Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
படுக்கையில் அமர்ந்தபடி லேப்டாப் வைத்து வேலை செய்பவரா? மனநிலை சிறப்பாக இருக்க இத படிங்க...
கொரோனா ஊடரங்கால் எந்த ஒரு உடல் செயல்பாடுகளும் இல்லாமல் இதே நிலைமை நீடித்தால் உடலும் மனமும் சீரழிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையை எதிர்கொள்ள நமக்கு கட்டாயம் நேற்மறை ஆற்றல் தேவைப்படுகிறது .
ஊரடங்கு காலமான இன்றைய நாட்களில் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறோம். வீட்டின் மற்ற இடங்களை விட நாம் படுக்கை அறையில் அதிக நேரத்தை செலவிடுகிறோம். படுக்கையில் அமர்ந்தபடி லேப்டாப் வைத்துக் கொண்டு வேலை செய்வது, நேரம் கெட்ட நேரத்தில் உணவு உட்கொள்வது என்று எந்த இலக்கும் இல்லாமல் இந்த நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

எந்த ஒரு உடல் செயல்பாடுகளும் இல்லாமல் இதே நிலைமை நீடித்தால் உடலும் மனமும் சீரழிந்து விடும் என்று கூறப்படுகிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அளவு அதிகரித்துள்ளது. இது உடல் மற்றும் மனதிற்கு ஏற்ற நிலை அல்ல. இந்த நிலையை எதிர்கொள்ள நமக்கு கட்டாயம் நேற்மறை ஆற்றல் தேவைப்படுகிறது . ஆகவே நம்மை சுற்றி இருக்கும் ஆற்றலை நேற்மறையாக மாற்ற சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற பொருட்களை களைந்து விடுங்கள்
முன்பைக் காட்டிலும் நாம் சோம்பேறிகளாக மாறிவிட்டோம். உங்கள் அறையில் உங்களை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்கள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். சுத்தமான இடம் அமைதியை அதிகரிக்கும். உங்கள் அறையில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றிவிட்டு, தேவையுள்ள பொருட்களை ஒழுங்குபடுத்துங்கள். இப்படி செய்வதால் உங்கள் அறையும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
கூடுதலாக , அவ்வப்போது உங்கள் படுக்கையின் விரிப்புகள் மற்றும் போர்வைகள் மற்றும் ஜன்னல் திரைசீலைகள் போன்றவற்றை மாற்றுங்கள். முடிந்த அளவிற்கு வெளிர் மற்றும் அடர் நிறங்களைக் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தலாம்.

செடிகளை வளர்த்திடுங்கள்
பொதுவாக பச்சை நிறம் உடலையும் மனதையும் நேரடியாக பாதிக்கிறது. இந்த நேரத்திற்கு மிகவும் தேவையான அமைதியை இந்த நிறம் வழங்குகிறது. உங்கள் இல்லத்தில் தோட்டம் வைக்கக்கூடிய அளவிற்கு இடம் இல்லாமல் இருந்தால், உங்கள் வீட்டுக்குள்ளேயே அல்லது பால்கனியில் சில செடிகளை வளர்க்கலாம். இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சில செடிகள் நர்சரியில் கிடைக்கின்றன. இவற்றுக்கான நிர்வகிப்பு செலவும் குறைவு.
அல்லது இவற்றிற்கு மாற்றாக சில மூலிகை செடிகளை வளர்க்கலாம். பூச்சிகளைக் கொல்லும் செடிகள் கூட சந்தையில் கிடைக்கின்றன. அவற்றையும் நீங்கள் வளர்க்க முயற்சிக்கலாம். வீட்டில் உள்ள காலியான இடங்களை இவ்விதமாக பயன்படுத்தலாம்.

மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, வாசனை எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்
ஒரு நறுமணமான வாசனை உங்கள் மனநிலையில் நிச்சயம் ஒரு மாற்றத்தை கொண்டு வரும். உங்கள் உடலின் ஆற்றல் குறைவாக இருக்கும் நேரங்களில் நல்ல வாசனையை நுகர்வதால், அந்த நிலை மாறுவதை உணர முடியும். இரவில் நீங்கள் அதிக சோர்வாக உணர்ந்தால் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கலாம் அல்லது வாசனை எண்ணெய் கொண்ட டிப்யூசர் பயன்படுத்தலாம். இதனால் உங்கள் மனம் அமைதியாகும். அந்த நாள் முழுவதும் நேர்மறை ஆற்றல் கிடைக்கும்.

அறையில் சூரிய வெளிச்சம் படும்படி பார்த்துக் கொள்ளவும்
உங்கள் உடலுக்கு வைட்டமின் டி சத்து மிகவும் அவசியம். இந்த முக்கிய வைட்டமின் சூரிய ஒளியில் உள்ளது. ஆகவே சூரிய ஒளி உங்கள் உடலில் படும்படி பார்த்துக் கொள்ளவும். காலையில் சூரியன் உதித்தவுடன் ஒரு மணிநேரம் மற்றும் மாலையில் சூரியன் மறைவதற்கு முன் ஒரு மணிநேரம் சூரிய ஒளியை பெற்றுக் கொள்ள உகந்த நேரமாகும். இந்த நேரத்தில் உங்கள் அறையில் திரைச்சீலைகள் திறந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். ஒரு நாளில் இரண்டு மணிநேரம் உங்கள் அறையின் ஜன்னல் திறந்து இருக்கட்டும். இதனால் நல்ல காற்று அறை முழுவதும் பரவும். லேசான ஒளி பொருந்திய விளக்குகள் கொண்டு இரவில் உங்கள் அறையை அலங்கரிக்கலாம்.

அமைதியான இசையை அனுபவியுங்கள்
ஒரு நாளின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், இதமான மற்றும் தியான நிலையை மேம்படுத்தும் இசையை அனுபவியுங்கள். காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு நீங்கள் மட்டும் இந்த இசையை அனுபவிக்கலாம் அல்லது ஸ்பீக்கர் மூலம் அந்த அறை முழுவதும் இந்த இசையை ஒலிக்கவிடலாம். இந்த இனிமையான இசை உங்கள் உடல் மற்றும் ஆன்மாவிற்குள் நுழையும். இந்த நிலை பல போராட்டங்களை எதிர்கொள்ளும் மனநிலையை உங்களுக்குள் ஊக்குவிக்கும்.
கடினமான நேரங்களில் நேற்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய இந்த 5 குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும். ஆகவே இவற்றை முயற்சித்து உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications











