Latest Updates
-
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?
உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா?
நிறைய மக்கள் மனிதர்கள் தான் மிகவும் புத்திசாலியானவர்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் மனிதர்களை விட மிருகங்கள் தான் மிகவும் புத்திசாலியானது. எதற்காக வீட்டில் செல்லமாக விலங்குகளை வளர்க்கின்றோம்? நாம் அழைத்தால் எதனால் அவை உடனே வருகின்றன?
ஏனெனில் அவையும் மிகவும் புத்திசாலியானது மற்றும் மதிப்பளிக்க தெரிந்தது. ஆனால் இந்த புத்திசாலித்தனம் ஒவ்வொரு மிருகத்திற்கு ஏற்றவாறும் மாறுபடும். இப்போது அந்த மிருகங்களில் சிலவற்றினை பார்ப்போமா!!!

மனிதக்குரங்கு
மனிதர்கள் குரங்குகளிலிருந்து தான் வந்தனர் என்பது உண்மை போலும். ஏனெனில் அந்த மனிதக்குரங்குகள் மிகவும் புத்திசாலியாக உள்ளது. மேலும் அது என்ன சொன்னாலும் விரைவில் புரிந்து கொண்டு, அதை சரியாக செய்யும். சில சமயங்களில் இந்த மனிதக்குரங்குகளுடன் மனிதர்கள் போட்டிப் போட்டால், இவை மனிதர்களையே தோற்கடித்துவிடும். அந்த அளவு இதன் புத்திக்கூர்மையுடன் உள்ளது.

டால்பின்
அனைவரையும் எளிதில் தன் குணத்தால் கவருவது தான் டால்பின். அதிலும் இவை மனிதர்களுக்கு மிகவும் பிடித்த விலங்குகளுள், நண்பர்கள் போன்று பழகுவதில் ஒன்றாக உள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருப்பது. மேலும் இவைகளுக்கு தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை தானாகவே எளிதில் சரிசெய்துவிடும் அளவு புத்திசாலித்தனம் உள்ளது. நிறைய ஆய்வில் புத்திசாலியான விலங்குகளில் நாம் பேசுவதை எளிதில் புரிந்து கொண்டு செயல்படுவதில் டால்பின் மிகவும் சிறந்தது என்று கூறப்படுகிறது.

பென்குயின்
பென்குயின்கள் ஒரு சுதந்திரப் பறவைகள். இது விரைவில் சொல்வதைப் புரிந்து கொள்வதில் சிறந்த பறவை. இவை பார்க்க மிகவும் அழகாக இருக்கும். மேலும் இதனிடம் எதைச் சொன்னாலும் அதை அப்படியே திருப்பிச் சொல்லும் திறன் கொண்டது. இதனிடம் வேறு எதைச் சொல்லிக் கொடுத்தாலும், விரைவில் பழகிக் கொள்ளும் திறமையுடையது.

எறும்பு
எறும்புகளும் புத்திசாலித்தனத்தில் குறைந்தது அல்ல. ஏனெனில் மனிதர்களுக்குக் கூட, எந்த ஒரு பாதையையும் சரியாக பயணிக்கத் தெரியாது. ஆனால் இவை எப்போதும் ஒரே நேரத்தில் தனக்குரிய உணவுகளை எடுத்துச் செல்லும் போது, மற்றவைகளுடனும் சரியாக தொடர்பு கொண்டு, நேரான பாதையையே சரியாக கடைப்பிடித்து செல்லும். மேலும் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், எளிதில் தப்பித்துக் கொள்ளும் புத்திசாலித்தனமான திறனைக் கொண்டது.

கிளி
'சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை' என்று சாதாரணமாக சொல்லவில்லை. ஆமாம், கிளியும் மிகவும் புத்திசாலியான ஒரு பறவை தான். அதிலும் அவைகளுக்கு மனிதர்களைப் போலவே குரலும் உண்டு. மேலும் அவை நாம் பேசுவதை கூர்மையாக கவனித்து, அதுவே பேசும் தன்மையும் கொண்டது. எதைச் சொல்லிக் கொடுத்தாலும், அதை நன்கு ஞாபகம் வைத்திருக்கும்.

யானை
யானையும் ஒரு வகையில் மனிதர்களைப் போல் தான். அதிலும் விலங்குகளில் மிகவும் சிறந்தது என்று சொல்லலாம். மேலும் இதற்கு நம்மாட்ல நம்பமுடியாத அளவு ஞாபக சக்தி கொண்டது. இதற்கும் மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளும் உள்ளது.

நாய்
நாய்கள் வீட்டில் வளர்க்கும் ஒரு சிறந்த புத்திசாலியான செல்லப்பிராணி. ஏனெனில் அவற்றிற்கு எதை சொல்லிக் கொடுத்தாலும், அதை நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது. மேலும் அவை மனிதர்களின் உணர்ச்சியை புரிந்து, அதற்கேற்ப நடக்கத் தெரிந்த ஒரு சிறந்த புத்திசாலியான விலங்கு. அதிலும் இவை மிகவும் நன்றியுள்ளது.
என்ன நண்பர்களே! உண்மையில் மேற்கூறிய விலங்குகள் அனைத்தும் புத்திசாலியானவை தானே? மேலும் உங்களுக்கு வேறு எந்த விலங்கு புத்திசாலியானது என்று தெரியுமோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications