Latest Updates
-
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
வீட்டில் துளசி செடி இருக்கா? அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க.. பண கஷ்டம் வாட்டி எடுத்துடும்...
Vastu Rules For Tulsi Plant In Tamil: இந்தியாவின் பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் காணப்படும் ஒரு மங்களகரமான செடி தான் துளசி. ஏனெனில் துளசி செடியில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.
எனவே லட்சுமி வாசம் செய்யும் துளசி செடியை வீட்டில் வைத்து வளர்க்கும் போது, அந்த வீட்டில் லட்சுமி தேவி எப்போதும் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால் வீட்டில் துளசி செடியை வளர்த்து வந்தால், அதை தினமும் வழிபட வேண்டும். அப்படி வழிபட்டால் தான் லட்சுமி தேவியின் அருளைப் பெற முடியும்.

வாஸ்து சாஸ்திரத்தில் கூட, வீட்டில் துளசி செடியை வைத்திருந்தால் ஒருசில விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த விதிகளை பின்பற்றாமல் இருந்தால் அது வீட்டிற்கு வறுமையைக் கொண்டு வருவதோடு, துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். இப்போது துளசி செடியுடன் தொடர்புடைய வாஸ்து விதிகளைக் காண்போம்.
* துளசி செடியை எப்போதும் இருட்டான பகுதியில் வைக்கக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்கு பின் துளசி செடிக்கு அருகில் ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். மேலும் துளசி செடி வைக்கும் இடத்தில் எப்போதும் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
* துளசி செடியை எப்போதும் திறந்த வெளியில் தான் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான் சூரிய ஒளி நேரடியாக அதில் படும், செடியும் செழிப்பாக வளரும்.
* துளசி செடிகளில் காய்ந்த இலைகள் இருந்தால், அதன் இலைகளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். அதுவும் அந்த காய்ந்த இலைகளை தூக்கி எறிந்துவிடாமல், அந்த செடிக்கு கீழே அருகிலேயே போட வேண்டும்.
* வீட்டில் வைத்த துளசி செடிகள் காய்ந்து போனால், அவற்றை உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும். ஏனெனில் காய்ந்த துளசி செடியானது வீட்டிற்கு வறுமையையும், துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.
* முக்கியமாக துளசி செடியை வீட்டில் வைக்கும் போது சரியான திசை பார்த்து வைக்க வேண்டும். எப்போதும் துளசி செடியை தெற்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். துளசி செடியை வைக்க சிறந்த திசை வடக்க அல்லது வடகிழக்கு திசை தான்.
* துளசி செடியை எப்போதும் தொட்டியில் வைத்து தான் வளர்க்க வேண்டும். நேரடியாக தரையில் ஊற்றி வளர்க்கக்கூடாது. மேலும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் துளசி இலைகளைப் பறிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* ஞாயிற்று கிழமைகளில் துளசி செடிக்கு நீரை ஊற்ற வேண்டாம். அதேப் போல் இந்நாளில் துளசி இலைகளைப் பறிப்பதும் அபசகுனமாக கருதப்படுகிறது.
* துளசி செடியை தொடும் போது எப்போதும் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். எப்போதும் துளசி இலைகளைப் பறிப்பதாக இருந்தால், அவற்றை கைகளில் தான் பறிக்க வேண்டும். கத்தரிக்கோல், கத்தி போன்ற எவற்றையும் பயன்படுத்தக்கூடாது.
* முக்கியமாக தேவையில்லாத துளசி செடியைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளிக்காமல் துளசி செடியைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டு. அப்படி குளிக்காமல் தொடும் துளசி இலைகள் வழிபட்டால் ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications