Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு வந்த வாய்பிளக்க வைக்கும் ஆடம்பர பரிசுகள் என்னென்ன தெரியுமா?
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்-ன் திருமணம் உலகமே வியக்கும் வண்ணம் ஜூலை 12, 2024 அன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது. மூன்று நாட்கள் நீடித்த திருமண விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து பதினான்காயிரம் பேர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் ஐந்து மாதகளுக்கு முன் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் திருமணம் அதைவிட பிரம்மாண்டமாக இப்போது நடந்து முடித்துள்ளது.
இந்த திருமணத்தில் நிகழ்ச்சி நடத்தியவர்கள், திருமணத்திற்கு வந்தவர்கள் என்று அனைவருக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் திருமணம் என்பது பரிசுகள் கொடுப்பது மட்டுமல்ல, வாங்குவதும்தான். திருமண கொண்டாட்டங்களுக்குப் பிறகு, தம்பதிகள் தங்கள் பெற்றோர் மற்றும் புகழ்பெற்ற விருந்தினர்களிடமிருந்து பெற்ற சில ஆடம்பரமான பரிசுகளைப் பெற்றுள்ளனர். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புதிதாக திருமணமான தம்பதியினருக்கு நடிகர் ஜாக்கி ஷெராஃப் அவரது ஸ்டைலில் பரிசாக வழங்கிய தாவரங்கள் அத்தகைய உறுதி செய்யப்பட்ட பரிசுகளில் ஒன்றாகும்.
ஆடம்பர வீடு
ஆனந்த் அம்பானியின் பெற்றோர், முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி புதுமணத் தம்பதிகளுக்கு பாம் ஜுமேராவில் 3,000 சதுர அடி பரப்பளவில் ஆடம்பரமான மாளிகை உட்பட சில ஆடம்பரமான பரிசுகளை வழங்கினர். இந்த ஆடம்பரமான வீட்டில் பத்து படுக்கையறைகள் மற்றும் ஒரு தனியார் கடற்கரை உள்ளது, மேலும் இதன் மதிப்பு ரூ. 640 கோடியாகும்.
கார் மற்றும் நகைகள்
ஆனந்த் ரூ.5.42 கோடி மதிப்புள்ள பென்ட்லி கான்டினென்டல் ஜிடிசி ஸ்பீடு காரையும், அவரது மனைவி ராதிகா பிரத்தேயேகமாக செய்யப்பட்ட நகைகளையும் பெற்றுள்ளார். 21.7 கோடி மதிப்புள்ள கார்டியர் ப்ரூச் மற்றும் 108 கோடி மதிப்புள்ள முத்து மற்றும் வைர சோக்கர் போன்ற பரிசுகளை முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியிடமிருந்து பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி, புகழ்பெற்ற சர்வதேச விருந்தினர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு வழக்கமான சைகையாக விலையுயர்ந்த சிலைகள் மற்றும் ஓவியங்களை பரிசாக அளித்ததாக கூறப்பட்டது.
தற்போது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வரும் வீடியோவின் அடிப்படையில், ஆனந்த் மற்றும் ராதிகா அவர்களின் திருமணத்தில் சர்வதேச விருந்தினர்களிடமிருந்து பெற்ற சில ஆடம்பரமான பரிசுகளின் பட்டியலை மேற்கொண்டு பார்க்கலாம்.
சர்வதேச விருந்தினர்களின் பரிசுகள்
அமேசான் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் அவர்களுக்கு ரூ. 11.50 கோடி மதிப்புள்ள புகாட்டியை பரிசாக வழங்கினார். அமெரிக்க நடிகரும், பிரபலமான மல்யுத்த வீரருமான ஜான் சினா அவர்களுக்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள லம்போர்கினியை பரிசாக வழங்கினார். ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களுக்கு ரூ. 300 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானத்தை அனுப்பினார் என்று அந்த பதிவு கூறுகிறது.
பில்கேட்ஸ் ரூ.9 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை பரிசாக அளித்ததாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், X இல் பகிரப்பட்ட மற்றொரு கிளிப், பில் கேட்ஸ் ஆனந்த் மற்றும் ராதிகா ஆகியோருக்கு 180 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான படகு ஒன்றை பரிசளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சுந்தர் பிச்சை ரூ.100 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டரை பரிசாக வழங்கினார். இவான்கா டிரம்ப் அவர்களுக்கு அமெரிக்காவில் ரூ. 80 கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான மாளிகையை வழங்கியுள்ளார்.
பாலிவுட் நடிகர்களின் பரிசுகள்
பாலிவுட் லைஃப் செய்தியின்படி, கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷால் புதுமணத் தம்பதிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பரிசாக அளித்துள்ளனர். மேலும் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் கையால் செய்யப்பட்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள சால்வயையும், அக்ஷய் குமார் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள தங்க பேனாவையும் பரிசாக வழங்கினார்.
இது தவிர, ஷாருக்கான் பிரான்சில் ரூ. 40 மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை பரிசளித்தார் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது. அதேசமயம் பச்சன்கள் ரூ. 30 கோடி மதிப்புள்ள மரகத நெக்பீஸை கொடுத்தனர். மேலும் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ரூ. 9 கோடிமதிப்புள்ள மெர்சிடிஸ் காரை பரிசாக அளித்தனர். இந்நிலையில், சல்மான் ரூ.15 கோடி மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசளித்தார். ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ரூ. 20 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காரை வழங்கியுள்ளனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.)



Click it and Unblock the Notifications
