Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
உங்க வீட்டுல அட்டாச்சுடு பாத்ரூம் இருக்கா? அப்ப வாஸ்துப்படி இந்த தவறுகளை செய்யாதீங்க...
தற்போது பெரும்பாலான வீடுகளில் படுக்கையறையிலேயே குளியலறையும், கழிவறையும் இணைந்துள்ளது. ஆனால் படுக்கையறையுடன் அட்டாச்சுடு பாத்ரூம்மை வைக்கும் போது ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
நமது வாழ்வில் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவர் வாழும் வீடு வாஸ்துப்படி கட்டப்பட்டால் தான், அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். வாஸ்துப்படி கட்டப்படாத வீட்டில் பிரச்சனைகள் நிரம்பியிருப்பதோடு, அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது. முக்கியமாக வாஸ்து குறைபாடுள்ள வீட்டில் லட்சுமி தேவி குடியேறமாட்டார் மற்றும் அந்த வீட்டில் தரித்திரம் தலைவிரித்தாடும்.

முன்பெல்லாம் வீடுகளில் குளியலறை மற்றும் கழிவறை வீட்டின் பின்புறத்தில் இருந்தது. ஆனால் தற்போது பெரும்பாலான வீடுகளில் படுக்கையறையிலேயே குளியலறையும், கழிவறையும் இணைந்துள்ளது. ஆனால் படுக்கையறையுடன் அட்டாச்சுடு பாத்ரூம்மை வைக்கும் போது ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது வீட்டில் நிதி பிரச்சனைகளை அதிகரிப்பதோடு, தேவையில்லாத செலவுகளை அதிகரிக்கும். கீழே படுக்கையறையில் உள்ள அட்டாச்சுடு பாத்ரூம்மிற்கான சில முக்கியமான வாஸ்து டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டிப்ஸ் #1
அட்டாச்சுடு பாத்ரூம்மின் நுழைவாயிலானது வடக்கு அல்லது கிழக்கு சுவற்றில் இருக்க வேண்டும். வாஸ்துப்படி, குளியலறையின் கதவானது தென்மேற்கு திசையில் இருக்கக்கூடாது. மேலும் படுக்கையில் குளியலறை இருப்பதால், பயன்படுத்தாத போது குளியலறையை மூடி வைக்க வேண்டும்.

டிப்ஸ் #2
குளியலறை படுக்கையறையுடன் இருந்தால், தூங்கும் போது கால்களை குளியலறையை நோக்கி நீட்டி தூங்கக்கூடாது. இல்லாவிட்டால், அந்த வீட்டில் உள்ளோரிடையே சண்டைகளை அதிகரிக்கும். மேலும் தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும்.

டிப்ஸ் #3
தற்போது பெரும்பாலான வீடுகளில் வெஸ்டர்ன் கழிவறை உள்ளது. இந்த கழிவறையை பயன்படுத்திய பின் நிறைய பேர் இருக்கையின் மூடியை மூடுவதில்லை. இப்படி மூடாமல் இருந்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மேலும் வீட்டில் நிதி பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

டிப்ஸ் #4
வாஸ்துப்படி வீட்டின் படுக்கையறையில் உள்ள அட்டாச்சுடு பாத்ரூம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அழுக்காக இருந்தால், அது வீட்டில் வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தும். மேலும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனைகள் அதிகரிக்கும்.

டிப்ஸ் #5
வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கையறையுடன் கூடிய அட்டாச்சுடு பாத்ரூம்மின் சுவர், கதவு போன்றவை வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும். மேலும் தரையில் வெளிர் நிற டைல்ஸை தான் பொருத்த வேண்டும். இப்படி செய்வதனால் அந்த வீட்டில் வாஸ்து தோஷம் எதுவும் இருக்காது.



Click it and Unblock the Notifications
