Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வாஸ்துப்படி, வீட்டில் ஆந்தை சிலையை வைக்கலாமா? எங்கு வைக்கலாம்? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களுமே அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு பொருட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதில் ஒன்று தான் ஆந்தை சிலை.
ஆந்தையானது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் வாகனம். மேலும் நமது சமூகத்தில் ஆந்தை குறித்த பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. இந்து மதத்தை எடுத்துக் கொண்டால், ஆந்தை ஒருவருக்கு வரவுள்ள நல்லது, கெட்டதை முன்னரே கணிக்கக்கூடியதாக நம்பப்படுகிறது.

ஆந்தையானது ஒருவரது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சாஸ்திரங்களில் ஆந்தையானது மங்களகரமானதாக கருதப்பட்டாலும், பல இடங்களில் ஆந்தை அசுபமானதாக கருதப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது கண்ணில் ஆந்தை தென்பட்டால், அந்நபர் ஏராளமான பணத்தைப் பெற்று பணக்காரராகப் போகிறார் என்று அர்த்தம். அதோடு ஆந்தையின் சிலையை வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, செல்வம், முன்னேற்றம், மகிழ்ச்சி போன்றவை கிடைக்கும். இதுப்போன்று ஆந்தை குறித்த பல்வேறு விஷயங்கள் உள்ளன. இப்போது அதுக்குறித்து விரிவாக காண்போம்.
* ஆந்தை செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் வாகனமாகும். இந்த ஆந்தையை ஒருவர் கண்டால், அந்நபர் நிறைய பணத்தை பெறுவதாக சாஸ்திரம் கூறுகிறது.
* ஆந்தையானது நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை உரசினாலோ அல்லது அவரது தலைக்கு மேல் பறந்து சென்றாலோ, அவரது நோய் குணமாகும் என்பது நம்பிக்கை
* காலையில் எழுந்ததும் ஆந்தையை கிழக்கு திசையில் பார்த்தாலோ அல்லது அதன் குரலைக் கேட்டாலோ, திடீரென்று கையில் நிறைய பணம் சேரும் என்பது நம்பிக்கை.
* ஆந்தையை அவமரியாதை செய்பவர்கள் ஒருவிஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, ஆந்தை லட்சுமி தேவியின் வாகனம் மற்றும் ஆந்தையை ஒருவர் அவமரியாதை செய்தால், லட்சுமி தேவியை அவமரியாதை செய்வதற்கு சமம். இந்நிலையில் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகி மிகுந்த பண பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
* ஆந்தையை கண்டால் பலரும் பயப்படுவார்கள். ஏனெனில் ஆந்தை பார்ப்பதற்கு அச்சுறுத்தும் உருவத்தில் உள்ளது. ஆனால் உண்மையில், ஆந்தை மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வத்தின் அடையாளமாகும்.
* ஆந்தையின் சிலை அல்லது ஆந்தையின் போட்டோவை வீட்டில் வைக்கலாமா என்று பலரது மனதிலும் ஒரு கேள்வி இருக்கும். உண்மையில், ஆந்தை செல்வத்தின் ஒரு அடையாளமாக இருப்பதால், அதை வீட்டின் எந்த பகுதியில் வைத்தாலும், அது அந்த வீட்டின் நிதி நிலையை உயர்த்துவதோடு, வீட்டில் மகிழ்ச்சியை நிலைத்திருக்கச் செய்யும்.
* ஒருவரது வீட்டு கூரையின் மேல் அமர்ந்தாலோ அல்லது கூரையில் அமர்ந்து சப்தத்தை எழுப்பினானோ, அது அந்த வீட்டில் உள்ளவர் இறந்ததை அல்லது இறக்கப் போவதைக் குறிக்கிறது.
* இரவு நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தையை ஒருவர் பகல் நேரத்தில் காண்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அதாவது இது அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கவுள்ளது என்பதைக் குறிக்கிறது. அதோடு, இதுவரை வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வம் பெருகப் போகிறது என்பதையும் குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications