Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
வாஸ்துப்படி, படுக்கையறையில் இந்த போட்டோக்களை வெக்காதீங்க.. இல்ல திருமண வாழ்க்கையே நரகமாயிடும்..
Vastu Tips For Bedroom In Tamil: நாம் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருந்தால் தான், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, அதன் விளைவாக சந்தோஷமான, நிம்மதியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ முடியும். வீட்டில் வாஸ்து என்று வரும் போது, அது அறைகளுக்கு மட்டுமின்றி, வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பொருந்தும்.
நாம் அனைவருமே வீட்டை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவோம். அதுவும் வீட்டின் படுக்கையறையை மிகவும் அழகாக வைத்துக் கொள்ள, பலவிதமான பொருட்களை வாங்கி வைத்து படுக்கை அறையை அலங்கரிப்போம். அதில் பலர் போட்டோக்களால் படுக்கை அறையை அலங்கரிப்பார்கள்.

ஆனால் படுக்கை அறையில் போட்டோக்களை மாட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். தவறான போட்டோக்களை மாட்டினால் கணவன்-மனைவி இடையேயான உறவு மற்றும் பரஸ்பர புரிதலில் பிரச்சனைகள் ஏற்பட்டு, திருமண வாழ்க்கையே நரகமாகிவிடும்.
எனவே உங்கள் படுக்கை அறையில் போட்டோக்களை அதிகம் வைத்திருப்பவரானால், எந்த போட்டோக்களை வாஸ்துப்படி படுக்கை அறையில் வைக்கக்கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு தெய்வ பக்தி அதிகம் உள்ளது என்றால், எந்த தெய்வங்களின் படங்களை படுக்கை அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ராதா-கிருஷ்ணா போட்டோ
வாஸ்துப்படி ராதா-கிருஷ்ணா அன்பு மற்றும் நல்லிணக்கத்தில் அடையாளமாக கருதப்படுகின்றனர். இந்த ராதா-கிருஷ்ணாவின் ஜோடி போட்டோவை படுக்கை அறையில் வைத்திருந்தால், தம்பதிகளிடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும். ஆனால் எப்போதும் ராதாவின் போட்டோவை மட்டும் அல்லது கிருஷ்ணரின் போட்டோவை மட்டும் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது உறவுகளில் உறுதியற்ற தன்மையை உண்டாக்கும். மேலும் வாஸ்துப்படி, ராதா-கிருஷ்ணரின் போட்டோவை வடக்கு பார்த்த சுவற்றில் வைப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.
சிவன்-பார்வதியின் போட்டோ
சிவன்-பார்வதி தம்பதிகளாக இருக்கும் போட்டோவை படுக்கை அறையில் வைப்பது மங்களகரமானது. இந்த போட்டோவானது உறவில் ஸ்திரத்தன்மை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். திருமணமான தம்பதிகளிடையே பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்த, அந்த போட்டோவை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். ஆனால் சிவன் தனியாகவோ அல்லது பார்வதி தனியாகவோ இருக்கும் போட்டோவை வைக்கக்கூடாது.
அனுமன் போட்டோ
வாஸ்துப்படி படுக்கை அறையில் அனுமன் படத்தை வைத்திருப்பது மன அழுத்தம், தூக்கமின்மை அல்லது தம்பதிகளிடையே மோதலை அதிகரிக்கும். உங்களுக்கு அனுமன் பிடிக்குமானால், அனுமன் போட்டோவை பூஜை அறையிலோ அல்லது நுழைவாயிலிலோ வைத்து வழிபாடு செய்யுங்கள்.
துர்கா தேவி போட்டோ
துர்கா தேவி வலிமை மற்றும் கடுமையான ஆற்றலைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட துர்கா தேவியின் போட்டோவை படுக்கை அறையில் வைத்தால், அது அமைதியை சீர்குலைத்து, உறவுகளில் வாக்குவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கும். துர்கா தேவியின் போட்டோவை வீட்டில் வைக்க நினைத்தால், பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள். அதுவும் கிழக்கு திசையில் வைத்து வழிபாடு செய்யுங்கள்.
தியானம் அல்லது தவம் செய்வது போன்ற படங்கள்
படுக்கை அறையில் தியானத்தில் இருக்கும்படியான படங்களையோ அல்லது தவம் செய்வது போன்ற போட்டோக்களையோ வைப்பதைத் தவிர்க்க வேண்டும். வாஸ்துப்படி, இப்படியான படங்களை படுக்கை அறையில் வைத்தால், அது மன அழுத்தம், உறுதியற்ற தன்மை மற்றும் உறவுகளில் தூரத்தை உண்டாக்கும். எனவே இந்த மாதிரியான படங்கள் உங்கள் படுக்கை அறையில் இருந்தால், உடனே அப்புறப்படுத்துங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
