Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க
வாஸ்துப்படி, பாம்பு செடியை வீட்டின் எந்த இடத்தில் வைத்தால் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் தெரியுமா?
Vastu Tips In Tamil: வாஸ்துப்படி, செடிகளானது ஒருவரது வீட்டை அலங்கரிக்க பெரிதும் உதவுகின்றன. அதோடு செடிகள் நமக்கு நல்ல சுத்தமான காற்றினை வழங்குவதுடன், வீட்டில் மகிழ்ச்சியையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்க உதவுகின்றன.
வீட்டை அலங்கரிக்கும் பலவிதமான செடிகள் உள்ளன. அதே சமயம் அதிர்ஷ்டத்திற்காக வீட்டில் வளர்க்கக்கூடிய சில செடிகளும் உள்ளன. ஆனால் அந்த அதிர்ஷ்ட செடிகளை வீட்டில் சரியான இடத்தில், திசையில் வைத்தால் தான் முழு பலனைப் பெற முடியும். அதில் பலரும் அறிந்த ஒன்று தான் மணி பிளாண்ட். அதற்கு அடுத்தபடியாக வீட்டை அலங்கரிக்கவும், அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும் பாம்பு கற்றாழை செடி உதவுகிறது.

உங்கள் வீட்டிலும் பாம்பு செடி என்று அழைக்கப்படும் பாம்பு கற்றாழை செடி உள்ளதா? அப்படியானால் அதை சரியான திசையில் வைத்து வளர்த்து வாருங்கள். இப்போது வாஸ்துப்படி பாம்பு செடியை வீட்டின் எந்த இடத்தில், திசையில் வைக்க வேண்டும் மற்றும் பாம்பு செடியை வீட்டில் வளர்ப்பதால் பெறும் நன்மைகளை என்னவென்பதைக் காண்போம்.
பாம்பு செடிகளை எங்கு வைக்கலாம்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, அதிர்ஷ்டத்திற்காக பாம்பு செடியை வீட்டிற்கு வெளியேயும், உள்ளேயும் வளர்க்கலாம். ஆனால் பாம்பு செடியை சரியான இடத்தில் வைத்து வளர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். வாஸ்துவில் குளியலறை மற்றும் படுக்கை அறையில் வளர்க்க ஏற்ற செடியாக இது கருதப்படுகிறது. மேலும் இந் செடியை வீட்டின் ஹாலின் ஒரு மூலையிலும் வைத்து வளர்க்கலாம்.
வீட்டினுள் பாம்பு செடியை வளர்ப்பதாக இருந்தால், வீட்டிற்கு வருவோரின் கண்களில் படும்படி இருக்க வேண்டும். எப்போதும் இந்த செடியை மற்றவர்களின் பார்வையில் படாதவாறு வைக்கக்கூடாது. இப்படி மற்றவர்களின் பார்வையில் படும்படி வைக்கும் போது கண் திருஷ்டி நீங்கி, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகம் சுற்றும்.
பாம்பு செடியை வளர்க்க ஏற்ற திசை எது?
பாம்பு கற்றாழை செடியை வீட்டில் வளர்க்க விரும்பினால், அதை சரியான திசையில் வைக்க வேண்டும். அப்படி சரியான திசையில் வைக்கும் போது வீட்டில் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படுவதாக சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, பாம்பு செடியை வீட்டின் கிழக்கு, தெற்கு மற்றம் தென்கிழக்கு மூலையில் வைத்து வளர்க்கலாம். ஏனெனில் இந்த திசையில் இச்செடியை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
பாம்பு செடியை வீட்டில் வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை
* வீட்டில் பாம்பு செடியை வைப்பதாக இருந்தால், அவற்றை எப்போதும் மேசையின் மீதோ அல்லது வேறு ஏதாவது மேற்பரப்பிலோ வைக்கக்கூடாது. எப்போதும் தரையில் தான் வைக்க வேண்டும்.
* பாம்பு கற்றாழை செடியை வீட்டில் வைத்தால், அந்த செடியைச் சுற்றி வேறு எந்த செடியையும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலைத் தான் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
* நிறைய பேர் பாம்பு செடியை வீட்டில் வைத்தால், அது வறுமையைக் கொண்டு வரும், வீட்டின் அமைதியைக் கெடுக்கும் என்று நினைத்தாலும், வாஸ்துப்படி பாம்பு செடியை வீட்டில் வைத்தால், அது மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வருவதாக கூறுகிறது.
* வாஸ்துப்படி, பாம்பு செடியை வீட்டில் வைத்து வளர்த்தால், அது அந்த வீட்டில் உள்ளோருக்கு தொழிலில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களையும் கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications