Latest Updates
-
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 03 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கவலை அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்...! -
ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 04 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமாக இருக்கணும்.. -
30 ஆண்டுக்கு பின் உருவாகும் கேந்திர திரிகோண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது...!
தென்னாப்பிரிக்காவில் ஒரு தியாகச் சுடரான தில்லையாடி வள்ளியம்மையின் கதை!!
தென்னாப்பிரிக்காவில் பிறந்து காந்தியடிகளின் அறப்போராட்டத்தில் கலந்து தன்னுயிரை விட்ட தில்லையாடி வள்ளியம்மையின் கதை தான் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
இந்திய தேச விடுதலை வரலாற்றில், இந்தியாவில் நடைபெறாத, தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக நிகழாத ஒரு அறப்போராட்டத்தில், தன் உயிரை துச்சமென எண்ணி, மகாத்மா காந்தியடிகளின் உந்துவிசையாக, தென்னாபிரிக்காவில் அடிமைகளாக நடத்தப்பட்ட இந்தியரின் அவல நிலை கண்டு, மனம் கசிந்து அவர்கள் உரிமைக்காக காந்தியடிகள் அறப்போராட்ட அறைகூவல் விடுத்த உலகின் முதல் சத்தியாகிரகப் போரின் நாயகி அன்னை தில்லையாடி வள்ளியம்மை.
இளம்பருவம்
அம்மையின் பெற்றோர் தம் குடும்பச் சூழ்நிலையால், தென்னாப்பிரிக்கா சென்று அங்கு சிறு வணிகம் செய்து வந்தனர். அங்கு அவர்களுக்குப் பிறந்த வீரமங்கைதான் தில்லையாடி வள்ளியம்மை.
அந்தக் காலகட்டத்தில், வெள்ளையரின் பிடியில் இருந்த தென்னாப்பிரிக்காவில், நிறவெறியும் இனவெறியும் உச்சத்தில் இருந்தன. வைரச் சுரங்கங்களில் அந்த நாட்டின் பூர்வீகக்குடிகளான நீக்ரோ மக்களை, ஆங்கிலேயர்கள் அடக்கி, கூலித்தொழிலாளர்களாக்கினர்.
குறைந்த சம்பளத்தில் கடுமையான வேலை வாங்கிய தங்கள் முதலாளிகளுடன் அடிக்கடி சண்டையிட்டு சம்பளஉயர்வு கேட்டு போராடியதால், ஒரு காலகட்டத்தில், அவர்களுக்கு, நீக்ரோ இனமக்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு, வேறு அடிமைகளைத் தேடினர்.
அப்போதுதான் நம் தேசமக்களை தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்து வந்தனர். காலஇடைவெளி இல்லாமல், வைரச்சுரங்கங்களில் வேலை, குறைந்த உறக்கம் மற்றும் உணவு, அடி உதை, அவலமான குடியிருப்புகளில் மிகக் கடினமான அடிமை வாழ்க்கை, என்ற கொடுங்கோல் ஆட்சியின் சித்ரவதைக்கு நம் தேசத்தவர் ஆளாகினர்.

தென்னாப்பிரிக்காவிற்கு ஒரு விடிவெள்ளி:
அப்போதுதான் ஒரு வழக்கறிஞராக ஒரு நிறுவனத்துக்கு இந்தியாவிலிருந்து ஒரு புத்தொளி தென்னாபிரிக்கா வந்தது.
நிற வெறியின் உச்சத்தை கண்ணெதிரில் கண்டு மனம் கொந்தளித்தார் அவர்தான் இந்தியதேசத்தை ஆங்கிலேயரின் அரக்கப்பிடியில் இருந்து விடுவித்து, நம்மை யெல்லாம் இன்று விடுதலையின் பலனை அளவுக்கு அதிகமாக உணர வைத்துக்கொண்டிருக்கும் இந்திய தேசத்தின் தந்தை தென்னாப்பிரிக்க விடுதலையின் விடிவெள்ளி, அண்ணல் மகாத்மா காந்தியடிகள்.
கூலிகளாக, அடிமைகளாக, சக இந்தியன் நடத்தப்படும் நிலை கண்டு மனம் கசிந்து அவர்களுக்காகப் போராட எண்ணினார்.
