Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
வீட்டில் செல்வம் எப்போதும் நிலைத்திருக்கணுமா? அப்ப சமையலறையில் இந்த தவறை செய்யாதீங்க..
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு வீடு எப்படி இருந்தால், அந்த வீட்டில் உள்ளோர் செல்வ செழிப்போடு, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் குடியிருக்கும் வீட்டில் உள்ள அறைகள் முதல் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை வரை ஒவ்வொன்றும் சரியான இடத்தில், சரியான திசையில் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் எதிர்மறை ஆற்றல் நிரம்பி, அந்த வீட்டில் உள்ளோர் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த வகையில் ஒரு வீட்டில் சமையலறை மிகவும் முக்கியமான பகுதி மற்றும் வீட்டின் மகாலட்சுமியாக கருதப்படும் பெண்கள் நிறைய நேரம் செலவிடும் பகுதியும் கூட.

அப்படிப்பட்ட சமையலறை சரியான திசையில் இருப்பதோடு, அந்த சமையலறையில் உள்ள பொருட்கள் மற்றும் சமையலறையில் மேற்கொள்ளும் சில விஷயங்களை சரியான திசையில் செய்ய வேண்டும். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருப்பதோடு, செல்வமும் நிலைத்திருக்கும். இப்போது வாஸ்துப்படி சமையலறையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைக் குறித்து காண்போம்.
வாஸ்துப்படி செய்ய வேண்டியவை:
* சமையலறையை வடமேற்கு திசையில் அமைக்கலாம். இருப்பினும், சமையலறையில் வைக்கும் அடுப்பானது தென்கிழக்கு திசையில் அமைக்கப்பட வேண்டும்.
* சமையலறையின் கதவானது வடக்கு அல்லது கிழக்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும். அதுவும் கிழக்கு திசையைப் பார்த்தவாறு இருப்பது மிகவும் நல்லது. இது வீட்டிற்கு செழிப்பை கொண்டு வரும்.
* சமையலறையில் சமைக்கும் நபர் கிழக்கு திசையை பார்த்தவாறு நின்று சமைக்க வேண்டும். அதாவது அடுப்பானது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். ஒருவேளை மேற்கு திசையை பார்த்தவாறு இருந்தால், அந்த வீட்டில் உள்ளோர் அடிக்கடி ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட நேரிடும்.
* சமையலறையில் உள்ள ஜன்னல் கதவானது கிழக்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். இப்படி வைக்கும் போது வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டமானது சிறப்பாக இருக்கும்.
* சமையலறையில் கேஸ் சிலிண்டராது தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். ஒருவேளை சிலிண்டர் காலியாக இருந்தால், அதை தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.
* சமையலறையில் உள்ள மசாலாப் பொருட்கள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவை தெற்கு அல்லது மேற்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும். அதாவது சமையலறையில் உள்ள கேபினெட்டுகள் தெற்கு அல்லது மேற்கு திசையை எதிர்கொள்ளும் சுவர்களில் இருக்க வேண்டும்.
* சமையலறையில் வாட்டர் ஃபில்டரை அமைப்பதாக இருந்தால், அது வடகிழக்கு திசையில் அமைக்கப்பட வேண்டும்.
* ஃப்ரிட்ஜ்ஜை வைப்பதாக இருந்தால், அது தெற்கு, தென்கிழக்கு, வடக்கு அல்லது மேற்கு திசையில் வைக்கப்பட வேண்டும்.
வாஸ்துப்படி செய்யக்கூடாதவைகள்:
* சமையலறையானது பூஜை அறைக்கு முன் இருக்கக்கூடாது. அதேப் போல் பூஜை அறைக்கு கீழே அல்லது மேலே அமைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* சமையலறையை பெட்ரூம்மிற்கு மேலே மற்றும் கீழே அமைப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும்.
* முக்கியமாக சமையலறையை கழிவறையை ஒட்டியவாறு அமைக்கக்கூடாது. இது சமையலறையில் சமைக்கும் உணவுகளில் உள்ள ஆற்றலை அழித்துவிடும்.
* சமையலறையானது வடக்கு திசையை பார்த்தவாறு இருக்கக்கூடாது. ஏனெனில் வாஸ்துப்படி இது மங்களகரமற்றதாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் வடக்கு திசையானது செல்வத்தின் கடவுளான குபேரன் குடியிருக்கும் திசை. சமையலறையானது செவ்வாய்க்குரிய திசையில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் செலவுகள் அதிகரித்து, பண தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.
* சமையலறையானது தென்மேற்கு திசையைப் பார்த்தவாறும் இருக்கக்கூடாது. இது வீட்டில் சண்டையை அதிகரித்துவிடும். இதனால் குடும்ப வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்படும்.
* அதேப் போல் சமையலறையில் சமைக்கு நபர் தெற்கு திசையைப் பார்த்தவாறு சமைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அதுவும் வீட்டில் பண பிரச்சனைகளை வரவழைத்துவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
