For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா கிருமிகளிடமிருந்து மளிகை பொருட்களைப் பாதுகாப்பது எப்படி?

சமூக விலகல் என்பது தற்போது முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வெளியில் செல்ல வேண்டியுள்ளது.

|

உலகம் முழுவதும் 11 லட்சத்திற்கு மேல் மக்களை பாதித்துள்ளது கொரோனா வைரஸ். இந்நிலையில் தனி நபர் சுகாதாரம் மற்றும் சுத்தம் ஆகியவை மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது. கூடுதலாக சமூக விலகல் என்பது தற்போது முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வெளியில் செல்ல வேண்டியுள்ளது.

COVID-19 Outbreak: Tips To Clean Your Groceries During Coronavirus

வெளியில் சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் போன்றவற்றை கொண்டு வரும் போது, அவற்றில் கிருமிகள் இல்லாத படி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். எப்போது வெளியில் சென்று மளிகை பொருட்களை வாங்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். மேலும் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்ற கேள்வி எழலாம். அவற்றைப் பற்றி இப்போது காண்போம். வீட்டிற்கான மளிகை பொருட்கள் வாங்கும் போது சிறப்பான கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் செல்லுங்கள்

கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் செல்லுங்கள்

உணவு மற்றும் மளிகை பொருட்களுக்கான தேவை எந்நாளிலும் உண்டு. எனவே அவற்றை கடைகளில் சென்று வாங்குவது அவசியம் என்றாலும் அடிக்கடி வெளியில் சென்று வருவதைத் தவிர்க்கவும். இதற்கு முடிவாக, அத்தியாவசிய பொருட்களை ஒரே முறை வாங்கி வீட்டில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அவ்வப்போது கடைக்கு சென்று வருவது குறையும். மேலும் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களைத் தவிர்க்கவும். எல்லோரும் சென்று வாங்கும் நேரத்தில் நீங்களும் கடைக்கு செல்வதால் கிருமி தாக்கும் அபாயம் உண்டு. மேலும் கடையில் கடைக்காரரிடம் போதிய இடைவெளி விட்டு பொருட்களை வாங்குங்கள்.

கையுறை அணிந்து கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்

கையுறை அணிந்து கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்

மளிகை கடைக்கு செல்லும் போது கைகளில் கையுறை அணிந்து கொள்ளுங்கள். கடைக்கு செல்வதற்கு முன்பு ஒரு லிஸ்ட் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் கடையில் கால தாமதம் ஏற்படாமல் விரைவாக வேலையை முடித்து கொண்டு திரும்பலாம் . வீட்டிற்கு வந்தவுடன் கைகளை சுத்தமாக கழுவ மறக்க வேண்டாம். கடையில் பொருட்களை வாங்கும் போது செல்போன் பயன்படுத்த வேண்டாம். அல்லது அவற்றை பயன்படுத்துவதற்கு முன்னர் சீராக சுத்தம் செய்து கொண்டு பயன்படுத்துங்கள் . மேலும் அடிக்கடி முகத்தை தொட வேண்டாம். கைகளில் க்ளோவ்ஸ் அணிந்திருந்தாலும் அவ்வப்போது முகத்தை தொடுவதால் தொற்று பரவும் வாய்ப்பு உண்டாகிறது.

உடல் நிலை சரியில்லை என்றால் கடைக்கு செல்ல வேண்டாம்

உடல் நிலை சரியில்லை என்றால் கடைக்கு செல்ல வேண்டாம்

உங்களுக்கு மிதமான காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால், வீட்டை விட்டு வெளியே அடி எடுத்து வைக்க வேண்டாம். இந்த நிலையில் நீங்கள் வெளியில் செல்வதால் எளிதாக தொற்று பாதிப்பு உண்டாகலாம். ஆகவே நீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் நோய் பாதிக்கப்பட்டிருந்தால் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்த்து கொள்ளவும்.

60 வயதிற்கு மேல் இருப்பவர்கள் போன் அல்லது ஆன்லைனில் மளிகை பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்

60 வயதிற்கு மேல் இருப்பவர்கள் போன் அல்லது ஆன்லைனில் மளிகை பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்

கொரோனா பாதிப்பு குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் அல்லது நாட்பட்ட மருத்துவ பாதிப்பு உள்ளவர்களை அதிகம் தாக்குகிறது. ஆகவே வயது முதிர்ந்தவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஆகவே 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியில் செல்வதை இந்நாட்களில் தவிர்த்துக் கொள்வது நல்லது. இந்த சூழ்நிலையில் அவர்கள் வீட்டின் தேவைக்கு மளிகை பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம் . அல்லது மளிகை கடைக்கு போன் செய்து பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்து தரும்படி கேட்டுக் கொள்ளலாம். வீட்டில் வாசல் பகுதியில் பொருட்களை வைத்து விட்டுச் செல்ல சொல்லி விடலாம். அவற்றை எடுக்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவும். மளிகை பொருட்களை எடுத்தவுடன் கைகளை சுத்தமாக கழுவி அந்த இடத்தை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

COVID-19 Outbreak: Tips To Clean Your Groceries During Coronavirus

It is important to disinfect groceries and their containers because many people have their hands on them, where the virus can be infected.
Desktop Bottom Promotion