Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கில் க்யூட்டாக வந்த நடிகை அலியா பட்!!!
அனைவரும் எதிர்பார்த்திருந்த வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக் 2014 தொடங்கிவிட்டது. இந்த ஃபேஷன் வீக்கில் வசந்தகாலம் மற்றும் கோடைகாலத்தில் அணியக்கூடியவாறான பல புதிய ஆடைகளை ஃபேஷன் டிசைனர்கள் வெளியிடுகின்றனர். இந்த ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் மசாபா குப்தா என்னும் டிசைனர் வடிவமைத்த ஆடைகள் வெளியிடப்பட்டன.
பெரும்பாலான பாலிவுட் பிரபலங்களுக்கு பிடித்த ஒரு டிசைனர் தான் மசாபா குப்தா. மசாபா குப்தா தான் வடிவமைத்த ஆடைக்கு சிறு வயதிலிருந்தே தோழியாக இருந்த பாலிவுட் நடிகையான அலியா பட்டை ஷோ ஸ்டாப்பராக அழைத்திருந்தார். அந்த ஷோவில் மசாபா குப்தா வசந்தகால மற்றும் கோடைகால கலெக்ஷன்களாக வெல்வெட், ஷீர் கொண்ட ஆடைகளை டிசைன் செய்து வெளியிட்டுள்ளார்.
இப்போது வில்ஸ் ஃபேஷன் வீக் 2014 ஆம் ஆண்டில் மசாபா குப்தாவின் ஆடைகள் உங்கள் பார்வைக்காக...

அலியா பட்
அலியா பட் பிங்க் நிற நீளமான ப்ரில் கொண்ட கவுன் அணிந்து ராம்ப் வாக் நடந்தார். இதில் அலியா பட் மிகவும் க்யூட்டாக, உடைக்கு தகுந்த பிங்க் நிற ஹை ஹீல்ஸ் போட்டு வந்திருந்தார்.

கட் மேக்ஸிஸ்
இது தான் ஸ்ட்ராப்லெஸ் மேக்ஸி கவுன். இது கோடையில் அணிவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மசாபா பிரிண்ட்
மசாபா குப்தா, இவரது கோடைகால கலெக்ஷன் உடையில் ட்ரேடு மார்க் பிரிண்ட் போட்டு, ஆடைக்கு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்துள்ளார்.

குட்டை பாவாடை
கோடையில் இறுக்கமான ஆடைகளை அணிய முடியாது என்பதற்காக, மசாபா குப்தா தளர்வான மேலாடையையும், பிரிண்ட் போட்ட வெள்ளை நிற பாவாடையையும் வடிவமைத்துள்ளார்.

நீளமான ஸ்கர்ட்
இது தான் ட்ரேடு மார்க் மசாபா பிரிண்ட் போட்ட டீப் கட் கொண்ட நீளமான ஸ்கர்ட்.

ஷீர் கவுன்
வில்ஸ் ஃபேஷன் ஷோவில், வெள்ளை நிற உடையின் முனைகளில் பிரிண்ட் பார்டர் மற்றும் முழங்காலுக்கு கீழே ஷீர் கொண்ட வித்தியாசமான கவுனை மசாபா குப்தா வெளியிட்டார்.

கோதிக் பிரிண்ட்
இந்த கருப்பு நிற உடை கோதிக் பாணியில் உள்ளது. மேலும் முழங்காலுக்கு கீழே ஷீர் உள்ள அருமையான தோற்றத்தைத் தருகிறது.

மோனோக்ரோம் பிரிண்ட்
மசாபா கலெக்ஷன்களில் மோனோக்ரோம் பிரிண்ட் போடப்பட்ட உடை மிகவும் ஸ்டைலாக உள்ளது.

மோனோக்ரோம் ஜாக்கெட் மற்றும் சிவப்பு புடவை
புடவையை வித்தியாசமாக கட்ட நினைத்தால், மசாபா வெளியிட்ட இந்த மோனோக்ரோம் ஜாக்கெட் மற்றும் ப்ளைன் சிவப்பு நிற புடவையை அணிந்துக் கொள்ளுங்கள்.

மசாபா டிசைனர்
இது ஃபேஷன் ஷோவின் இறுதியில் மசாபா குப்தா, தன் தோழியான நடிகை அலியா பட்டுடன் ராம்ப் வாக் நடந்த போது எடுத்தது.



Click it and Unblock the Notifications