Latest Updates
-
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா?
வீட்டின் கூரையை சுத்தப்படுத்த சில எளிய வழிகள்!!!
பொதுவாக வீட்டை அலங்கரிக்க விதவிதமான அழகிய பர்னிச்சர்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை அனைவரும் பயன்படுத்துவார்கள். அதே போல் வீட்டையும் அவ்வளவு சுத்தமாக பராமரிப்பார்கள். வீட்டின் தரையை துடைத்து பளபளப்பாக வைத்திருப்பார்கள். ஆனால் எவ்வளவு தான் சுத்தமாக வைத்தாலும் கூட உங்கள் வீட்டின் கூரை சுத்தமாக இல்லையென்றால் உங்கள் உழைப்பு எல்லாம் வீணே. கூரை என்பதும் கூட நம் வீட்டை சேர்ந்த ஒரு பகுதியே. அதனால் வீட்டின் கூரையை சுத்தப்படுத்துவதும் மிகவும் முக்கியம். எந்த ஒரு வீட்டிலும் பாசி படிந்த சுத்தமில்லாத கூரைகளை வைத்திருக்க கூடாது. அதனால் வீட்டை சுத்தப்படுத்தும் போது கூரைகளையும் சேர்த்து சுத்தம் செய்யுங்கள்.
கூரைகள் என்பது வீட்டின் அங்கம் கிடையாது என்பது சில பேரின் எண்ணமாகும். அதனால் அதனை சுத்தம் செய்ய அவர்கள் நினைப்பதே இல்லை. அதனால் கூரைகளின் நிலைமையை கூட அவர்கள் சரிப்பார்ப்பதே கிடையாது. ஆனால் இப்போதெல்லாம் கூரைகளை சுத்தம் செய்வதற்கு ரொம்பவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனால் தான் என்னவோ கூரைகளை சுத்தம் செய்பவர்களை விசேஷமாக சிலர் தேடி செல்கின்றனர். ஒரு வேளை உங்கள் வீட்டின் கூரையை நீங்களே சுத்தம் செய்ய விரும்பினால் அதற்கு சுலபமான சிறந்த வழிகள் பல உள்ளது.

உங்கள் கூரைகளை நீங்களாகவே சுத்தம் செய்ய, இதோ உங்களுக்காக சில டிப்ஸ்...
ப்ரெஷர் மூலம் நீரூட்டல்
உங்கள் கூரைகளில் பதிந்திருக்கும் அழுக்குகளையும் பாசி கரைகளையும் சுத்தப்படுத்த அதிக ப்ரெஷரில் நீரூட்டுவது கூரைகளை சுத்தப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். அதிக ப்ரெஷரில் நீர் பாய்ச்சப்படும் போது நீரின் அந்த வலிமை அழுக்கையும் பாசியையும் கூரைகளில் இருந்து விழச் செய்யும். கூரைகளை சுத்தப்படுத்தும் முறைகளில் இது ஒரு பொதுவாக பயன்படுத்தப் படும் ஒரு வழிமுறையாகும்.
கைகளால் சுத்தப்படுத்துதல்
உங்கள் வீட்டின் கூரையில் சிறிது அழுக்கு பதிந்திருந்தால், அந்த தூசிகளை உங்கள் கைகளாலேயே அகற்றலாம். இவ்வகை தூசிகளை அகற்ற சிக்கனமான சிறந்த வழி இதுவே. கூரையை சுத்தப்படுத்திய பின்பு அதனை பராமரிக்க இதுவே சிறந்த வழி.
பாசியை சுரண்டி எடுத்தல்
கூரையில் பதிந்திருக்கும் பாசியை நீக்கி அதனை சுத்தப்படுத்த அதனை சுரண்டி எடுக்கலாம். இந்த முறையை கையாண்டால் அதிக நேரத்தையும் உழைப்பையும் எடுக்கும். ஆனால் சுத்தப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். இந்த முறையை பின்பற்றினால் கூரையில் இருக்கும் கடைசி துளி பாசி வரை நீக்கி விடலாம். சுரண்டி எடுத்த பின் அந்த இடத்தில் குறிப்பிட்ட ரசாயனத்தை ஸ்ப்ரே செய்தால் அந்த இடத்தில் பாசியின் வளர்ச்சி மீண்டும் ஏற்படாது.
குளோரின் பயன்படுத்தி கழுவுதல்
குளோரினில் நச்சுக் கொல்லி மற்றும் நிறம் நீக்கும் (ப்ளீச்சிங்) குணங்கள் அடங்கியுள்ளதால் அதனை கூரையை சுத்தப்படுத்த பயன்படுத்தலாம். குளோரின் என்பது ரசாயனம் என்பதால் அதனை உபயோகப்படுத்துவதில் கவனம் தேவை. குளோரினுடன் சேர்த்து சோடியம் ஹைபோக்ளோரைட் சொல்யூஷனை சேர்த்து கூரைகளை கழுவ வேண்டும். இதனை பயன்படுத்துவதால் கூரையில் பதிந்திருக்கும் அழுக்கும் பாசிகளும் நீங்கும்.
பசுமை முறை
கூரைகளை கழுவ பசுமை முறை ஒன்றும் இருக்கிறது. அதற்கு ப்ளீச் அல்லாத ரசாயனங்களையும் பொருட்களையும் பயன்படுத்த வேண்டும். அவ்வகை ரசாயனங்களும் ஷாம்பூக்களும் இப்போது சந்தையில் கூட கிடைக்கிறது. அவைகளை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. மேலும் அனைத்து வகை கூரைகளிலும் இதனை பயன்படுத்தலாம். ப்ளீச் அல்லாத ரசாயனங்களை பயன்படுத்தி கூரைகளில் உள்ள பாசி, பாசிப்பூஞ்சை போன்றவற்றை நீக்கி விடலாம்.
துடைப்ப முறை
கூரைகளில் அதிக தூசி, பாசி அல்லது கருப்பு புள்ளிகள் பதிந்திருந்தால் அதனை துடைப்பக்கட்டையை பயன்படுத்தி துடைக்கலாம். இது எளிய முறை மட்டுமல்லாமல் சிக்கனமான வழிமுறையாகும். கூரையில் பதிந்திருக்கும் ஒட்டடையில் தூசி, அழுக்கு, காய்ந்த இலைகள் என பல இருக்கும். அதனால் அவைகளை துடைப்பக்கட்டையை பயன்படுத்தி கூரையை சுத்தப்படுத்துவது என்பதும் ஒரு சிறந்த வழியாகும்.
தொழில் ரீதியான உதவி
உங்கள் கூரைகளில் பதிந்திருக்கும் அழுக்கை நீங்களாகவே சுத்தம் செய்ய முடியாத அளவிற்கு அதிகரித்து விட்டால், உதவியை நாடுங்கள். கூரையை சுத்தம் செய்ய தொழில் ரீதியான நிறுவனங்கள் பல உள்ளது. சுத்தப்படுத்துவதற்கு கொஞ்சம் கூலி வாங்கி கொண்டு உங்களுக்காக உங்கள் வீட்டு கூரையை சுத்தம் செய்து கொடுப்பார்கள். கூரையை சுத்தம் செய்ய நேரம் இல்லாதவர்கள் இந்த முறையை கையாளலாம்.



Click it and Unblock the Notifications
