Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
வாஸ்துப்படி இந்த செடிகளை வீட்டில் வளர்க்காதீங்க.. இல்லன்னா அது துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும்..
Vastu Tips In Tamil: ஒவ்வொருவருமே தங்கள் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவோம். அதற்காக வீட்டை பல பொருட்களை அலங்கரிப்போம். சிலர் பசுமையான செடிகளால் தங்கள் வீட்டை அலங்கரிக்க விரும்புவார்கள். அதற்காக வீட்டிற்கு வெளியே மட்டுமின்றி, வீட்டிற்குள்ளேயும் செடியை வாங்கி வைத்து அலங்கரிப்பார்கள்.
ஆனால் வீட்டில் செடிகளை வளர்க்கும் போது ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் சில செடிகளை வாஸ்துப்படி வீட்டில் வளர்க்கக்கூடாது. அப்படி வளர்த்தால், அந்த வீட்டின் மகிழ்ச்சி பாழாவதோடு, செல்வ செழிப்பும் பாதிக்கப்படும்.

ஃபெங் சூயி படி, வீடு மற்றும் அலுவலகத்திற்குள் வளர்க்கும் செடிகள் ஆற்றல் ஓட்டத்தை சமநிலைப்படுத்த உதவுகின்றன. இருப்பினும் அப்படி செடிகளை வளர்க்கும் போது, சரியான செடிகளை பார்த்து தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும். இதனால் அந்த செடிகள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். இப்போது வீட்டில் எந்த செடிகளை வளர்க்கக்கூடாது என்பதைக் காண்போம்.
கள்ளிச்செடி
கள்ளிச்செடிகள் பார்க்க அழகான தோற்றத்தைத் தரலாம். ஆனால் அந்த கள்ளிச்செடிகள் அல்லது முட்களைக் கொண்ட வேறு எந்த செடிகளையும் வீட்டில் வளர்க்கக்கூடாது. ஆனால் ரோஜா செடிகளை வீட்டில் வளர்க்கலாம். இப்படி வளர்ப்பதன் மூலம், அது அந்த வீட்டில் உள்ள மகிழ்ச்சியை சீர்குலைப்பதோடு, வீட்டில் உள்ளோரிடையே தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்பட வழிவகை செய்யும்.
பொன்சாய் தாவரங்கள்
வாஸ்துப்படி, பொன்சாய் தாவரங்கள் மற்றும் சிவப்பு நிற பூக்களைத் தரும் எந்த ஒரு செடிகளையும் வீட்டினுள் வைத்து வளர்க்கக்கூடாது. இந்த செடிகளை எப்போதும் வீட்டிற்கு வெளியே அல்லது வெளிப்புற பகுதிகளில் தான் வளர்க்க வேண்டும்.
புளிய மரம்
புளிய மரத்தை வீட்டில் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பழங்கால புராணங்களின் படி, இந்த மரங்களில் கெட்ட சக்திகள் குடியிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் எந்த ஒரு கட்டிடத்தையும் கட்ட வேண்டாம். மேலும் இதை வீட்டின் தோட்டத்தில் வளர்ப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
காய்ந்த செடிகள்
வீட்டில் செடிகளை வைத்து வளர்க்க விரும்புபவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய முதன்மையான விஷயம், செடிகளை காய விடக்கூடாது அல்லது காய்ந்த செடிகளை வீட்டினுள் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை வீட்டில் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வரும். காய்ந்த செடிகளைத் தவிர, காய்ந்த பூக்களையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் இந்த வகையான பூக்களும் துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும்.
பஞ்சு செடி
வீட்டில் ஒருபோதும் வைத்து வளர்க்கக்கூடாத செடிகளுள் ஒன்று தான் பஞ்சு செடி. இந்த பஞ்சு செடி பார்க்க அழகாக இருக்கலாம். ஆனால் இந்த வகையான செடிகள் மங்களகரமற்றதாக கருதப்படுகின்றன மற்றும் இந்த செடிகளை வீட்டில் எப்போதும் வளர்க்கக்கூடாது.
வடக்கு திசை கூடாது
தொட்டியில் செடிகளை நட்டு வளர்க்க நினைப்பவர்கள், அந்த தொட்டி செடிகளை எப்போதும் வடக்கு திசையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வடக்கு திசையில் தொட்டி செடிகளை வைத்து வளர்த்தால், அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
பெரிய அல்லது உயரமான மரங்கள்
பெரிய அல்லது உயரமான மரங்களை வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்து வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த வகையான மரங்கள் எதிர்மறை ஆற்றலை அழைப்பதோடு, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தைத் தடுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications