Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வாஸ்துப்படி, வீட்டின் இந்த திசையில் சிவனின் போட்டோவை வைத்தால் பணத்திற்கு பஞ்சமே இருக்காது தெரியுமா?
Vastu Tips In Tamil: நிறைய பேருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும். இப்படி கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், தங்கள் வீட்டில் கடவுள்களின் போட்டோக்களை அதிகம் வைத்திருப்பார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் கடவுள்களின் போட்டோக்களை வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
அதுவும் இந்த வகையான போட்டோக்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகம் நிரம்பியிருக்கச் செய்து, வீடு மகிழ்ச்சியும், செல்வ செழிப்போடும் நிறைந்திருக்கும். நிறைய பேர் தங்களின் வீட்டில் விநாயகர் மற்றும் கிருஷ்ணரின் சிலைகளை வீட்டில் வைத்து பூஜை செய்வார்கள்.

ஆனால் சிவனின் சிலையையும் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். அதோடு சிவபெருமானின் போட்டோவை வீட்டில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானது. இந்து மதத்தில் சிவபெருமானுக்கு தனி இடம் உண்டு. சிவனின் அருளைப் பெற்றிருந்தால், எப்பேற்பட்ட சிரமங்களையும் சமாளித்து வாழ்வில் வெற்றி பெறக்கூடும் என்று கூறப்படுகிறது.
எனவே நீங்களும் சிவனின் அருளைப் பெற்று வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க நினைத்தால், சிவபெருமானின் போட்டோ அல்லது சிலையை வீட்டில் வையுங்கள். ஆனால் சிவனின் போட்டோவை வீட்டில் வைக்கும் முன் வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும். இப்போது இதுக்குறித்துக் காண்போம்.
இந்த வகையான சிவனை வைக்காதீர்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சிவனின் போட்டோவை வைக்க நினைத்தால், சிவன் கோபமான நிலையில் இருக்கும் போட்டோவை வைக்காதீர்கள். ஏனெனில் சிவனின் கோபமான நிலை அழிவைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட போட்டோவை வைத்தால், அது வீட்டில் உள்ள சந்தோஷம், அமைதி, செல்வம் போன்ற அனைத்திலும் தடையை ஏற்படுத்தும்.
எந்த மாதிரியான சிவனை வைக்கலாம்?
வீட்டில் சிவனின் போட்டோவை வைக்க விரும்பினால், மகிழ்ச்சியான நிலையில் உள்ள சிவனின் போட்டோவை மட்டும் வையுங்கள். இப்படி வைப்பதன் மூலம், வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நீடிக்கும். வாஸ்துப்படி, வீட்டில் சிவன் மட்டும் இருக்கும் போட்டோவை வைப்பதற்கு பதிலாக, சிவனுடன் பார்வதி, விநாயகர், முருகன் ஆகியோர் இருக்கும் குடும்ப போட்டோவை வையுங்கள். இது இன்னும் சிறப்பான பலனைத் தரும்.
சுத்தம் அவசியம்
வீட்டில் சிவபெருமானின் போட்டோ அல்லது சிலையை வைத்தால், அதை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூசிகள் மற்றும் அழுக்குகள் நிறைந்தவாறு சிவனின் போட்டோ அல்லது சிலையை வைத்திருந்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, நற்பலனுக்கு பதிலாக, கெடுபலனை அளிக்கும்.
எந்த திசையில் சிவனின் போட்டோவை வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சிவபெருமானின் போட்டோ அல்லது சிலையை வைப்பதாக இருந்தால், அதை வீட்டில் வடக்கு திசையில் தான் வைக்க வேண்டும். ஏனெனில் சிவபெருமான் குடியிருக்கும் கைலாய மலை வடக்கு திசையில் தான் அமைந்துள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications