Latest Updates
-
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
வாஸ்துப்படி, வீட்டு மொட்டை மாடியில் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்ல பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும்..
Vastu Tips In Tamil: பலரும் வீட்டு மொட்டைமாடிக்கு வாஸ்து எதுவும் இல்லை என்று நினைக்கலாம். ஆனால் அது தவறு. மொட்டை மாடியும் வீட்டில் சுற்றும் ஆற்றலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மொட்டைமாடியில் செய்யும் தவறுகள் வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தி, வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். ஏனெனில் வீட்டின் மொட்டைமாடி கிரகங்களுடன் மர்மமான தொடர்பை கொண்டுள்ளன.
ஆகவே மொட்டை மாடியில் செய்யும் தவறுகள், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரித்து, குடும்பத்தில், நிதி நிலையில், தொழிலில் என பல பிரச்சனைகளை வரவழைக்கும். இப்போது வாஸ்துப்படி மொட்டைமாடியில் எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது, எம்மாதியான விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும் என்பன குறித்து காண்போம்.

* வாஸ்துப்படி, வீட்டின் கூரை அல்லது மாடியை சாய்வாக இருக்குமாறு கட்ட வேண்டாம். ஏனெனில் இது மனச்சோர்வு மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளை வரவழைக்கும்.
* வீட்டின் மொட்டை மாடியில் வைக்கும் தண்ணீர் தொட்டியானது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். இந்த பகுதியானது வீட்டின் மற்ற பகுதிகளை விட சற்று உயரத்தில் இருக்க வேண்டும். வீடு செல்வ செழிப்போது இருக்க வேண்டுமானால், தண்ணீர் தொட்டியை தென்மேற்கு திசையில் அமைக்க வேண்டும்.
* பலர் வீட்டின் மொட்டையில் செடிகளை வைத்து வளர்ப்பார்கள். மொட்டை மாடியில் துளசி, சாமந்தி, அல்லி, புதினா, மஞ்சள் போன்ற செடிகளை வைப்பதாக இருந்தால், அதை வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வைக்க வேண்டும். நீல நிற பூக்களைத் தரும் செடிகளை வடக்கு திசையில் வைக்க வேண்டும். வெள்ளை நிற பூக்களைத் தரும் மல்லிகை செடியை வைப்பதாக இருந்தால், அதை மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
* வீட்டின் மொட்டைமாடி சனி பகவானின் காரணியாக கருதப்படுகிறது. மொட்டை மாடியை அசுத்தமாக வைப்பது, வியாபாரத்தை பாதிக்கும். எனவே வீட்டின் மொட்டை மாடி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். எப்போதும் மொட்டை மாடியில் குப்பைகளை அல்லது பயன்படுத்தாத பொருட்களை வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது நிதி நிலையை பாதிக்கும்.
* வாஸ்துப்படி, வீட்டு மொட்டை மாடியில் குப்பைகளை சேகரித்து வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழையவிடாமல் தடையை ஏற்படுத்தும். இதன் காரணமாக வீட்டில் பண தட்டுப்பாடு அதிகரிக்கும்.
* வீட்டின் மொட்டை மாடியில் துடைப்பம், துருப்பிடித்த இரும்புப் பொருட்கள் அல்லது தேவையில்லாத மரப் பொருட்கள் போன்றவற்றை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தையும் மாடியில் வைப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாக கருதப்படுகிறது. இதன் மூலம் வீட்டில் உள்ளோர் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
* பலரது வீடுகளில் செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளை வாங்கி படிக்கும் பழக்கம் இருக்கும். அப்படி வாங்கும் போது, பழைய பத்திரிக்கைகளை மொட்டைமாடியில் வைப்பார்கள். இப்படி பழைய பேப்பரை மொட்டை மாடியில் வைப்பது லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கிவிடும். எனவே இதை செய்யாதீர்கள்.
* பெரும்பாலானோர் துவைத்த துணிகளை உலர்த்த வீட்டு மொட்டை மாடியில் கயிற்றைக் கட்டுவார்கள். ஆனால் கயிற்றைக் கட்டிய பின், ஒரு பக்கத்தில் கயிற்றின் மூட்டையை விட்டுவிடாதீர்கள். வாஸ்துப்படி, இப்படி கயிற்று மூட்டையை வைப்பது அசுபமாக கருதப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications