Latest Updates
-
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும்
வாஸ்துப்படி வேப்ப மரத்தை வீட்டின் எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும் தெரியுமா?
Vastu Tips in Tamil: நம் அனைவருக்குமே வீட்டைச் சுற்றி பல அழகான மற்றும் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்களை வழங்கும் செடிகள் மற்றும் மரங்களை வளர்க்க விரும்புவோம்.
வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தால் ஒரு நல்ல நிழல் கிடைப்பதைத் தவிர, நம்மைச் சுற்றி நல்ல சுத்தமான காற்றினை நாம் பெறலாம். மரங்களில் வேப்ப மரம் நல்ல குளிர்ச்சியான காற்றினை வழங்கும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் வைக்க வேண்டிய சிறந்த மரங்களில் வேப்ப மரமும் ஒன்று. ஜோதிடத்தில் வேப்பமரம் கேது மற்றும் சனியுடன் தொடர்புடையது. எனவே வீட்டில் வேப்பமரத்தை வளர்த்து வந்தால், அது இவ்விரு கிரகங்களையும் அமைதிப்படுத்தி, அந்த கிரகங்களால் சந்திக்கும் பிரச்சனைகளை குறைக்கும்.
இந்தியாவில் வேப்பமரம் துர்கை அம்மனின் வடிவமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட புனிதமான மரத்தை வீட்டில் வளர்க்க நினைப்பவர்கள், வாஸ்து சாஸ்திரம் கூறும் குறிப்புக்களை மனதில் கொண்டு வளர்த்து வந்தால் இன்னும் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். இப்போது வாஸ்துப்படி வேப்ப மரத்தை வீட்டில் வளர்க்க நினைப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் குறித்து காண்போம்.
* வாஸ்துப்படி, வேப்ப மரத்தை வீட்டில் வளர்க்க நினைத்தால், அதை வீட்டின் வடமேற்கு மூலையில் வைத்து வளர்க்க வேண்டும். ஒருவேளை வீட்டில் வாஸ்து குறைபாடுகள் நிறைய இருந்தால், சிறிது வேப்பிலைகளை அடிக்கடி எரிக்க வேண்டும்.
* வீட்டில் வேப்ப மரத்தை வைத்து வளர்த்து வந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் எப்போதும் நிரம்பியிருக்கும் மற்றும் எதிர்மறை ஆற்றல் விலகி விடும். இதனால் வீட்டில் உள்ளோர் தங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
* வாஸ்துப்படி வேப்ப மரத்தை வீட்டின் தெற்கு அல்லது வடமேற்கு மூலையில் வைத்து வளர்த்தால், ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்கும். அதுவும் வேப்ப மரத்தை வீட்டில் வளர்த்தால், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்.
* ஒருவரது வீடு தெற்கு நோக்கி இருந்தால், வீட்டு வாசலில் இருந்து இருமடங்கு தூரத்தில் வேப்பமரத்தை நடுவதால், தெற்கு திசையால் சந்திக்கும் தோஷங்கள் நீங்கும்.
* வீட்டின் வாசலில் வேப்ப மரத்தை வைத்தால், வீட்டினுள் பூச்சிகள், கொசுக்கள் போன்றவை அதிகம் வராது. வேப்ப மரத்தில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளால் பூச்சிகள் அனைத்தும் விலகி ஓடும்.
* தினமும் வேப்ப மரத்தை வணங்கினால், சனி தோஷம் நீங்கும். அதுவே வேப்பங்குச்சியைக் கொண்டு பற்களைத் துலக்கினால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும். இதனால் எவ்வித பல் மற்றும் ஈறு நோய்களும் ஏற்படாது.
* வீட்டின் தோட்டத்தில் வேப்பமரத்தை வைத்து வளர்த்து வந்தால், அது வீட்டில் அமைதியையும், மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதோடு, கடுமையாக நடந்து கொள்ளும் விதம் மாறும்.
* ஜாதகத்தில் ஒருவர் கேது தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், தினமும் குளிக்கும் நீரில் சிறிது வேப்பிலைகளைப் பறித்துப் போட்டு குளித்து வந்தால், கேதுவால் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.



Click it and Unblock the Notifications
