வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது..

Vastu Tips For Money In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஆகவே எந்த ஒரு பொருளை வீட்டில் வைப்பதாக இருந்தாலும், வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும். இப்படி வாஸ்து விதிகளின் படி வீட்டில் பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கி, நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரித்து, வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும்.

Vastu Tips Top 5 Vastu-Based Idols To Keep At Home To Increase Wealth

அதுவும் ஒரு வீட்டில் செல்வம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டுமானால் வாஸ்துவிற்கு உகந்த சில பொருட்களை வாங்கி வைப்பது சிறந்த வழி ஆகும். முக்கியமாக உங்களுக்கு வீட்டை அழகான சிலைகளால் அலங்கரிக்க பிடிக்குமானால், வாஸ்துப்படி சில சிலைகளை வாங்கி வைக்கும் போது, அது வீட்டில் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.

அதோடு இந்த வகையான சிலைகள் வீட்டில் பண பிரச்சனைகள் வராமல் தடுத்து, பண வரவை அதிகரிக்கும். முக்கியமாக இப்படியான சிலைகளை சரியான திசையில், சரியான இடத்தில் வைக்க வேண்டும். இப்போது வீட்டில் செல்வம் பெருக வாஸ்துப்படி எந்த சிலைகளை வாங்கி வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

1. ஆமை சிலை

வாஸ்துப்படி, வீட்டில் ஆமை சிலையை வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. அதுவும் இந்த சிலையை வீட்டில் சரியான இடத்தில் வைக்கும் போது, அது செல்வத்தை அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஆமை சிலையை வீட்டின் ஹாலில், குறிப்பாக கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். மேலும் இந்த சிலையானது வீட்டிற்குள் வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

2. ஜோடி அன்னப்பறவைகளின் சிலை

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஜோடி அன்னப்பறவைகளின் சிலையை வீட்டில் வைத்திருப்பதும் நல்லதாக கருதப்படுகிறது. திருமண வாழ்வில் உள்ள பிரச்சனையைப் போக்கவும், கணவன்-மனைவிக்கு இடையிலான அன்பை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் இந்த வகை சிலை உதவி புரிவதாக கூறப்படுகிறது. முக்கியமாக இந்த வகை சிலையை படுக்கை அறையில் வைப்பது நல்லது. மேலும் விருந்தினர் அறையிலும் இந்த வகை சிலையை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது குடும்பத்தின் நிதி நிலையை வலுப்படுத்துகிறது.

3. யானை சிலை

யானை செல்வத்தின் சின்னமாக கருதப்படுகிறது. எனவே இந்த யானையின் சிலையை வீட்டில் வைத்திருப்பது நல்லது. இதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருப்பதோடு, குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறையும். அதுவும் இந்த யானை சிலையானது வெள்ளி அல்லது பித்தளையால் ஆனதாக இருந்தால் இன்னும் நல்லது. இதில் வெள்ளியால் ஆன யானை சிலையை படுக்கை அறையில் வைத்தால், ராகு தொடர்பான தீய விளைவுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மொத்தத்தில் யானை சிலை வீட்டில் இருந்தால், குடும்ப பிரச்சனை, பணப் பிரச்சனை என அனைத்தில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

4. ஒட்டக சிலை

வாஸ்துப்படி, வீட்டில் ஒட்டக சிலையை வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த சிலை வீட்டில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், முன்னேற்றத்தைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த ஒட்டக சிலையை வீட்டின் ஹாலில் வைப்பது நல்லது. அதுவும் வடமேற்கு திசையில் வைப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. இப்படி வைக்கும் போது, அந்த வீட்டில் உள்ளோர் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள் மற்றும் வேலையில் உள்ள பிரச்சனைகள் தீரும். மேலும் தடைபட்ட திட்டங்கள் வெற்றிகரமாக நடக்கும்.

5. காமதேனு பசு சிலை

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் காமதேனு பசு சிலையை வைத்திருப்பது பல நன்மைகளைத் தருவதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த சிலையானது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, வீட்டில் உள்ளோரின் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் திறன் கொண்டது. முக்கியமாக பித்தளையால் ஆன காமதேனு சிலையை வைத்திருப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும் மற்றும் அதிர்ஷ்டம், வெற்றி, செழிப்பைக் கொண்டு வரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, October 13, 2026, 19:49 [IST]
Desktop Bottom Promotion