Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போன கிணறு!
இயற்கை கோபம் அடையும் போது அதனால் ஒரு சிறு விசயத்தை மட்டுமே செய்ய முடியும். இயற்கை அழிவின் கோபத்தில் இருந்து யாராலும் தப்ப முடியாது. மனிதர்களால் இயற்கையின் சக்தியை தடுக்க முடியாது என்பதற்கேற்ப, இது மிகவும் பயமுறுத்தக்கூடிய ஒன்று.
கிணறே தண்ணீருக்குள் மூழ்கும் அது போன்ற ஒரு இயற்கை அழிவு தான் வீடியோவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நொடிகளில் மொத்த கிணறும் இருக்கும் இடம் தெரியாமல் மூழ்குவது, இயற்கையின் கோபம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
அந்த வீடியோவில் பதிவான ஒட்டுமொத்த நிகழ்வுகள் பற்றிய நிறைய தகவல்கள் இதோ உங்களுக்காக!

முழுவதும் தண்ணீர் நிரம்பிய கிணறு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அப்படியே பூமிக்குள் மூழ்கியது நிச்சயம் ஒரு திகிலூட்டும் நிகழ்வு தான்.
இன்னும் சில நிமிடங்களில் அந்த கிணறு பூமிக்குள் புதையப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதை கண்ட மக்கள் அந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் வீடியோ எடுக்கத் துவங்கினர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில், வட்ட வடிவ கான்கிரீட் கிணறு அப்படியே பூமிக்குள் தகர்ந்து, அதற்குள் இருந்த தண்ணீரில் மறைந்து போனது.
நமக்கு கிடைத்த அறிக்கையின் படி, இந்த நிகழ்வானது தென்னிந்தியாவில் உள்ள வயநாடு மாவட்டத்தின் அம்புகுதி கிராமத்தில் நிகழ்ந்து. அந்த பகுதியின் முக்கியமான பிரபல அடையாளமாக திகழ்ந்த அந்த கிணறு, மிகவும் பழமையான ஒன்று. மக்கள் அக்கிணறை பாசத்துடன் 'முதாசி கிணர்' என்று அழைந்து வந்தனர். 'முதாசி கிணர்' என்பதற்கு பாட்டியின் கிணறு என்று பொருள்.
அதிகளவு பெய்த பருவமழையின் காரணமாகவே கிணறு பூமிக்குள் புதைந்து போனதாக அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். அச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், கிணற்றில் இருந்து வித்தியாசமான சப்தம் வெளிவரத் துவங்கியதை அடுத்து மக்கள் அங்கு கூட துவங்கினர். அதிக மக்கள் கிணற்றின் அருகில் குழுமியிருந்த சமயத்தில், அவர்களின் கண் எதிரே கிணறு பூமிக்குள் புதைந்தது என்கின்றனர்.
கனமழையின் காரணயாக பழைய கிணறுகள் பூமிக்கும் புதைவது என்பது அரிய நிகழ்வு இல்லை என்றாலும், அதை கேமராவில் படம் பிடித்தது மிகவும் அரிதான நிகழ்வு.



Click it and Unblock the Notifications