அப்போது, வெள்ளையர்கள், இந்தியருக்கு அங்கே குடியிருக்க தலை வரி என்ற பெயரில் 3 வெள்ளி பணம் வரியாக வசூலிக்க உத்தரவு பிறப்பிக்க, காந்தியடிகள் அதை நிறுத்தத் தொடங்கிய போராட்டமே, முதல் சத்தியாகிரகப் போராட்டமானது.
அதன்விளைவாக ஒரு உடன்பாடு ஏற்பட்டு, அந்தக்கறுப்புச் சட்டத்தை ஓராண்டு நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர் வெள்ளையர்கள். எனினும், சிலநாட்களிலேயே வெள்ளையரின் வஞ்சக எண்ணம் வெளிப்பட்டது.
கிறித்துவ சடங்குகளின்படி பதிவு செய்தத் திருமணங்கள் மட்டுமே செல்லும் எனும் இனவெறி பிடித்த வெள்ளை அரசின் மதவெறி பிடித்த அரசாக, மதம் பிடித்தது. அதன்படி, இந்தியர் எல்லாம் மண உறவு குடும்ப அமைப்பை இழப்பர்.
பெரும் அட்டூழியமாக உருவெடுத்த வெள்ளையரின் அரக்கத்தனமான கறுப்புச் சட்டத்தைக் கண்டு காந்தியடிகள், மாபெரும் அகிம்சைப் போராட்டத்தை அறிவித்து, அந்தப்போராட்டத்தில், பெண்களையும் இணைத்துக்கொண்டார்.
பதினாறு வயது வள்ளியம்மை :
காந்தியடிகளின் போராட்டத்தில் ஆர்வம்கொண்ட பதினாறே வயது நிரம்பிய சிறுமியான அன்னை தில்லையாடிவள்ளியம்மை, இந்த மதஅடக்குமுறை சட்டத்தை எதிர்த்து, அகிம்சைப்போராட்டதிற்கு ஆதரவாகத் தானும் தன் அன்னையுடன் சத்யாகிரக பெண்கள் போர்ப்படையில் இணைந்துகொண்டார்.
பெண்கள் சத்தியாகிரகப் படை தடையை மீறிச்சென்றதாக டிரான்ஸ்வால் எனும் நகர எல்லையைக் கடந்தபோது வெள்ளையர்கள் கைது செய்து மூன்று மாதக்கடுங்காவல் தண்டனை அளித்து சிறைகளில் அடைத்தனர்.
உடல் நிலை கவலைக்கிடம் :
கடுமையான வேலைகள், உண்ணத்தகாத உணவு மற்றும் சுகாதார வசதிகளே அற்ற கொடுஞ்சிறையில், தான் கொண்ட இலட்சியத்திற்காக, தன்வேதனையை மறந்தாள் அன்னை. எனினும் இளவயது உடல் இந்த நிலையைத் தாங்கமுடியாமல் காய்ச்சல் வந்தது. மிகக்கடுமையான காய்ச்சல், தகுந்த மருத்துவ வசதிகளின்றி, வாடினார்.
அபராதம் கட்டிவிட்டு வெளியேறுக, என வெள்ளையர் உத்தரவிட்ட நிலையிலும், கொண்ட கொள்கையில் திடமாக இருந்து, மாண்டாலும் இங்கேயே மாள்வேனே தவிர, மண்டியிட்டு வெளியில் செல்லமாட்டேன் எனக் கர்ஜித்தார். அந்நிலையில், அவர் உடல்நிலை மிக மோசமானது. சிறையில் அவர் மாண்டால், மிகப்பெரும் கலவரம் மூளும் என அஞ்சிய பறங்கியர் நிர்வாகம் அவரை விடுதலை செய்தது.
எழுந்து நடக்கக்கூட தெம்பின்றி இருந்த அவரை, காந்தியடிகள் மற்றொருவருடன் இணைந்து குழந்தைகளைத் தூளி கட்டி தூக்கிச் செல்வது போல, ஒரு போர்வையில் அவரைக்கிடத்தி, அவர் வீட்டுக்கு கொண்டுசென்றார்களாம். நினைத்தாலே நெஞ்சம் பதறும். பிழிந்த நாராக அன்னையைக் கண்ட அவர், மனம் கலங்கினார், என்னால்தானே உனக்கு இப்படி ஒரு நிலை..
