க, இல்லாதவர்களுக்கு தானம் செய்யுங்கள். இது நல்ல பலனைத் தரும்.



Click it and Unblock the Notifications











