Latest Updates
-
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும்
இந்த உணவுகள இரும்பு கடாயில் நீங்க சமைக்கவே கூடாதாம்... மீறி சமைச்சா என்ன நடக்கும் தெரியுமா?
பண்டைய காலங்களில் மண் பாத்திரங்கள், செப்பு மற்றும் இரும்பு பாத்திரங்களில் உணவுகள் சமைக்கப்பட்டு உண்ணப்பட்டன. இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலான மக்கள் மீண்டும் இந்த பாத்திரங்களில் உணவு சமைக்க தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், பெரும்பலான வீடுகளில் இரும்பு கடாயில் உணவுகள் சமைக்கப்படுவதுண்டு. இரும்புக் கடாயில் சமைப்பது உணவுகளின் சுவை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று பல ஆண்டுகளாக நம்பப்படுகிறது. இதற்கு சமைக்கும் போது வெளியேறும் இரும்பின் நன்மை காரணமாகும். அதனால், எல்லா உணவுகளையும் இரும்பு கடாயில் சமைக்கலாம் என்றில்லை.

ஆம், இரும்புக் கடாயில் நீங்கள் ஒருபோதும் சமைக்கக் கூடாத சில உணவுகளும் உள்ளன. அவை என்னென்ன உணவுகள் என்றும், இரும்பு கடாயில் அந்த உணவுகளை சமைப்பதால் என்ன நடக்கும் என்றும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மீன்
பாரம்பரிய முறையில் மீன் மற்றும் கடல் உணவு வகைகளை சமைக்க நீங்கள் இரும்பு கடாய் அல்லது வார்ப்பிரும்பு பாத்திரத்தை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் இரும்பு கடாயில் மீன் சமைப்பதையோ அல்லது வறுப்பதையோ தவிர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் மீன்கள் கடாயின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டு சமையலின் அமைப்பை பாதிக்கலாம்.
எண்ணெய் மற்றும் வெண்ணெய் என இரும்பு கடாயில் எதைச் சேர்த்தாலும் ஒட்டிக்கொண்டிருக்கும் சில மீன்களின் மெல்லிய மற்றும் ஒட்டும் தன்மையே இதற்குக் காரணம். எனவே, இரும்பு கடாயில் மீன் சமைப்பதை தவிர்ப்பது நல்லது.
எலுமிச்சை
எலுமிச்சை சார்ந்த சுவையான உணவுகள் அல்லது ஊறுகாயை சமைக்க நீங்கள் திட்டமிட்டால், இரும்புக் கடாயில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் எலுமிச்சைச் சாற்றின் அமிலத்தன்மை இரும்புடன் வினைபுரிந்து உணவுக்கு உலோகச் சுவையைத் தரும். இதனால், உணவின் சுவை மாற்றக்கூடும். இவை உடலுக்கும் நல்லதல்ல.
பாஸ்தா
நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் பாஸ்தா அல்லது நூடுல்ஸ் ஏன் உங்கள் இரும்பு கடாயில் ஒட்டிக்கொள்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா இரண்டும் மாவில் தயாரிக்கப்படுகின்றன. அதனால், இவை பாத்திரத்தில் ஒட்டிக்கொள்ளும். மேலும், இரும்பு கடாய் உலோகச் சுவையை மாற்றியமைக்கும் தன்மை கொண்டது. இது உணவின் அமைப்பை பாதிப்பது மட்டுமல்லாமல், உணவின் சுவையையும் பாதிக்கும்.
இனிப்பு
இனிப்பை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள்? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் இனிப்பு செய்யும்போது, அந்த பாத்திரத்தையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், நீங்கள் இனிப்புகளை செய்யும்போது, அதை எந்த பாத்திரத்தில் செய்கிறீர்கள் என்பது முக்கியம். நீங்கள் அல்வாவைச் செய்தாலும் சரி அல்லது கேசரியை தயாரித்தாலும் சரி, இரும்புக் கடாயிலோ அல்லது பாத்திரத்திலோ சமைக்க வேண்டாம்.
ஏனெனில், இவை பெரும்பாலும் பாத்திரத்தில் ஒட்டிக்கொள்ளும். இனிப்புப் பண்டங்களைச் செய்யும்போது, அது உலோகச் சுவையையும் இனிப்புச் சுவையைக் கெடுக்கும். இது சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்காது. எனவே, அத்தகைய இனிப்புகளை துருப்பிடிக்காத எஃகு கடாயில் சமைப்பது சிறந்தது.
தக்காளி சாறு
இரும்பு கடாயில் தக்காளி சாறு கலந்த உணவுகளை சமைக்க வேண்டாம். தக்காளி சாற்றில் சிட்ரிக் அமிலம் இருப்பது இரும்புடன் வினைபுரிவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் உணவின் சுவை மற்றும் அமைப்பை மாற்றும். எனவே, உலோகச் சுவை மற்றும் இரசாயன எதிர்வினைகளைத் தவிர்க்க இரும்புக் கடாயில் அல்லது பாத்திரத்தில் சமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
மேலும், நீங்கள் பாரம்பரிய முறையில் உணவு சமைக்க விரும்புகிறீர்கள் எனில், மண் பாத்திரங்களை பயன்படுத்தி சமைக்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் உணவின் சுவையையும் அதிகரிக்கும். சில உணவுகளுக்கு ஏற்ற பாத்திரங்களில் சமைப்பது அந்த உணவின் அமைப்பையும் சுவையையும் அப்படியே உங்களுக்கு கொடுக்கும்.



Click it and Unblock the Notifications

