Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா?
2024 ஆம் ஆண்டில் உங்க வீடு செல்வ செழிப்போடு இருக்கணுமா? அப்ப வாஸ்துப்படி இத செய்யுங்க...
Vastu Tips For New Year 2024 In Tamil: 2023 ஆம் ஆண்டில் பண வீக்கம் காரணமாக, பலரது வருமானம் குறைந்துவிட்டது. மேலும் இந்த பண வீக்கம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மோசமாக பாதித்துள்ளது. எப்படியோ 2023 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் நுழையவுள்ளோம்.
இன்னும் ஒரு மாதத்தில் புதிய ஆண்டாக 2024 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டு மகிழ்ச்சியாகவும், கடந்த ஆண்டை விட சிறப்பாகவும் இருக்க விரும்புவோம்.

வருகிற 2024 ஆம் ஆண்டானது பலருக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. நிறைய பேர் இந்த ஆண்டு சிறப்பாக மற்றும் லாபகரமானதாக இருக்க வேண்டுமென்று, பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
நீங்களும் அப்படி 2024 ஆம் ஆண்டு செழிப்பாக இருக்க விரும்பினால், வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சிலவற்றை பின்பற்றுங்கள். இப்படி செய்வதன் மூலம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதோடு, செழிப்பாகவும் இருக்கும். இப்போது 2024 ஆம் ஆண்டு செழிப்பாக இருப்பதற்கான சில வாஸ்து குறிப்புக்களைக் காண்போம்.
வீட்டு வாசலில் இதை வையுங்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, 2024 ஆம் ஆண்டு சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்க விரும்பினால், வீட்டு வாசல் கதவில் குதிரை லாடத்தை வையுங்கள். குதிரை லாடமானது எதிர்மறை ஆற்றலை வீட்டினுள் நுழையவிடாமல் தடுக்கும் மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
அதோடு, இது ஒரு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. எனவே இதை வீட்டு வாசலில் தொங்க விட்டால், வீட்டில் உள்ளோர் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பதோடு, தம்பதிகளுக்கு இடையே பிணைப்பும் அதிகரிக்கும்.
வியாபாரம் செழிக்க இதை வையுங்கள்
நீங்கள் வியாபாரம் செய்து வருபவராயின், அதுவும் உங்கள் வியாபாரம் மிகவும் மந்தமாக இருந்தால், ஒரு கண்ணாடியை தொழில் செய்யும் இடத்தில் வையுங்கள். இப்படி வைக்கும் போது, இரட்டிப்பு லாபத்தைத் தரும்.
ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள், காபி கடைகள், குளிர்பான கடைகள் போன்ற இடங்களில் கண்ணாடிகளை ஆங்காங்கு வைத்திருப்பதைக் காணலாம். இப்படி வைப்பதன் முக்கிய நோக்கம், தொழில் செய்யும் இடம் எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். எனவே செல்வம் பெருக வேண்டுமானால், கண்ணாடிகளை நிறுவுங்கள்.
மூங்கில் செடியை வாங்கி வையுங்கள்
2024 ஆம் ஆண்டு செழிப்பாக இருக்க வேண்டுமானால், அலுவலகம், கடை, வீடு போன்ற இடங்களில் மூங்கில் செடியை வாங்கி வையுங்கள். மூங்கில் செடியானது செழிப்பு மற்றும் வாழ்நாள் நீட்டிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. மேலும் இது தங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். நீங்கள் வருகிற புத்தாண்டு மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், ஒரு மூங்கில் செடியை வாங்கி வையுங்கள். இதனால் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
விண்ட் சைம்கள்
காற்றினால் ஒலியை எழுப்பக்கூடிய ஒரு அலங்காரப் பொருள் தான் விண்ட் சைம். இதை வீட்டில் மட்டுமின்றி, அலுவலகத்திலும் தொங்கவிடலாம். காற்று அடிக்கும் போது, இதிலிருந்து எழுப்பப்படும் ஒலியானது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி, நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது.
எனவே இப்படிப்பட்ட விண்ட் சைம்களை வீட்டின் வாசல், ஜன்னல் போன்ற பகுதிகளில் தொங்கவிடலாம். இப்படி செய்யும் போது, வீடு மற்றும் பணியிடம் செழிப்பாகவும், அமைதியாகவும் இருக்கும். முக்கியமாக விண்ட் சைம் ஒருவரது தூங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தை எழுப்பும் திறனைக் கொண்டது.
சிரிக்கும் புத்தர்
2024 ஆம் ஆண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், சிரிக்கும் புத்தரை வாங்கி வீட்டில் வையுங்கள். புத்தர் சிலையானது செல்வத்தின் கடவுளாக கருதப்படுகிறது. வருகிற புத்தாண்டில் உங்கள் வருமானம் அதிகரிக்க வேண்டுமானால், இந்த புத்தர் சிலையை வீட்டிலும், அலுவலகத்திலும் வாங்கி வையுங்கள். இது பண பிரச்சனைகளை நீக்குவதோடு, சிக்கிய பணத்தை சீக்கிரம் கைக்கு கிடைக்கச் செய்யும்.
மீன் தொட்டி
2024 ஆம் ஆண்டு மங்களகரமானதாகவும், லாபகரமானதாகவும் இருக்க வேண்டுமானால், வீட்டில் ஒரு மீன் தொட்டியை வாங்கி வையுங்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, மீன் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. மீன் தொட்டியை வீட்டில் வைத்திருந்தால், வீட்டிற்கு வரவிருக்கும் பிரச்சனையை இந்த மீன் நீக்கும். முக்கியமாக மீன் தொட்டியானது வீட்டின் சூழலை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ளும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.)



Click it and Unblock the Notifications