Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நீங்க சமைக்கும் உணவில் ருசி சேர்க்க வேண்டுமா? இந்த 5 விசேஷப் பொருட்கள் போடுங்கள்..!
நாம் செய்யும் சமையலை மிகவும் ருசியாக மாற்ற வேண்டுமா? அப்போ இந்த பொருட்களை வாங்கி உங்க சமையல் அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் சமைக்கும்போது தேவையாக உணவுகளில் இந்த பொருட்களில் ஏதேனும் ஒன்றை சிறிது கலந்துவிட்டால போதும். சும்மா சுவையாக இருக்கும்.. வாங்க அது என்னென்ன? பொருட்கள் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் ..
1. ஈஸ்ட்
புளிக்க வைத்து மென்மைத் தரும் ஈஸ்ட் உலர்ந்த பருவத்தில் விற்கப்படுகிறது. இதை வெதுவெதுப்பான நீரில் சிறிது சர்க்கரை கலந்து வைத்து ஐந்து நிமிடம் கழிந்ததும் நுரைத்துக் கொண்டிருக்கும். 3 கப் மைதாவுக்கு கால் டீஸ்பூன் ஈஸ்ட் என்ற விகிதத்தில் சேர்க்கலாம். ஈஸ்ட் கலந்த மாவை நான்கு மணி நேரம் கழிந்த பின் பார்த்தால் நன்கு எழும்பி ரொட்டி போன்று இருக்கும். இட்லி மாவு புளிக்காத போதும் சிறிது ஈஸ்ட் கலந்து வைத்தால் இட்லி மாவு பொங்கி நன்றாக இருக்கும். ஈஸ்ட் வெகு சில நாட்களில் அதனுடைய தன்மையை இழந்தவிடும். என்பதால் அதிக அளவில் வாங்கி சேமித்து வைக்ககூடாது.

2. சைனா கிராஸ்
வழவழப்பான தன்மை தரும் சைனா கிராஸ், அகர் ஜெலட்டின் போன்றவை கடல் பாசியிலிருந்து தயார் செய்யப்படுபவை. ஐஸ்கிரீம் மற்றும் பழ ஜெல்லிகள், புட்டிங் ஆகியவற்றில் உபயோகப்படுத்தலாம். இதையும் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளலாம். சர்க்கரையுடன் சேர்த்து அடித்து இதில் செய்யும் இனிப்பான ஜவ்வு மிட்டாய்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடவார்கள்..
3.சீஸ்
சீஸ் பொதுவாக பாலிலிருந்து எடுக்கப்படும். இது நல்ல ஊட்டச்சத்து உடையது. பலம் குறைவான குழந்தைகள் சீஸ் சாப்பிட்டால் ஊட்டம் நிறைந்தவர்களாக திகழ்வார்கள். பிரட் சூப் கிரேவி போன்றவற்றில் சேர்த்து அவற்றின் சுவையை கூட்டுவதற்கு உபயோகப்படுத்தலாம்.
4. வினிகர்
வினிகர் எப்பொதுமே புளிப்பு சுவை கொண்டது.. வெள்ளை நிறத்திலும் கருப்பு நிறத்திலும் கிடைக்கிறது. ஊறுகாய் வகைகள் தயாரிக்கும்போது தேவையான அளவு சேர்த்துக் கொண்டால் சீக்கிரம் கெடாது என்பதுடன் ருசியும் மாறுபடும். வினிகர் கலந்த நீர் கொண்டு பாத்திரம் துலக்க பளிச்சென்று இருக்கும். காய்கறி சாலட் செய்யும் போது ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்தால் காய்கறிகள் சுவையுடன் இருக்கும். ஆனால் வினிகர் அதிகம் உபயோகித்தால் உடல் நலம் பாதிக்கும் என்பதால் இரசாயன கலவையான வினிகரை குறைவாக பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது..
5. சோடா உப்பு
மாவுகளை புளிக்க வைக்க உதவும் ஓா் உலா் புளிப்பேற்றிதான் இந்த ஆப்பசோடா. இட்லி மாவு அல்லது பிசைந்த மாவு இவற்றோடு சமையல் சோடாவைச் சேர்க்கும்போது அமில-கார வினையை நிகழச்செய்து காா்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றச் செய்கிறது. இவ்வாறு காா்பன்-டை-ஆக்சைடு வாயு வெளியேறும் போது ஏற்படும் காற்றுக்குமிழ்களால் ஈர மாவு புளிப்பேற்றம் அடைந்து நொதித்தல் முறையில் மென்மையும் அடைகிறது. இது ஆப்பம், இட்லி, பஜ்ஜி மற்றும் பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து உபயோகபடுத்தாமல் இருபது நல்லது..



Click it and Unblock the Notifications