வாஸ்துப்படி இந்த 3 செடிகளை வீட்டில் தவறான இடத்துல வெக்காதீங்க.. இல்ல பணம் தண்ணியா செலவாகும்..

Vastu Shastra: நம் ஒவ்வொருவருக்குமே நாம் குடியிருக்கும் வீடு வெறும் வீடாக மட்டுமின்றி, நேர்மறை ஆற்றல் நிறைந்த மனதிற்கு அமைதியைத் தரும் சொர்க்கமாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். இப்படி நாம் குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றல் நிரம்பியிருந்தால், அந்த வீட்டில் உள்ளோர் தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியையும், பொருளாதாரத்தில் முன்னேற்றமும், உறவுகள் இணக்கமாகவும், மொத்தத்தில் வீடே செல்வ செழிப்போடும் இருக்கும்.

Vastu Shastra These 3 Plants At Wrong Place At Home Can Make You Poor

இந்த நேர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்க செடிகள் பெரிதும் உதவியாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதுவும் சில வகையான செடிகளை வீட்டில் வளர்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த செடிகள் வெறும் அலங்கார செடிகளாக மட்டுமின்றி, ஒருவரது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வர உதவுகின்றன. அதற்கு அந்த செடிகளை வீட்டில் சரியான இடத்தில், சரியான திசையில் வைத்து வளர்க்க வேண்டும். அப்படி வைத்தால் தான் எதிர்பார்த்த நல்ல பலன்களைப் பெற முடியும்.

தவறான இடத்தில் வைக்கும் போது, அது வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இது தெரியாமல், இன்னும் சிலர் வாஸ்துப்படி மங்களகரமானதாக கருதப்படும் 3 செடிகளை வீட்டில் தவறான இடத்தில் வைத்து வளர்த்து வருகின்றனர். இப்போது அந்த செடிகள் எவை என்பதையும், அவற்றை வீட்டில் எங்கு வைத்து வளர்க்க வேண்டும் என்பதையும் காண்போம்.

1. துளசி செடி

பெரும்பாலான இந்திய வீடுகளிலும் வளர்க்கப்படும் ஒரு செடி தான் துளசி. இந்த செடி மிகவும் புனிதமான செடியாக கருதப்படுகிறது. ஏனெனில் துளசி செடி லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டில் வளர்த்தால் மட்டும் நற்பலன்களைப் பெற முடியாது. அதை சரியான இடத்தில், சரியான திசையில் வளர்க்க வேண்டியது முக்கியம்.

வாஸ்துப்படி, துளசி செடியை வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும். இந்த திசையில் வைத்து வளர்க்கும் போது தான் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டு சூழல் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். தவறான திசையில் வைக்கும் போது, அது வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை வரவழைக்கும்.

2. மணி பிளாண்ட்

வாஸ்துப்படி மணி பிளாண்ட் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த மணி பிளாண்ட்டை வீட்டில் வைத்து வளர்க்கும் போது, அது வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். ஆனால் அதற்கு அந்த மணி பிளாண்ட் செடியை சரியான இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். மணி பிளாண்ட் செடியை வைக்க சிறந்த திசை தென்கிழக்கு.

பொதுவாக, மணி பிளாண்ட் செடியை வீட்டிற்கு வெளியே வைப்பதை விட வீட்டிற்குள் வைப்பதே அதிக நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அதுவும் அதன் கொடிகள் தரையில் படர்ந்து செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செடியை மேல் நோக்கி வளர விட வேண்டும். இப்படி இருந்தால் தான் அது தனிப்பட்ட வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் உதவுவதாக கூறப்படுகிறது.

3. மூங்கில் செடி

வாஸ்துப்படி மூங்கில் செடி அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை ஆற்றலின் சின்னமாக கருதப்படுகிறது. இந்த செடியை எப்போதும் வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இப்படி வளர்க்கும் போது, அது வீட்டில் மகிழ்ச்சியை கொண்டு வருவதோடு, எதிர்மறை ஆற்றலை நீக்கும். பொதுவாக மூங்கில் செடியானது தொழில் வளர்ச்சிக்கும், வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்துவதற்கும் உதவுகிறது. வாழ்க்கையில் நிலைத்தன்மையை விரும்பினால், கண்டிப்பாக இந்த மூங்கில் செடியை வளர்க்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, October 14, 2026, 16:19 [IST]
Desktop Bottom Promotion