Latest Updates
-
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
வாஸ்துப்படி இவற்றை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், குபேரனின் அருளால் செல்வம் பெருகுமாம்..
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஒரு வீடு வாஸ்துப்படி கட்டப்படுவதோடு, அந்த வீட்டில் வைக்கும் பொருட்களும் சரியான திசையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சீராக இருந்து, அந்த வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.
அதுவும் திசைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வங்கள் வசிப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதில் செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் குபேரன் வசிக்கும் திசை தான் வடக்கு. எனவே வாஸ்து சாஸ்திரத்தில் வடக்கு திசை மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த திசை எப்போதும் சுத்தமாகவும், கனமான பொருட்கள் எதுவும் இல்லாதவாறும் வைத்துக் கொள்ள வேண்டும்.

சொல்லப்போனால் இந்த திசையில் வீட்டின் பூஜை அறையை அமைப்பது மிகவும் நல்லது. இந்த வடக்கு திசையில் இருந்து நேர்மறை ஆற்றல் வீட்டில் அதிகம் நுழையும். அதோடு இந்த திசையில் தான் லட்சுமி தேவியும் குடியிருக்கிறார்.
லட்சுமி தேவியின் சிலை
வாஸ்துப்படி, வடக்கு திசையில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியைத் தவிர, குபேரரும் வசிக்கிறார். இவ்விரு தெய்வங்களின் ஆசியும் ஒருவருக்கு கிடைத்தால், அந்நபர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். அதுவும் இந்த திசையில் லட்சுமி தேவியின் சிலையை அமைத்து வழிபடுவதன் மூலம், லட்சுமி தேவியின் பரிபூர்ண அருள் கிடைத்து, வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளும் முடிக்கு வரும்.
வடக்கு திசையில் வைக்க வேண்டிய செடிகள்
வீட்டின் வடக்கு திசையில் செல்வத்தை ஈர்க்கும் செடிகளை வைப்பதன் மூலமும் அந்த வீட்டில் பணப் பிரச்சனையைத் தடுத்து, செல்வத்தை அதிகரிக்கலாம். அதுவும் அழகிற்காகவும், அதிர்ஷ்டத்திற்காகவும் பெரும்பாலானோரின் வீட்டில் வளர்க்கப்படும் மணி பிளாண்ட் மற்றும் புனிதமான துளசி செடியை, வீட்டின் வடக்கு திசையில் வைப்பது நல்லது. இதனால் இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, செல்வத்தையும் வீட்டில் அதிகரிக்கும்.
சமையலறை
வாஸ்துப்படி ஒரு வீட்டின் வடக்கு திசையில் சமையலறையை அமைத்தால், அந்த வீட்டில் செல்வம் மிகுதியாக சேரும். அதோடு, வடக்கு திசையில் சமையலறை இருக்கும் வீட்டில் உணவுத் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது.
கண்ணாடி வைக்கவும்
ஒரு வீட்டில் நிச்சயம் கண்ணாடியை வைத்திருக்க வேண்டும். கண்ணாடியானது முகத்தை பார்க்க பயன்படுவது மட்டுமின்றி, வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதுவும் வாஸ்துப்படி ஒரு வீட்டின் வடக்கு திசையில் கண்ணாடியை வைத்திருந்தால், அது நிதி நிலைமையை மேம்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications