Latest Updates
-
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
கடன் அதிகமா இருக்கா? அப்ப ஒரு பௌலில் உப்பை எடுத்து வீட்டின் இந்த இடத்துல வையுங்க..
Vastu Tips For Debts In Tamil: அதிகரித்து வரும் மக்கள் தொகையால் நாம் பயன்படுத்தும் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. நல்ல சந்தோஷமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், அதற்கு பணம் மிகவும் இன்றியமையாது. ஏனெனில் தற்போது குடிக்கும் நீரைக் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் நமது தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக சம்பாதிக்கும் பணம் போதாமல் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தும் போது, ஒரு கட்டத்தில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல், கடன் சுமை அதிகரித்து, அதன் விளைவாக நிறைய பேரது வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக மாறிவிடுகிறது.

உங்கள் வாழ்க்கையும் இப்படி கடன் சுமை நிறைந்து உள்ளதா? கடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சந்தோஷமான வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்களா? அப்படியானால் வாஸ்து கூறும் சில விஷயங்களைப் பின்பற்றுங்கள்.
வாஸ்துப்படி, ஒருவர் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தாலோ அல்லது எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகம் இருந்தாலோ, அதன் விளைவான பண பற்றாக்குறை அதிகரித்து, கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே இந்த எதிர்மறை ஆற்றலை நீக்கி, கடன் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் சில வாஸ்து குறிப்புக்களைக் காண்போம்.
* கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுபட வேண்டுமானால், கடனாளி எப்போதும் தென்மேற்கு திசையில் உள்ள அறையில் தூங்க வேண்டும்.
* முக்கியமாக பணம், நகை போன்ற விலைமதிப்பான பொருட்களை படுக்கை அறையின் தென்மேற்கு பகுதியில் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் உள்ள பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம், அது வருமானத்தை அதிகரித்து, கடனைக் குறைக்க உதவும்.
* உங்கள் கடன் அதிகரிக்கிறது என்றால், வீட்டின் படுக்கை அறையில் வாஸ்து குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் படுக்கை அறையின் தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையில் கதவுகள் அல்லது ஜன்னல்கள் இருந்தால், இதை மூடி வையுங்கள்.
* வாஸ்துப்படி, வீட்டின் வடமேற்கு திசையானது பண வரவை அதிகரிக்கும் திசையாக கருதப்படுகிறது. எனவே நீங்கள் கடனால் அவதிப்பட்டு வந்தால், அந்த கடனில் இருந்து விடுபட, இந்த திசையில் ஒரு நீரூற்றை அமையுங்கள்.
* கடன் அதிகமாகி உங்கள் வீட்டை விற்க வேண்டிய அளவிலான சூழலைத் தவிர்க்க வேண்டுமானால், வீட்டின் தென்மேற்கு மண்டலத்தை சற்று உயரமாக கட்டுங்கள். இப்படி கட்டும் போது, அது கடனில் இருந்து வீட்டைப் பாதுகாக்கும்.
* வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசைகளில் எந்த ஒரு கனமான பொருட்களை வைப்பதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டின் கடனை அதிகரிப்பதோடு, அந்த வீட்டில் உள்ளோர் பெரிய நஷ்டத்ரைத சந்திக்க நேரிடும்.
* கடன் தொல்லை அதிகமாகி, அதை அடைக்க முடியாமல் அவதிப்பட்டால், ஒரு பௌலில் கல் உப்பை நிரப்பி, அதை வீட்டின் குளியலறையில் வையுங்கள். இப்படி வைக்கும் போது, கடனில் இருந்து விடுபடுவதற்கான வழி திறக்கும்.
* நீங்கள் கடனை வாங்கி, அந்த கடன் பணத்தை திரும்ப செலுத்துவதாக இருந்தால், எப்போதும் கடன் தொகையை செவ்வாய் கிழமைகளில் கொடுங்கள். இப்படி செய்யும் போது கடன் வேகமாக குறையும்.
* வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகம் இருந்தால் தான், அந்த வீட்டில் உள்ளோர் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். வீட்டில் நேர்மறை ஆற்றலையும், செழிப்பையும் அதிகரிக்க, கண்ணாடியை வடகிழக்கு திசையில் வையுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications