Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
வீட்டில் பணம் அதிகம் சேரணுமா? அப்ப வாஸ்துப்படி மயிலிறகை இந்த திசையில் வையுங்க...
Vastu Tips In Tamil: இந்தியாவின் தேசிய பறவையான மயில் பார்க்க அழகாக இருக்கும். அதுவும் அது தன் தோகையை விரித்து நடனமாடும் காட்சி இன்னும் அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்ட மயில் சிவபெருமானின் இளைய மகனான முருகப் பெருமானின் வாகனமாகும்.
இந்த மயிலின் இறகை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் பலரது வீடுகளிலும் மயிலிறகைக் காணலாம். ஆனால் இந்த மயில் மற்ற பறவைகளை விட வித்தியாசமானது மற்றும் கண்ணைக் கவரும் வகையில் கவர்ச்சியானதும் கூட.

இப்படிப்பட்ட மயிலின் இறகை வீட்டில் வைத்திருந்தால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். வாஸ்துப்படி, வீட்டின் குறிப்பிட்ட திசையில் மயிலிறகை வைத்திருப்பது பல அற்புதமான பலன்களை அளிக்கும். இப்போது வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் மயிலிறகை வைத்திருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
வீட்டில் மயிலிறகை வைத்திருப்பதால் பெறும் நன்மைகள்
* வீட்டில் மயிலிறகை வைத்திருந்தால், அந்த வீட்டில் உள்ளோரின் தன்னம்பிக்கை மற்றும் தலைமைப் பண்புகள் அதிகரிக்கும்.
* இந்து புராணத்தின் படி, முருகப் பெருமானின் வாகனம் தான் மயில். இந்த மயில் தோகையை வீட்டில் வைத்திருந்தால், அது அந்த வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி, ஒருவித பாதுகாப்பை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
* வீட்டின் நிதி நிலையை மேம்படுத்த, 7 மயிலிறகை எடுத்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்து, தெற்கு மூலையில் வைக்க வேண்டும். இதை வியாபாரத்தை மேம்படுத்த நினைக்கும் வியாபாரிகள் மட்டுமின்றி, வீட்டில் பண பிரச்சனைகளை சந்திப்பவர்களும் செய்யலாம்.
* முருகப் பெருமானைப் போலவே அறிவு, ஞானம், கல்வி ஆகியவற்றுடன் தொடர்புடைய சரஸ்வதி தேவியின் வாகனமாகவும் மயில் திகழ்கிறது. எனவே வீட்டில் உள்ள குழந்தைகள் நன்கு படிக்க வேண்டுமானால், 1-2 மயிலிறகுகளை அவர்கள் படிக்கும் மேஜையின் மேல் வையுங்கள்.
* வீட்டில் பல்லிகள் மற்றும் பாம்பு போன்றவைகள் வராமல் இருக் வேண்டுமானால், 2-3 மயிலிறகை வீட்டு வாசலில் வையுங்கள். இதனால் எந்த ஒரு விஷமிக்க ஜந்துவும் வீட்டிற்குள் நுழையாது.
* வீட்டில் பிரச்சனைகள் அதிகமாக இருந்தால் மற்றும் வீட்டின் அமைதி சீர்குலைந்திருந்தால், 7 மயிலிறகை எடுத்து, அதை ஹாலின் கிழக்கு சுவற்றில் வையுங்கள். இதனால் குடும்பத்தில் உள்ள சண்டைகள் முடிவுக்கு வந்து, குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.
* திருமணமான தம்பதிகளுக்கு இடையேயான பிணைப்பை அதிகரிக்க படுக்கையறையில் 2 மயிலிறகை வையுங்கள். இதனால் தம்பதிகளுக்கு இடையே இருந்த சண்டைகள் மறைந்து, அன்பும், காதலும் அதிகரிக்கும்.
எந்த திசையில் மயிலிறகை வைக்க வேண்டும்?
* மயிலிறகை வீட்டில் வைக்க சிறந்த திசை என்றால் அது கிழக்கு திசை தான். வேண்டுமானால் வடமேற்கு திசையிலும் மயிலிறகை வைக்கலாம்.
* ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்கள், மயிலிறகை வீட்டின் வடமேற்கு திசையில் வைத்தால், ராகு தோஷத்தால் ஏற்படும் தாக்கம் குறையும்.
* மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமானால், மயிலிறகை பாட புத்தகம் அல்லது படிக்கும் மேஜையின் மேல் வைத்துக் கொள்வது சல்லது. இதனால் மனதை ஒருநிலைப்படுத்தி, படிப்பில் முழு கவனத்தை செலுத்த முடியும்.
* வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகமாக சுற்ற வேண்டுமானால், வீட்டின் ஹாலில் உள்ள கிழக்கு சுவற்றில் மயிலிறகால் அலங்கரியுங்கள். இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் சுற்றுவதைக் குறைக்கலாம்.
* மயிலிறகை வீட்டின் படுக்கையறையிலும் வைத்திருக்ககலாம். இதனால் திருமண வாழ்க்கை சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருக்கும். மேலும் தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும்.
* வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அந்த தோஷத்தை நீக்க 8 மயிலிறகை எடுத்து கட்டி, அதை வீட்டின் வடகிழக்கு திசை சுவற்றில் வையுங்கள். இதனால் வாஸ்து குறைபாடுகள் நீங்கும்.
* வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருக்க வேண்டுமானால், ஒரு கொத்து மயிலிறகை வீட்டிற்கு வருபவர்களின் கண்களில் படும்படியான இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதனால் கண் திருஷ்டி நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications