Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில டிப்ஸ்....
கோடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால், பலரது வீடுகளில் மின்விசிறி எப்போதும் சுற்றிக் கொண்டே இருக்கும். இக்காலத்தில் கடவுளைப் போல மின்சாரத்தை கொண்டாட வேண்டும். இல்லாவிட்டால், மின் கட்டணம் அதிகரித்து, பின் செலவை அதிகரித்துவிடும்.
ஆகவே கிடைக்கும் சிறிதளவு மின்சாரத்தையும், வீணாக்காமல் எவ்வாறு மிச்சப்படுத்தலாம் என்று மின்சாரத்துறை அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சுவிட்ச் ஆப்
* ஒரு வீட்டின் அனைத்து அறைகளிலும் மின்சார விளக்கை எறிய விடாதீர்கள். எந்த அறைக்கு செல்கிறீர்களோ அப்பொழுது விளக்கை எரிய விடலாம். அதுவரை சுவிட்ச் ஆப் செய்யவும்.
* ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு செல்லும் போது, அந்த அறையில் இயங்கிக் கொண்டிருக்கும் பேன், லைட், டிவி ஆகியவற்றின் சுவிட்களை அணைத்துவிட்டு செல்லுங்கள்.

சுவிட்ச் ஆப்
மிக்ஸி, ஃப்ரிட்ஜ், அயர்ன் பாக்ஸ், கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் தேவை இல்லாதபோது. அவற்றின் பிளக்கை பிடுங்கி வைத்து விடுங்கள் அல்லது சுவிட்ச் ஆப் செய்யுங்கள்.

சுவிட்ச் ஆப்
மஞ்சள் ஒளி உமிழும் குண்டு பல்புகளை ஏறக்கட்டுங்கள். மின்சார சிக்கனம் தரும் மின் விளக்குகளை பொருத்துங்கள். பகல் நேரத்தில் வெளிச்சம் தரக்கூடியவாறு அறைகளை வடிவமையுங்கள்.

ஃப்ரிட்ஜ் கவனம்
கோடை காலத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுவது ஃப்ரிட்ஜ் தான். எனவே ஒவ்வொரு முறை ஃப்ரிட்ஜை திறக்கும் போதும் அதிக அளவில் மின்சாரம் வீணாகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எனவே ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூட வேண்டம்.

ஏசியில் மின் சிக்கனம்
கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையில் சூரிய ஒளி புகாதவாறு அடர்த்தியான திரைச்சீலைகளை தொங்க விட வேண்டும். தேவையற்ற பொருட்களை ஏசி அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஏசியில் மின் சிக்கனம்
கண்ணாடி ஜன்னல்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல், கதவுகளில் ஏதேனும் இடைவெளியோ, துளைகளோ இருந்தால் சரிசெய்துவிட வேண்டும். குளிர்ச்சி போதுமான அளவு ஏற்பட்ட பிறகு, ஏசியிலுள்ள விசிறியையோ, அறையிலுள்ள ஃபேனையோ பயன்படுத்தலாம்.

ஏசியில் மின் சிக்கனம்
பழைய ஏசியெனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம். 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசியை பயன்படுத்துவது ஆற்றல் சேமிப்புக்கு உதவும்.
மேற்கூறிய அலோசனைகளை பின்பற்றினால் மின்சாரம் சிக்கனம் ஏற்படுவதோடு வீட்டிற்கும், நாட்டிற்கும் பலன் கிடைக்கும். மின்சார சிக்கனத்தினால் பணமும் சேமிக்கப்படும்.



Click it and Unblock the Notifications
