Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க
அடிப்பிடித்துள்ள பாத்திரத்தை சுத்தம் செய்ய சில சூப்பர் டிப்ஸ்...
சமைக்கும் போது கவனமின்மையால் உணவு அடிப்பிடிப்பது சாதாரணம் தான். ஆனால் அப்படி அடிப்பிடிக்கும் போது உணவு வீணாவதுடன், பாத்திரத்தின் அழகும் தான் கெடுகிறது. மேலும் அப்படி அடிப்பிடித்த பாத்திரத்தில் சமைத்தால், இன்னும் அடிப்பிடித்த நாற்றமானது வீசும். ஆகவே அடிப்பிடிக்கும் பாத்திரத்தை நன்கு சுத்தமாக கழுவுவதற்கு ஒருசில ட்ரிக்ஸ்களை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.
பாத்திரத்தில் இருந்து வெளிவரும் மீன் நாற்றத்தை போக்க சில டிப்ஸ்...
இந்த முறைப்படி அடிப்பிடித்த பாத்திரத்தை தேய்த்து கழுவினால், அவற்றில் உள்ள கறைகள் எளிதில் போய்விடும். மேலும் பாத்திரமும் பாழாகாமல் இருக்கும். சரி, இப்போது அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய உதவும் சில பொருட்களைப் பார்ப்போமா!!!

பேக்கிங் சோடா
அடிப்பிடித்த பாத்திரத்தை பேக்கிங் சோடா கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், அதில் உள்ள அடிப்பிடித்த கறையானது நீங்கிவிடும்.

கார்பனேட்டட் பானங்கள்
அடிப்பிடித்த பாத்திரத்தில் உள்ள கறையை போக்க, குறிப்பாக அலுமினிய பாத்திரத்தில் பிடித்த கறையைப் போக்க, சிறிது கொக்கோ கோலாவை பாத்திரத்தில் ஊற்றி, மிதமான தீயில் சூடேற்றி, பின் தேய்த்து கழுவினால், கறைகள் போய்விடும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை மற்றொரு சிறப்பான பொருள். அதிலும் அடிப்பிடித்த பாத்திரத்தில் உள்ள கறையைப் போக்க, எலுமிச்சையைப் பயன்படுத்தினால், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது கறையை எளிதில் போக்கும்.

உப்பு
உணவுக்கு சுவையைத் தரும் உப்பும் ஒரு சூப்பரான சுத்தப்படுத்த உதவும் பொருட்களில் ஒன்று. ஆகவே உப்பை அடிப்பிடித்த பாத்திரத்தில் தூவி, நன்கு தேய்த்து கழுவினால், பாத்திரத்தில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

தக்காளி சாஸ்
தக்காளி சாஸ் அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய உதவும் என்பது தெரியுமா? ஆம், தக்காளியில் உள்ள ஆசிட்டானது, ஸ்டீல் பாத்திரத்தில் உள்ள கறைகளை எந்த ஒரு பாதிப்பும் இன்றி போக்கும்.

வினிகர்
வினிகரில் உள்ள அசிடிக் ஆசிட், பாத்திரத்தில் படிந்த கறைகளை விரைவில் வெளியேற்றும். அதிலும் குறிப்பாக அலுமினிய பாத்திரத்தில் படிந்த கறைகரள சீக்கிரம் போக்கிவிடும்.

தயிர்
தயிர் அடிப்பிடித்த பாத்திரத்தில் படியும் கறைகளை மெதுவாகத் தான் போக்கும். அதிலும் பால் அடிப்பிடிக்கும் பாத்திரத்தை சுத்தம் செய்யப் பயன்படுத்தினால், அது பாத்திரத்தில் உள்ள கறைகளைப் போக்கும்.

சுடுநீர்
சுடுநீரை அடிப்பிடித்த பாத்திரத்தில் உடனே ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்தால், பாத்திரத்தில் உள்ள உணவுப் பொருட்களானது மிதப்பதைக் காணலாம்.

வெஜிடேபிள் ஆயில்
வெஜிடேபிள் ஆயிலை அடிப்பிடித்த பாத்திரத்தில் தடவினால், அதில் உள்ள கசடுகளானது எளிதில் வந்துவிடும். பின் அதனை தேய்த்து கழுவினால், பாத்திரம் சுத்தமாகிவிடும்.

ஒயின்
அடிப்பிடித்த பாத்திரத்தை எப்படி ஈஸியாக சுத்தம் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தால், ஒயினைப் பயன்படுத்துங்கள். ஒயினானது வினிகர் போன்றே, அடிப்பிடித்த பாத்திரத்தில் உள்ள கசடுகளை மென்மையாக்கி, சீக்கிரம் வெளியேற்றிவிடும்.



Click it and Unblock the Notifications
