Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
படுக்கையில் படிந்த செல்லப் பிராணியின் சிறுநீர் கறையை நீக்க சில சூப்பர் டிப்ஸ்...
அனைத்து வீடுகளிலும் செல்லமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளானது, அந்த வீட்டில் ஒரு உறுப்பினராகவே கருதப்படுகிறது. அப்படி ஒரு உறுப்பினராக கருதப்படும் செல்லப் பிராணிகளானது வீட்டின் எந்த ஒரு இடத்திற்கும் எவ்வித தடையின்றி செல்ல அனுமதிக்கப்படுவதால், அவை நாம் படுக்கும் படுக்கை, உட்காரும் ஷோபா போன்றவற்றில் அமர்வது, தூங்குவது என்று செய்கின்றன.
இப்படி செய்வதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவை படுக்கை மற்றும் ஷோபா போன்றவற்றில் சிறுநீர் கழித்துவிட்டால், என்ன செய்வீர்கள்? அவைகளின் சிறுநீர் படுக்கை மற்றும் ஷோபாவில் இருந்தால், அவை கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, கறைகளையும் தங்கச் செய்துவிடும்.
இங்கு அப்படி உங்கள் செல்லப் பிராணிகளானது படுக்கை மற்றும் ஷோபாவில் சிறுநீர் கழித்துவிட்டால், அதன் கறையைப் போக்க சில எளிய வழிகளை உங்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை பரிந்துரைக்கிறது. அவை என்னவென்று படித்து தெரிந்து, அதன்படி செய்து வாருங்கள்.

உடனே சுத்தம் செய்யவும்
உங்கள் செல்லப் பிராணியானது படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அப்போது உடனே ஈரத்தை உறிஞ்சும் துணி அல்லது பேப்பர் கொண்டு உடனே சுத்தம் செய்து, பின் ஈரமான துணியைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இதனால், படுக்கையில் செல்லப் பிராணியின் சிறுநீர் கறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

சூரிய வெளிச்சம்
ஈரமான துணியைக் கொண்டு படுக்கையை சுத்தம் செய்த பின்னர், அதனை சூரிய வெளிச்சத்தில் வைத்து எடுக்க வேண்டும். இதனால், படுக்கையில் படிந்த சிறுநீரின் துர்நாற்றத்தைப் போக்கலாம். குறிப்பாக இந்த செயலை உடனடியாக செய்ய வேண்டும்.

சோப்பு தண்ணீர்
செல்லப் பிராணியின் சிறுநீர் கறை படியாமல் இருக்க வேண்டுமானால், ஈரமான துணியைக் கொண்டு துடைத்து எடுத்த பின்னர், சோப்பு தண்ணீர் கொண்டு ஒருமுறை துடைத்து எடுத்துவிட்டு, பின் மீண்டும் சுத்தமான நீரில் நனைத்த துணியைக் கொண்டு சுத்தம் செய்து, சூரிய வெளிச்சத்தில் வைத்தால், செல்லப் பிராணியின் துர்நாற்றத்தைப் போக்கலாம்.

லிஸ்டரின் முறை
மௌத் வாஷ்ஷான லிஸ்டரினை நீரில் கலந்து, அதனை செல்லப் பிராணி சிறுநீர் கழித்த இடத்தில் தடவி, பின் ஈரமான துணியைக் கொண்டு, துடைத்து எடுத்து, பின்பு அதனை சூரிய வெளிச்சத்தில் வைத்து உலர வைக்க வேண்டும்.

வினிகர் மற்றும் பேக்கிங் சோடா
இந்த முறையில் தண்ணீரில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அதனை ஒரு துணியில் நனைத்து, சிறுநீர் படிந்த இடத்தை துடைத்து, பின் அந்த இடத்தில் வினிகரை தடவி 1 நிமிடம் ஊற வைத்து, பின் உலர்ந்த துணி அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications