Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்..
வீட்டின் இந்த இடத்துல ஒரு பௌல் நீரை வையுங்க.. அப்புறம் வீட்டுல நடக்குற அதிசயத்தை பாருங்க...
Vastu Tips In Tamil: தற்போது மக்களிடையே வாஸ்து மீதான நம்பிக்கை அதிகரித்துவிட்டது. நல்வாழ்வு மற்றும் செழிப்பிறகு வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும், எந்த பொருள் எங்கு இருக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.
மேலும் ஒருவரது வீட்டில் பிரச்சனைகள் அதிகமாக இருந்தால், அந்த பிரச்சனை நீங்குவதற்கு எந்த மாதிரியான விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்பன குறித்தும் கூறப்பட்டுள்ளன.

அந்த வகையில் வீட்டின் செழிப்பிற்காக பழங்காலம் முதலாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு பழக்கம் தான், வீட்டு வாசலுக்கு அருகே ஒரு கிண்ணத்தில் நீரை நிரப்பி, பூக்களை வைப்பது. இதை உருளி என்று அழைப்பர்.
இப்படி வீட்டில் உருளியை வைக்கும் போது அந்த வீட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் நீங்கி, நன்மைகள் நடக்கும். முக்கியமாக அந்த வீட்டில் உள்ளோர் வெளியே செல்லும் போது, இதைப் பார்த்து விட்டு செல்வதால், காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
இப்போது வாஸ்துப்படி வீட்டில் உருளியை வைப்பதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் மற்றும் எந்த இடத்தில் உருளியை வைக்க வேண்டும் என்பன குறித்து காண்போம்.
உருளியின் முக்கியத்துவம்
வாஸ்துப்படி நீர் செழிப்பு, நேர்மறையைக் குறிக்கிறது. எனவே தான் அக்காலத்தில் வீட்டில் ஒரு கிண்ணத்தில் நீரை நிரப்பி, அதில் பூக்களைக் கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு வந்தது. அதுவும் இந்த கிண்ணத்தை சரியான இடத்தில் வைத்தால் தான் முழு பலனைப் பெற முடியும். ஒரு வீட்டில் உருளியை வைக்க சிறந்த பகுதி என்றால், அது அனைவரது கண்களும் படும்படியான இடம் தான். அப்படி அனைவரது கண்ணில் படக்கூடிய ஒரு பகுதி வீட்டின் ஹால் அல்லது நுழைவு வாயில் பகுதி தான்.
எந்த திசையில் உருளியை வைப்பது நல்லது?
உருளி என்னும் வார்த்தையானது உருளை என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. அதாவது உருண்டையான கிண்ணத்தைக் குறிக்கிறது. இதை குறிப்பிட்ட திசையில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அப்படி வைப்பதன் மூலம், அது வீட்டினுள் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, பலவிதமான நன்மைகளை வழங்கும்.
அதுவும் உருளியை வீட்டின் வலது பக்கத்தில், ஹாலின் மையப் பகுதியில், தென்கிழக்கு மூலை அல்லது வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். உருளியில் பச்சை அல்லது நுல நிற பூக்களை வைப்பதாக இருந்தால், அதை வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். அதுவே மஞ்சள் நிற பூக்களை வைப்பதாக இருந்தால், தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும்.
உருளிக்கு எந்த உலோகத்தை பயன்படுத்தலாம்?
உருளியை பித்தளை, வெள்ளி, ஐம்பொன், தங்கம் என்று எந்த உலோகத்திலும் வைக்கலாம். அதுமட்டுமின்றி, கண்ணாடி, மண், பீங்கான் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இதுவெல்லாம் ஒருவரது வசதியைப் பொறுத்தது. ஆனால் சில்வர், இரும்பு, அலுமினியம் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
வீட்டில் உருளியை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
* நீரானது எதிர்மறை ஆற்றலின் மோசமான கடத்தி என்பதால், வீட்டில் அடிக்கடி யாரேனும் நோய்வாய்ப்பட்டு வந்தால், பித்தளையில் உருளியை வைத்தால், வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் மேம்படும்.
* உருளியை வீட்டின் ஹாலில் வைத்தால், அது அந்த வீட்டிற்கு அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரும்.
* வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தைப் போக்க விரும்பினால், வீட்டின் வடகிழக்கு திசையில் உருளியை வைப்பதனால், வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
* வீட்டின் ஈஷான மூலையான, வடகிழக்கு மூளையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உருளியை வைப்பதன் மூலம், வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.
* வீட்டின் பூஜை அறையில் வெள்ளை அல்லது மஞ்சள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உருளியை வைக்கும் போது, அது அந்த வீட்டில் உள்ள கடவுளை சாந்தப்படுத்தி மகிழ்ச்சியடையச் செய்யும்.
* வீட்டில் வைக்கப்படும் உருளியில் கற்பூரங்களை சிறிது போட்டு வைப்பதன் மூலம், அது பூச்சிகளை விரட்டி, வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நினைவில் கொள்ள வேண்டியவை:
* வீட்டில் உருளியை வைத்தால், அதில் உள்ள நீரையும், பூக்களையும் தினமும் மாற்ற வேண்டும். உருளியில் உள்ள பூக்கள் வாடாமல் இருக்க வேண்டும். ஒருவேளை பூக்கள் வாடாமல் இருந்தால், அந்த பூக்களை அடுத்த நாளும் பயன்படுத்தலாம். ஆனால் நீரை தினமும் மறக்காமல் மாற்ற வேண்டும்.
* உருளியில் ஜவ்வாது பொடிகளை சிறிது போடுவதன் மூலம், அது அந்த வீட்டில் நல்ல மணத்தைப் பரப்பி, வீட்டை தெய்வீகமாக வைத்திருக்கும்.
* முக்கியமாக உருளியில் பூக்களைப் போடும் போது, காம்புடன் போடுவதே நல்லத. காம்புகளை அகற்றிவிட்டு பூக்களை மட்டும் பயன்படுத்துவது நல்லதல்ல. அதேப் போல் பூக்களின் இதழ்களை நீரில் உதிர்த்துவிடக் கூடாது.
* வீட்டின் பிரதான வாசலில் உருளியை வைக்கும் போது, அது அந்த வீட்டில் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











