Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
இந்த ஒரு ரூபாய் பொருளை வீட்டின் இந்த இடத்துல வெச்சு, தொடர்ந்து 21 நாட்கள் எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க..
Vastu Tips In Tamil: குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருந்தால் தான், அந்த வீட்டில் உள்ளோர் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண்பதோடு, அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கும். அந்த அளவில் நமது வாழ்க்கையில் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கை வகிக்கிறது.
ஆனால் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மற்றும் நமது ஒருசில செயல்களால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கிறது. இப்படி வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால், அதுவே அந்த வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை வரத் தூண்டும்.

இப்படி வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றவும், வாஸ்து தோஷத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் நம் வீட்டில் உள்ள ஒரு பொருள் பெரிதும் உதவி புரியும். அது தான் கடவுளை வழிபடும் போது நாம் பயன்படுத்தும் கற்பூரம். இந்த கற்பூரம் நல்ல வாசனையைக் கொண்டிருப்பதால், அது வீட்டினுள் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரித்து, ஒருவரது வாழ்வில் உள்ள பிரச்சனைகள் குறைய உதவுவதாக நம்பப்படுகிறது. இப்போது வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தை நீக்க உதவும் சில கற்பூர பரிகாரங்களைக் காண்போம்.
வாஸ்து தோஷத்தின் அறிகுறிகள்
ஒருவரது வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் ஒருசில அறிகுறிகள் தெரியும். அதில் முதலாவதாக தெரிவது, வீட்டில் நிறைய பணப் பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதோடு குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனைகள் அதிகரிக்கும் மற்றும் வீட்டில் உள்ளோர் அடிக்கடி நோய்வாய்ப்பட நேரிடும். இப்படியான அறிகுறிகள் உங்கள் வீட்டில் தெரிந்தால், வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளது என்று அர்த்தம்.
இந்நிலையில் வாழ்க்கை சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க, உடனே வாஸ்து தோஷங்களைப் போக்கும் பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். இப்போது வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷத்தைப் போக்க கற்பூரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
* முதலாவதாக, ஒரு மண் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் 5-6 கற்பூரத் துண்டுகளை எடுத்து, நெய்யில் நனைத்து விளக்கில் வைத்து, அதை ஏற்றி, வீடு முழுவதும் அந்த கற்பூரத்தை காட்ட வேண்டும்.
* இது தவிர வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் கற்பூரத் துண்டுகளை வைக்க வேண்டும். இப்படி கற்பூரத் துண்டுகளை வைக்கும் போது, அது காற்றினால் தானாக கரையும். இச்செயலால் கற்பூரம் கரைவது போன்று, வீட்டில் உள்ள பிரச்சனையும் தானாக கரைவதாக நம்பப்படுகிறது.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, தினமும் வீட்டில் கற்பூரத்தை ஏற்றும் போது, அத்துடன் ஒரு கிராம்பையும் வைத்து ஏற்றினால், அது வாஸ்து தோஷங்களை நீக்கும். இது தவிர இப்படி செய்யும் போது, அது வீட்டில் உள்ள கண் திருஷ்டியையும் நீக்கும்.
* உங்கள் வீட்டில் பணம் சேர்வதில்லையா? எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும், உங்கள் நிதி நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையா? அப்படியானால் ஒரு சில்வர் கிண்ணத்தில் சில கற்பூரத் துண்டுகளை வைத்து, காலையில் வீட்டு வாசலில் வைத்து எரியுங்கள். இப்படி தொடர்ந்து 21 நாட்கள் பின்பற்றி வந்தால், நிதி நிலையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
* உங்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச வேண்டுமா? அப்படியானால் கற்பூரம் உங்கள் அதிர்ஷ்டத்தை ஈர்க்க உதவும். அதற்கு தினமும கற்பூரத்துடன் 2 கிராம்பை வைத்து, சிறிது நெய் ஊற்றி ஏற்றி, அதை வீடு முழுவதும் காட்ட வேண்டும். இப்படி செய்வதனால் வீட்டில் உள்ளோருக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
