Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
ஆடி அமாவாசையில் நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் அவசியம் என்னென்ன தெரியுமா?
Aadi Amavasai 2023: ஆடி மாதம் தெய்வீக சக்திகள் நிறைந்த மாதமாகும். அதிலும் ஆடி அமாவாசை மிகச் சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. ஜோதிட ரீதியாக பார்க்கும் போது அமாவாசை நாளில் சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இருக்கின்றனர்.
இதில் சூரியன் என்பது உங்கள் தந்தையையும் உங்கள் ஆன்மாவையும் குறிக்கிறது. இதில் சந்திரன் என்பது உங்கள் தாயையும் உங்கள் ஆவியையும் குறிக்கிறது. இந்த ஆடி அமாவாசை நாளில் சூரியன் தட்சிணாயனம் எனப்படும் தெற்கு திசையை நோக்கி நகர்கிறது. இந்த நேரம் தட்சிணாயனம புண்யகாலம் அல்லது தேவர்களின் இரவு நேரம் என்று அழைக்கப்படுகிறது.

அதனால் தான் இந்த ஆடி அமாவாசை நாளில் மத நம்பிக்கைகளின் படி, ஹோமம், பித்ரு பூஜை அல்லது ஷ்ரத்தா போன்ற சடங்குகளை மக்கள் செய்கின்றனர். நம் முன்னோர்களை இந்த நாளில் வழிபடுவதன் மூலம் என்ன நன்மை கிடைக்கும் அதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் விரிவாக காண்போம்.
ஆடி அமாவாசை கதை
நம்முடைய இந்து புனித நூலான மகாபாரதத்தின் படி, ஒவ்வொரு மனித ஆன்மாவும் பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணு போன்ற மூன்று முக்கிய கடவுள்களுக்கு கடன்பட்டது . அவற்றுள் ஒன்று பித்ருவின் அதாவது நம்முடைய மூதாதையர்களுக்கு கடன்பட்டது. அதனால் தான் அவர்களை நாம் நினைக்க வேண்டும். அதைத்தான் நாம் இந்த ஆடி அமாவாசை நாளில் செய்கிறோம்.
நம்முடைய கர்மாக்கும் மூதாதையர்களுக்கும் என்ன சம்பந்தம்?
உங்கள் மூளை உங்கள் அப்பா, அம்மா, பாட்டி, பெரிய பாட்டி அல்லது அவர்களின் முந்தைய தலைமுறையின் மூளையிலிருந்து வேறுபட்டதல்ல. நாம் ஒவ்வொருவரும் உயிரணு மரபணுக்களை மரபுரிமைகளாக பெற்றுள்ளோம். எனவே உங்கள் மூதாதையர்களின் ஆத்மாவின் மரபணுக்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.
எனவே நாம் ஒவ்வொருவரும் அவர்களின் எண்ணங்களை நினைத்துக் கொண்டே இருக்கிறோம். நம் மூதாதையர்களின் உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் மூலமே வாழ்கிறோம். இது உங்கள் கர்மாவை சேர்க்கிறது. எனவே உங்கள் எண்ணங்கள் மற்றும் கவலைகளை விட்டொழிப்பதன் மூலம் இந்த பூமியின் மீதுள்ள பற்றிலிருந்து விடுபடுகிறீர்கள்.
எனவே இந்த ஆடி அமாவாசை நாளில் மூதாதையர்களை வழிபடுவது உங்கள் கர்ம பாவங்களை போக்க உதவுகிறது. இந்த ஆடி அமாவாசை நாளில் மூதாதையர்களின் ஆன்மாக்கள் பூமிக்கு வருகை தருகின்றன என மக்கள் நம்புகின்றனர்.
எனவே தான் இந்த நாளில் அவர்களுக்கு திதி கொடுத்து நமது முன்னோர்களின் ஆன்மாக்களை கெளரவித்து நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் காண பல சடங்குகள் செய்யப்படுகிறது. உங்கள் கர்மாவில் இருந்து உங்கள் முன்னோர்கள் விலகிய பிறகு உங்களை ஆசிர்வதித்து அவர்கள் செல்வார்கள்.
நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் எங்கே நிம்மதியும் ஆனந்தமும் அடைகின்றன?
நம் பூமியில் இருந்து புறப்பட்ட ஒரு மனிதனின் பயணம் அவர் இறந்த பிறகு பித்ரி-யானாவின் இருண்ட பாதை வழியாக செல்கிறது. பிறகு பித்ருலோகத்திற்கு செல்கிறது. இறுதியாக சந்திரலோகத்தில் முடிவடைகிறது. முதலில் நம் மூதாதையர் ஆன்மாக்கள் பித்ருலோகத்திற்கு சென்று அவர்களுடைய கர்மாவைப் பொறுத்து ஆடி மாதத்தில் ஆறு மாதங்களில் சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்யும் போது ஆன்மா அதே பாதையில் தனது பயணத்தை மேற்கொண்டு பிறகு சந்திரனின் இருண்ட கட்டத்தை அடைகிறது. நம் முன்னோர்களின் ஆன்மா சந்திரனை அடைந்த பிறகு மகிழ்ச்சியிலும் அமைதியிலும் ஓய்வெடுப்பார்கள்.
ஆடி அமாவாசை பூஜை மற்றும் முன்னோர்களின் குறிப்புகள்
முன்னோர்களுக்கான திதியை சரியாக செய்வதன் மூலம் அது அவர்களின் துன்பங்களை குறைத்து அவர்களுக்கு மரியாதை மற்றும் மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இந்த திதி சடங்கு செய்வதற்கு முன்பு நிலத்தில் இருந்து தீய சக்திகளை விரட்ட வேண்டும் என்று வேத சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
தானியங்கள், பால் (ஒட்டகம், செம்மறி ஆடு, கோதுமை மற்றும் எருமை தவிர), தேன், பார்லி, கோதுமை, அரிசி, எள், பட்டாணி மற்றும் கடுக்காய் போன்ற வடிவங்களில் பிரசாதம் வழங்கப்படுகிறது. தானியங்கள் மற்றும் பிரசாதங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரானது எந்தவித துர்நாற்றமும் நுரையில்லாமலும் இருக்க வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன.
வீட்டில் ஆடி அமாவாசை பூஜையை எப்படி செய்ய வேண்டும்?
இந்த ஆடி அமாவாசை பூஜையை சிறப்பு பூசாரிகள் குறிப்பிட்ட புனித நதிகள் அல்லது நீர் நிலைகளில் இத்தகைய சடங்குகளை செய்கிறார்கள். ஆனால் இந்த சடங்குகளை நீங்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டு உள்ளன.
* முதலில் ஒரு டீஸ்பூன் கருப்பு எள் மற்றும் அரிசி, ஒரு நாணயம், சில சிறிய தர்பா புல் ஆகியவற்றை உங்கள் வலது கையின் உள்ளங்கையில் வைக்க வேண்டும்.
* பிரசாதத்தின் போது அதன் மீது சில துளிகள் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
* பிறகு அதை உங்கள் கையில் வைத்துக் கொண்டு மூதாதையர்களிடம் மனப்பூர்வமாக பிராத்தனை செய்ய வேண்டும். இதில் ஆறு தலைமுறையாக இறந்த மூதாதையர்களை உங்கள் தந்தையின் பக்கத்திலும், பின்னர் உங்கள் தாயின் பக்கத்திலும் வரும்படி, காணிக்கைகள் இட்டு அழைக்க வேண்டும். இப்பொழுது பிரசாதத்தின் மீது தண்ணீரை ஊற்றுங்கள்.
* உங்கள் மூதாதையர்களின் ஆன்மாக்கள் குணமடையவும், அமைதியாக இருக்கவும், பூமிக்குத் திரும்பாமல் இப்பிரபஞ்ச ஒளியைக் கடக்கவும் வேண்டிக் கொள்ளுங்கள்.
* அப்புறம் உங்கள் மூதாதையர்களின் ஆசியை உங்களுக்கு அனுப்பும்படி கேளுங்கள்.
* இறுதியாக பிரசாதத்தை முழுமையாக கழுவ மீதமுள்ள தண்ணீரை ஊற்ற வேண்டும்.



Click it and Unblock the Notifications











