Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
சிமா விருது விழாவில் கலந்து கொண்ட கோலிவுட் பிரபலங்கள்!!!
தென்னிந்திய திரையுலகினர்களை கௌரவிக்கும் வகையில், தென்னிந்தியாவில் உள்ள நடிகர், நடிகைகள், திரைப்படம் மற்றும் பல துறைகளில் மிகவும் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து, சர்வதேச அளவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் விழா தான் தென்னிந்திய சர்வதேச விருது விழா. இந்த விழாவில் விருதுகளைப் பெறுவதற்கு பல நடிகர், நடிகைகள் மிகவும் அழகான உடையில் வருவார்கள். அப்படி இந்த வருடம் துபாயில் தென்னிந்திய சர்வதேச விருது விழா நடந்தது.
இந்த விழா விருதுகளில் மட்டும் சிறந்தவையாக இல்லாமல், ஃபேஷனிலும் சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் இந்த வருடம் தென்னிந்திய நடிகைகள் பலர் விழாவின் சிவப்பு கம்பளத்தில் அழகாகவும், அனைவரது கண்களையும் கவரும் வகையில் பல அழகான உடைகளில் வந்திருந்தனர்.
அதில் த்ரிஷா, ஸ்ருதிஹாசன், அசின், ஸ்ரேயா மற்றும் பல தென்னிந்திய நடிகைகள் வந்திருந்தனர். இப்போது அந்த தென்னிந்திய விருது விழாவில் கலக்கலாக வந்திருந்த சில கோலிவுட் நடிகைகளின் படங்கள் உங்கள் பார்வைக்காக....

ஸ்ருதிஹாசன்
இந்த விழாவிற்கு கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் ஷீர் கவுனில் வந்திருந்தார்.

ஸ்ரேயா சரண்
சிம்ரனுக்கு பின் தனது இடுப்பால் அனைவரையும் கவர்ந்த ஸ்ரேயா சரண், ஆரஞ்சு நிற நீளமான கவுனில், மிகவும் அழகாக வந்திருந்தார்.

அசின்
அசின் என்ன தான் பாலிவுட்டுக்கு சென்றாலும், விருது விழாவிற்கு பாரம்பரிய உடையான புடவையில் வந்தார். அதிலும் கோல்டன் வேலைபாடுகள் கொண்ட அடர் பிங்க் நிற புடவையில் வந்திருந்தார்.

த்ரிஷா
த்ரிஷா கருப்பு நிற பஃப் ஸ்லீவ் கொண்ட உடையில், வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தார்.

ஏமி ஜாக்சன்
ஏமி ஜாக்சன் வெந்தய நிற புடவையில், மிகவும் க்யூட்டாக வந்திருந்தார்.

ஜனனி ஐயர்
நடிகை ஜனனி ஐயர் நியான் ப்ளூ புடவையில் வந்திருந்தார்.

ப்ரியாமணி
வாயாடியான ப்ரியாமணி, கழுத்தில் லேஸ் கொண்ட கருப்பு நிற கவுனை அணிந்து, சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார்.

லட்சுமிமேனன்
தற்போது கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் லட்சுமிமேனன், சிமா விருது விழாவிற்கு ஸ்லீவ்லெஸ் கொண்ட பலவண்ண கவுனில் வந்திருந்தார்.

ஆன்ட்ரியா
நடிகையும், பாடகியுமான ஆன்ட்ரியா கருப்பு மற்றும் ஊதா கலந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனை அணிந்து விழாவில் பங்கு கொண்டார்.

ரீமா சென்
இவர் ரீமா சென் என்று சொன்னால் நம்பமுடியவில்லை தானே. அட நம்புங்கப்பா... இவர் தான் ரீமா சென். இவரும் சிமா விருது விழாவில் கலந்து கொண்டார். அதிலும் க்ரீம் கலர் ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்து வந்திருந்தார்.

ப்ரனிதா
தமிழ் நடிகையான ப்ரனிதா, அடர் நீல ஒற்றை தோள்பட்டைக் கொண்ட நீளமான கவுனில் அழகாக வந்திருந்தார்.

ஹன்சிகா மோட்வானி
ப்ப்பபாபாபாபா... என்று சொல்லும் அளவில் ஹன்சிகா வந்திருந்தார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் சந்தன நிற நீளமான குர்தா டாப் அணிந்து, மெட்டாலிக் கற்கள் பதித்த ஷீர் ஸ்கர்ட் அணிந்து வந்திருந்தார். ஆனால் என்ன, இவரது ஹேர் ஸ்டைலை பார்த்தால் தான் பயமாக உள்ளது.

நித்யா மேனன்
மலையான நடிகையான நித்யா மேனன், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவரும் இந்த சிமா விருது விழாவிற்கு அனார்கலி அணிந்து, அதற்கு மேல் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட் போட்டு வந்திருந்தார்.

ரெஜினா
நடிகை ரெஜினா கெசண்ட்ரா, ஸ்லீவ்லெஸ் கொண்ட ஆரஞ்சு நிற நீளமான கவுனை அணிந்து, டக்கராக வந்திருந்தார்.

சௌகார் ஜானகி மற்றும் அம்பிகா
பழம்பெரும் நடிகைகளான சௌகார் ஜானகி மற்றும் அம்பிகா போன்றோரும், ஃபேஷனாக சுடிதாரில் வந்திருந்தனர்.



Click it and Unblock the Notifications
