Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
உங்க வீட்டுல பணம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இத வீட்டுல வாங்கி வையுங்க.. தானா நடக்கும்..
Vastu Tips In Tamil: நாம் அனைவருமே பணம் சம்பாதிப்பதற்காக தான் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சம்பாதிக்கும் பணம் வீட்டி சேராமல், வீண் செலவாகிக் கொண்டிருந்தால், நிச்சயம் அது கஷ்டமாகத் தான் இருக்கும்.
சில சமயங்களில் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதிர்ஷ்டத்தின் ஆதரவு இல்லாததால் அதன் பலன் கிடைக்காமல் இருக்கும். உங்களுக்கும் இந்நிலை தானா? அப்படியானால் உங்கள் வீட்டில் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சில விஷயங்கள் அல்லது அடையாளங்களை வாங்கி வையுங்கள்.

வாஸ்துவில் அடையாளங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அதுவும் இந்த அடையாளங்கள் வீட்டினுள் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வீட்டில் உள்ளோர் தங்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பதோடு, வீட்டின் நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும்.
இப்போது வாஸ்துப்படி, எந்த பொருட்கள் வீட்டில் இருந்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும் என்பது குறித்து காண்போம். உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இல்லாவிட்டால் உடனே வாங்கி வைத்து, நன்மை பெறுங்கள்.
1. மீன்
மீன்கள் செல்வத்தின் சக்தி வாய்ந்த அடையாளமாகும். ஒருவரது வீட்டில் மீன் தொட்டியை வைத்திருக்கும் போது, அது அந்த வீட்டில் செல்வத்தைக் கொண்டு வரும். அதுவும் அந்த மீன் தொட்டியை வீட்டின் ஹாலில் வைப்பது தான் நல்லது. மீன்களில் கோல்டன் மீன் தான் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே இந்த வகை மீன்களை வாங்கி வைப்பது, வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும்.
2. சிரிக்கும் புத்தர்
செல்வத்தின் அடையாளமாக கருதப்படும் மற்றொரு பொருள் சிரிக்கும் புத்தர். இந்த சிரிக்கும் புத்தரை வீட்டின் வாசலை பார்த்தவாறு வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது இது செல்வத்தை வீட்டிற்குள் ஈர்க்கும். சிரிக்கும் புத்தர் சிலை பல்வேறு நிறங்களில் விற்கப்படுகிறது. உங்கள் வீட்டிற்கு எது பொருத்தமாக இருக்குமோ, அதை வாங்கி வையுங்கள்.
3. மூன்று கால் தவளை
ஃபெங் சூயி படி, மூன்று கால் தவளை அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை ஈர்க்கும் மற்றொரு அடையாளமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க வேண்டுமானால், வாயில் நாணயங்களை கவ்விக் கொண்டிருக்கும் மூன்று கால் தவளையை வாங்கி வையுங்கள். அதுவும் இதை டேபிள் அல்லது நாற்காலிக்கு அடியில் வைத்தால் தான் அதிகபட்ச பலனைப் பெற முடியும்.
4. 6-அடுக்கு நீரூற்று
பொதுவாக வீட்டில் நீரூற்று இருந்தால், அதிலிருந்து வெளிவரும் நீரின் ஓசையால் வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதுவும் வீட்டில் செல்வம் அதிகரிக்க வேண்டுமானால், 6 அடுக்கு நீரூற்றை வாங்கி வையுங்கள். அதுவும் இதை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும்.
5. வட்ட வடிவ இலைகளைக் கொண்ட செடிகள்
பொதுவாக செடிகளானது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றிவிடும். முக்கியமாக வீட்டில் வளர்க்கும் செடிகளை காய்ந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் செல்வத்தை அதிகரிக்க சிறந்த வழி வட்ட வடிவ இலைகளைக் கொண்ட செடிகளை வளர்ப்பது தான். எனவே தாமரை, நீர் லில்லி போன்ற செடிகளை வளர்த்து வாருங்கள்.
6. பாய்மரக் கப்பல்
பாய்மரக் கப்பல்கள் செல்வத்தை ஈர்க்கும் சிறந்த அடையாளாகும். வீட்டினுள் படகு செல்வது போன்ற போட்டோவை வைக்கும் போது, அது வீட்டிற்குள் செல்வத்தை கொண்டு வரச் செய்யும். இந்த மாதிரியான கப்பல்களை எத்தனை வேண்டுமானாலும் வைக்கலாம். ஒன்றிற்கு மேற்பட்ட கப்பல்களை வைக்கும் போது, அது ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாரங்களை கெண்டு வரும்.
7. கண்ணாடி
டைனிங் டேபிளை பிரதிபலிக்கும் வகையில் கண்ணாடியை வீட்டில் வைக்கும் போது அது வீட்டில் செல்வத்தை கொண்டு வரும். ஆனால் டைனிங் டேபிளில் எப்போதும் நற்பதமான பழங்களை வைத்திருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள். தினமும் நற்பதமான பழங்களை வைக்க முடியாதவர்கள், பிளாஸ்டிக் பழங்களை வைக்கலாம். ஆனால் கண்ணாடியில் அந்த பழங்கள் தெரிய வேண்டும்.



Click it and Unblock the Notifications