Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பெரிய இழப்புகளை சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மூட்டைப்பூச்சிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக்குறிப்புகள்!!!
உங்களுக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தரக்கூட்டிய சிறு பூச்சி வகைகளைச் சார்ந்தவை மூட்டைப்பூச்சிகள். வெப்பப் பிரதேசங்களில் சாதாரணமாக இவை காணப்படும். இவற்றிற்கு உணவு மனித இரத்தம் தான். எனவே, உங்கள் வீட்டு மரச்சாமான்கள் மற்றும் படுக்கைகளுக்குள் இவை புகுந்துகொள்ளுமுன் இவற்றை விரட்டுவது மிகவும் முக்கியம்.
மூட்டைப்பூச்சிகள், சாதாரணமாகவே, பகல் நேரங்களில், படுக்கைகள், பாய், தலையணை மற்றும் தலையணை உறைகளுக்குள் வசிக்கும் இயல்பு கொண்டவை. இரவு நேரங்களில் இருப்பிடத்தை விட்டு வெளியில் ஊர்ந்து வந்து இரை தேடத் துவங்கும். எனவே இவற்றைக் கண்டுபிடித்து நீக்குவது சற்று தொல்லையான விஷயம் தான்.
இதுப்போன்று வேறு: பல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்!!!
எனினும் இவற்றை எப்படியாவது வீட்டை விட்டு விரட்டியாக வேண்டுமல்லவா? இதோ மூட்டைப்பூச்சிகளைக் கண்டுபிடித்து விரட்டுவதற்கு சில எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

வெற்றிடப் பம்புகளின் மூலம் உறிஞ்சுதல்
வேக்யூம் க்ளீனரைக் கொண்டு, வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் உறிஞ்சி சுத்தப்படுத்துங்கள். அனைத்து பூச்சிகளையும் இதன்மூலம் அகற்ற முடியாது. எனினும், ஒரு சிலவாவது பிடிபடும். அதிலும் அவற்றைக் கொண்டு, மெத்தைகள், குஷன் வைத்த சோபா, நாற்காலிகள், தலையணைகள், தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகள், தரைவிரிப்புகள் ஆகியவற்றை, சுத்தப்படுத்துங்கள்.

கழுவுதல்
தண்ணீர் கொண்டு கழுவக் கூடியவற்றை தண்ணீர் கொண்டு கழுவுங்கள். படுக்கை விரிப்புகள், குஷன்கள், பொம்மைகள் ஆகியவற்றை நேரடியாகக் கொதிக்கும் தண்ணீரில், போட்டு எடுத்து அதன் பின் அலசுங்கள். படுக்கை விரிப்புகள் போன்ற பெரிய பொருட்களுக்கு இம்முறை ஒத்துவராது. எனவே அடுத்த குறிப்பினைப் பின்பற்றுங்கள்.

சூரிய ஒளியில் காய வைத்தல்
நேரடியான சூரிய ஒளி மூலம் இவற்றை விரட்டமுடியும். மூட்டைப்பூச்சிகள் வெப்பத்தைத் தாங்க வல்லவை. எனவே மிகவும் அதிகமான சூட்டைத் தரக்கூடிய நல்ல சூரிய வெளிச்சமே பயன் தரத்தக்கது. 60 முதல் 80 டிகிரி வெப்பத்தில் இவை சாகக்கூடும். எனவே நல்ல வெயில் படும்படியான நேரத்தில், உங்கள் வீட்டு மொட்டை மாடியில் படுக்கை விரிப்புகள், தலையணைகள் மற்றும் நாற்காலிகளைப் போட்டுக் காய வையுங்கள்.

டிரையர் கொண்டு உலர்த்துதல்
மேற்சொன்ன முறைகள் அனைத்தையும் செய்து பார்த்தாலும் மூட்டைப்பூச்சிகள் ஒழியவில்லையா? துணிகள் அனைத்தையும் டிரையரில் போட்டு உலர்த்துங்கள். டிரையரிலிருந்து வரும் வெப்பம் கண்டிப்பாக அவற்றைக் கொன்றுவிடும்.

இயற்கையான பூச்சிக்கொல்லி
குழந்தைகளுக்கும், வீட்டு செல்லப் பிராணிகளுக்கும் பாதுகாப்பான இயற்கையான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள். இயற்கையான மூட்டைப்பூச்சிக்கொல்லி ஸ்ப்ரேக்களும், பவுடர்களும் மார்க்கெட்டில் ஏராளமாகக் கிடைக்கின்றன. DDT பவுடரைப் பயன்படுத்த வேண்டாம். இதன் மூலம் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளதாம். மேலும் மூட்டைப்பூச்சி விஷயத்தில் இதன் செயலாற்றல் கொஞ்சம் குறைவுதான்.

இலவங்க எண்ணெய்
இலவங்க எண்ணெய் மூட்டைப்பூச்சிகளைக் கொல்லும் தன்மை படைத்தவை. இந்த எண்ணெய் பட்டதுமே மூட்டைப் பூச்சிகள் வெடித்து இறந்துவிடும். எனவே, இலவங்க எண்ணெயினை ஸ்ப்ரே செய்யுங்கள். மூட்டைப்பூச்சிகள் மடிந்துவிடும்.

லவெண்டர் எண்ணெய்
லவெண்டர் எண்ணெய் கூட மூட்டைப்பூச்சிகளுக்கு சிறந்த எதிரியாகும். இதன் மணத்தை மூட்டைப்பூச்சிகள் விரும்புவதில்லை. எனவே லவெண்டர் எண்ணெய் கொண்டு ஸ்ப்ரே செய்தாலும் அது சிறந்த பலனைத் தரும். அதே நேரம் லவெண்டர் எண்ணெய் நமக்கு சிறந்த நறுமணத்தைக் கொடுக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஆம். மூட்டைப்பூச்சிகள் ஒழிவதோடு, வீடு முழுதும் நறுமணம் கமழும்.



Click it and Unblock the Notifications