Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
வாஸ்துப்படி வீட்டில் விநாயகர் சிலையை எந்த இடத்தில், எந்த திசை நோக்கி வைக்க வேண்டும் தெரியுமா?
Vastu Tips In Tamil: ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டுமென தெய்வங்களின் போட்டோக்கள் மற்றும் சிலைகளை வாங்கி வைப்பதுண்டு. அதில் ஒன்று தான் விநாயகர் சிலை. முழுமுதற் கடவுளான விநாயகரின் சிலையை வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருப்பதோடு, அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.
இந்து புராணங்களின் படி, விநாயகர் மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறார். மேலும் விநாயகரின் போட்டோ அல்லது சிலைகளை வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் தீய சக்திகள் நுழையாமல் வீடு பாதுகாப்போடும், செல்வ செழிப்போடும் இருக்கும். விநாயகரின் போட்டோ மற்றும் சிலைகள் பெரும்பாலும் வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் தான் வைக்கப்படுகின்றன.

ஆனால் வாஸ்துப்படி, விநாயகர் சிலையை சரியான இடத்தில் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான், நற்பலனைப் பெற முடியும். தற்போது விநாயகர் சதுர்த்தி வரவுள்ளது. நிறைய பேர் தங்களின் வீடுகளில் விநாயகர் சிலையை வாங்கி வைக்க நினைக்கலாம். அப்படி வாங்குவதாக இருந்தால், வாஸ்துப்படி விநாயகர் சிலையை எந்த திசையில் வைக்க வேண்டும், எந்த நிற விநாயகரை வாங்க வேண்டும் என்பன போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த விநாயகர் சிலையை வீட்டு வாசலில் வைப்பது நல்லது?
விநாயகர் சிலை அல்லது படங்களை வீட்டில் வாங்கி வைக்க நினைக்கும் போது, முதலில் விநாயகரின் நிலையை கவனிக்க வேண்டும். பொதுவாக லலிதாசனத்தில் உள்ள விநாயகர் நிலை சிறந்ததாக கருதப்படுகிறது. அதாவது, அமர்ந்த நிலையில் உள்ள விநாயகரை வாங்குவது நல்லது. இந்த நிலை அமைதியைக் குறிக்கிறது. இது தவிர, சாய்ந்த நிலையில் உள்ள விநாயகர் சிலை அல்லது போட்டோவை வாங்கி வைக்கலாம். இது ஆடம்பரம், ஆறுதல் மற்றும் செல்வத்தைக் குறிக்கிறது மற்றும் இந்த நிலை விநாயகர் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது.
துதிக்கை திசை
வீட்டில் விநாயகர் சிலையை வைக்க நினைக்கும் போது, இரண்டாவதாக விநாயகரின் துதிக்கையின் நிலையை கவனிக்க வேண்டும். வாஸ்துப்படி, விநாயகரின் துதிக்கை இடது பக்கம் இருக்க வேண்டும். இது வெற்றி மற்றும் நேர்மறையைக் குறிக்கிறது. விநாயகரின் துதிக்கை வலது பக்கம் இருப்பது, கடினமான மனப்பான்மையைக் குறிக்கிறது.
எந்த இடத்தில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது?
வாஸ்துப்படி, விநாயகரை படுக்கை அறை, அழுக்கு துணி உள்ள இடம் மற்றும் குப்பை வைக்கும் இடங்களில் வைக்கக்கூடாது. அதோடு, மாடிப்படிக்கு அடியில் அல்லது கழிவறைக்கு அருகிலும் வைக்கக்கூடாது. இந்த பகுதிகளில் வைத்தால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கும்.
எந்த திசையில் விநாயகர் சிலையை வைக்க வேண்டும்?
வாஸ்துப்படி, விநாயகர் சிலை அல்லது போட்டோவை வைக்க சிறந்த திசை மேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகள் தான். அதுவும் விநாயகர் சிலைகளை வடக்கு திசையை பார்த்தவாறு வைப்பது இன்னமும் நல்லது. ஏனெனில் இந்த திசை விநாயகரின் தந்தையான சிவபெருமானுக்கு உரிய திசை. எக்காரணம் கொண்டும் விநாயகரை தெற்கு திசையை நோக்கி மட்டும் வைத்துவிடாதீர்கள்.
எந்த நிற விநாயகரை வீட்டில் வைக்கலாம்?
வாஸ்துப்படி, வெள்ளை நிற விநாயகரை வீட்டில் வைப்பது நல்லது. இந்த நிற விநாயகர் வீட்டில் அமைதியையும், செழிப்பையும் கொண்டு வருவார். சுய வளர்ச்சியை விரும்புபவர்கள் காவி நிற விநாயகரை வீட்டில் வைக்கலாம். முக்கியமாக விநாயகரின் பின்புறம் வீட்டின் வெளிப்புறத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
பணியிடத்தில் எந்த விநாயகரை வைக்கலாம்?
அலுவலகத்தில், வேலை செய்யும் மேஜையின் மேல் நின்ற நிலையில் உள்ள விநாயகரை வைப்பது நல்லது. இது வேலை செய்வதில் உற்சாகத்தை தருவதோடு, வேலையில் உள்ள தடைகளை நீக்கி, வெற்றி காண வைக்கும்.
விநாயகருக்கு எந்த மலர் பிடிக்கும்?
விநாயகருக்கு மிகவும் பிடித்த பூ என்றால் அது சிவப்பு செம்பருத்தி தான். இந்த செம்பருத்தி பூக்களை விநாயகருக்கு படைத்து வழிபட்டால் விநாயகரின் ஆசீயைப் பெறுவதோடு, வெற்றியையும் காணலாம்.
வீட்டில் இரண்டு விநாயகர் சிலைகளை வைக்கலாமா?
வீட்டில் இரண்டு விநாயகர் சிலைகளை அல்லது போட்டோக்களை வைக்கலாம். ஆனால் அதை வெவ்வேறு இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். ஒரே இடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கருப்பு விநாயகரை வீட்டில் வைக்கலாமா?
வீட்டில் கருப்பு நிற விநாயகரை வைக்கலாம். இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதோடு, வெற்றிகளும் குவியும். கருப்பு நிற விநாயகர் சிலை வலிமை, தெய்வீகத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.
நடனம் ஆடும் விநாயகரை வீட்டில் வைக்கலாமா?
வாஸ்துப்படி, நடனமாடும்படியான விநாயகர் சிலை அல்லது போட்டோவை தென்கிழக்கு திசையில் வைக்கலாம். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். படைப்பாற்றல் துறையில் வேலை செய்பவர்கள் இந்த மாதிரியான விநாயகரை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. இருப்பினும். இந்த வகை விநாயகரை வீட்டின் பூஜை அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
விநாயகரை மற்றவர்களுக்கு பரிசாக கொடுக்கலாமா?
விநாயகர் சிலை அல்லது போட்டோக்களை கிரக பிரவேசம் நடக்கும் வீடுகள் மற்றும் பிற மங்களகரமான நிகழ்வுகளின் போது பரிசாக வழங்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications