Just In
- 21 min ago
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- 1 hr ago
கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள்!
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (16.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- 18 hrs ago
கோதுமை ரவை பாயாசம்
Don't Miss
- News
"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. நாக்கு தழுதழுத்து, கண்கள் பனித்த மோடி!
- Movies
அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Automobiles
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீட்டில் இருந்தே ஆபிஸ் வேலை செய்றீங்களா? கொரோனா தாக்காமல் இருக்க இத தினமும் செய்யுங்க...
சுத்தம் சுகம் தரும் சுத்தம் சோறிடும் என்று கூறுவார்கள். ஆம், நம் சுத்தம் தான் நாம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. எனவே தான் கொரோனா போன்ற கால கட்டத்தில் வீட்டை சுத்தம் செய்வது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் வீட்டை மட்டும் சுத்தம் செய்தால் போதுமா. கண்டிப்பாக இல்லை, நாம் அத்தியாவசியமாக அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
குறிப்பாக பணி சார்ந்த பொருட்களை சுத்தம் செய்வது கொரோனா வைரஸ் மட்டுமல்ல மற்ற வைரஸ்களும் உங்களை தாக்காமல் இருக்க உதவி செய்யும் என்கிறார்கள் மருத்துவர்கள். நாம் தினசரி பயன்படுத்தும் லேப்டாப், மொபைல் போன், டேபிள் போன்றவை எப்பொழுதும் நம் கைகளால் பயன்படுத்துகிறோம். வெளியில் சென்று வந்ததும் முதலில் தொடுவது நம் மொபைல் ஆகத் தான் இருக்கும். அதனால் இந்த மாதிரியான பொருட்களில் எல்லாம் வைரஸ்கள் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் எல்லா இடுக்குகளிலும் வைரஸ்கள் பதுங்கி கொண்டு அதை நாம் தொடும் போது நம் கைகளின் வழியாக மூக்கு மற்றும் வாயுக்குள் நுழைந்து விடுகிறது. இது குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் இதை எப்படி சுத்தம் செய்யலாம் வாங்க தெரிஞ்சுப்போம்.

உங்க டேபிளில் கொரோனா வைரஸ் பதுங்க முடியுமா?
நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, கொரோனா வைரஸ் உங்கள் மேசையில் பதுங்க வாய்ப்புள்ளது என்கிறது. அந்த வைரஸ் பரவுவது ஒரு வேளை காற்றிலிருந்தோ அல்லது பாதிக்கப்பட்ட மேற்பரப்புகளை தொடுவதில் இருந்தோ வரலாம். ஏனெனில் விஞ்ஞானிகள் கூற்றுப்படி வைரஸ் வெவ்வேறு மேற்பரப்புகளில் வாழ முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
* காற்றில் கொரோனா வைரஸ் 3 மணி நேரம் வாழக் கூடியது.
* காப்பர் போன்ற உலோகத்தில் 4 மணி நேரம்
* அட்டை போன்றவற்றில் 24 மணி நேரமும்
* எஃகு மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களில் 3 நாட்கள் வரையும் நீடிக்கும்.
எனவே நம் பணி சார்ந்த பொருட்கள் அனைத்தும் மேற்கண்ட பொருட்களால் ஆக்கப்பட்டு இருப்பதால் கொரோனா வைரஸ் அந்த பரப்பில் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. எனவே உங்க பணி சார்ந்த பொருட்களை கிருமி நீக்கம் செய்ய சானிடைசர் போன்றவற்றை பயன்படுத்துங்கள். அதில் 70 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

டேபிள் சுத்தம்
நீங்கள் வேலை பார்க்கும் டேபிளை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் தூசி, அழுக்கு மற்றும் வைரஸ் போன்ற அபாயத்தை துடைத்தெறிய முடியும்.
எப்படி செய்ய வேண்டும்?
* டேபிள் மீதுள்ள பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து விட்டு டேபிளை முதலில் காலி செய்யுங்கள்.
* இப்பொழுது சானிடைசர் போன்ற கிருமி நாசனியை அந்த டேபிளின் மீது ஸ்ப்ரே செய்து விடுங்கள்.
* ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்து டேபிளை நன்றாக துடைத்து எடுங்கள்.

கீ போர்டு
வீட்டிலிருந்து வேலை செய்யும் போது நாம் முக்கியமாக சுத்தம் செய்ய வேண்டிய பொருள் கீ போர்டு. ஏனெனில் வெளியில் காய்கறி வாங்க கடைக்கு போய்ட்டு வந்து கீ போர்டை தொடும் போது பிரச்சனை உண்டாக வாய்ப்புள்ளது. மேலும் கீ போர்டு பிளாஸ்டிக் மற்றும் எஃகு போன்ற பொருட்களால் ஆனது. எனவே அதை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.
சுத்தம் செய்யும் முறை:
இப்பொழுது லேப்டாப்டை அணைத்து விட்டு ஒரு பருத்தி துணியில் ஆல்கஹால் கொண்ட சானிடைசர் கரைசலை தெளித்து துடைத்து எடுங்கள். கீ போர்டில் உள்ள இடைவெளிகளையும் நன்றாக சுத்தம் செய்யுங்கள்.

மொபைல் போன்
நாம் அடிக்கடி கைகளால் தொடும் ஒரு பொருள் என்றால் தற்போது மொபைல் போன் தான். எனவே இதன் மூலம் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே மொபைல் போனை சுத்தப்படுத்துவதும் அவசியம்.
சுத்தம் செய்யும் முறை:
ஐசோபிரைல் ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்யுங்கள். ஒரு பருத்தி துணியில் ஆல்கஹால் சானிட்ரைசர் தெளித்து மொபைல் போனை நன்றாக துடைத்து எடுக்கவும். தண்ணீர் கொண்டோ மற்ற பொருட்களை கொண்டோ சுத்தம் செய்து விடாதீர்கள்.

வாட்டர் பாட்டில்
நீங்கள் வீட்டில் இருந்தே ஆபிஸ் வேலை செய்பவராக இருந்தால் கண்டிப்பாக வாட்டர் பாட்டில் உங்க அருகிலேயே இருக்கும். பெரும்பாலான வாட்டர் பாட்டில்கள் பிளாஸ்டிக் மற்றும் எஃக்கால் ஆனது. எனவே நீங்கள் வாட்டர் பாட்டிலையும் சுத்தம் செய்வது அவசியமாகிறது.
சுத்தம் செய்யும் முறை:
பாட்டிலை இரண்டு மணிநேரம் வெந்நீரில் ஊற வைத்து பிறகு சோப்பு போட்டு நன்றாக கழுவுங்கள். சானிடைசரை விட சோப்பு சிறந்த ஒன்று. மேலும் வாட்டர் பாட்டில் குடிப்பதற்காக பயன்படுத்துவதால் சானிடைசர் பயன்படுத்த வேண்டாம்.

பேனா ஹோல்டர்
நாம் பணி சார்ந்த விஷயங்களை குறிக்க பேனா, பென்சில் மற்றும் இரப்பர் போன்ற பொருட்களை அதிகமாக பயன்படுத்தவும். வீடியோ வழியான மீட்டிங், கோப்புகளில் குறிப்பெடுக்க இது போன்ற எழுதுகோல்கள் தேவைப்படும். எனவே நம் கைகளால் இதை அதிகமாக பயன்படுத்துவதால் இந்த சின்னஞ்சிறிய பொருட்களையும் சுத்தம் செய்வது அவசியமாகிறது.
சுத்தம் செய்யும் முறை:
உங்க பேனா ஸ்டாண்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் எடுத்து ஒவ்வொன்றாக சுத்தம் செய்யுங்கள்.