இதனால் உனக்கு வருத்தம்தானே என்றபோது, அன்னை "நமது இந்தியப்பெண்களின் குடும்ப உறவுகளையே கொச்சைப்படுத்தும் ஆங்கிலேய அரசின் கருப்புச்சட்டத்தை எதிர்த்துப் போராடுவதில் எனக்கு மனவருத்தம் ஏதுமில்லை, இப்போது நீங்கள் அழைத்தாலும் நான் மீண்டும் போராட வருவேன் " என தீனக்குரலில் சொன்னதும், அண்ணலை மெய்சிலிர்க்க வைத்தது.
தன்னலம் கருதாமல், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக போராடிய, வீர மங்கையின் மறைவு, அவரை வெகுவாக பாதித்தது. "பலன் ஏதும் கருதாது, தென்னாப்பிரிக்கா அடிமைத்தனத்தை எதிர்த்து உயிரை தியாகம் செய்த தில்லையாடி வள்ளியம்மை, எனக்கு முதன் முதலில் விடுதலை வேட்கையை ஊட்டியவர்" என தன்னுடைய "சத்தியசோதனை" எனும் சுயசரிதை நூலில், புகழஞ்சலி செய்திருக்கிறார்.
அவர் ஜோகன்னஸ்பர்க்கில் அடக்கம் செய்யப்பட இடத்தில், காந்தியடிகள் நினைவு மண்டபம் அமைத்தார், அதனை தில்லையாடி வள்ளியம்மையின் நூற்றாண்டு விழா ஆண்டில், சீரமைத்து விழா எடுத்து, விடுதலைப்போரில் அன்னையின் பங்கை போற்றியவர் தென்னாப்பிரிக்க விடுதலை நாயகன் நெல்சன் மண்டேலா அவர்கள்.
வீரமங்கை அண்ணலின் உயிரைக் காத்தவளும் கூட:
சத்தியாகிரகப்போராட்ட சமயத்தில் காந்தியடிகளை ஒரு வெள்ளை வெறியன் துப்பாக்கியால் சுட குறிபார்த்தபோது, ஆவேசம்கொண்டு காந்தியடிகளின் முன் நின்று அவரை மறைத்துக்கொண்டு, தைரியம் இருந்தால் என்னைச்சுடு என்று வெள்ளையனையே, மிரண்டு ஓடச்செய்த வீரமங்கை.
அண்ணலுக்கு அவர்மேல் என்றும் மாறா அன்பு உண்டு. அது பல நேரங்களில் அண்ணலின் பேச்சில், எழுத்தில், வெளிப்பட்டிருக்கிறது. தியாக மங்கை தில்லையாடி வள்ளியம்மை தியாகத்தினால், ஆங்கிலேய இன வெறி அரசு தலை வரியை இரத்து செய்து, இந்தியருக்கு எதிரான கிறித்துவ முறை திருமணச் சட்டத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டதுதான், அவரின் தியாகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
மேலும் தாயகம் திரும்பிய காந்தியடிகள் அன்னை பிறந்த வீரமண்ணைக் காண விரும்பி, தமிழகம் வந்தவுடன் அவர் பிறந்த ஊரின் எல்லையில் இறங்கி, மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டது, அன்னையின் அழியாத தியாகத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்.
நம் இந்தியச்சிறுமியான தில்லையாடி வள்ளியம்மை இந்தியாவைக் காணாமலே, தன் பதினாறு வயதிலேயே, தென்னாப்பிரிக்காவில் இன வெறி அரசை எதிர்த்த சத்தியாகிரகப் போரில் தீரத்துடன் போராடி, அங்கேயே உயிர் நீத்தார்.
தில்லையாடி வள்ளியம்மையின் தியாக நினைவைப் போற்றி, அவர் பிறந்த ஊரான தில்லையாடியில் நினைவு மண்டபம், காந்தியடிகள் அங்கு மக்களிடம் உரையாடிய இடத்தில் நினைவுத்தூணும் அமைக்கப்பட்டு, ஒரு நூலகமும் செயல்பட்டுவருவது சிறப்பு.



Click it and Unblock the Notifications












