Latest Updates
-
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும்
காய்கறி நறுக்கப் பயன்படும் கத்தியை, இப்படியும் யூஸ் பண்ணலாமா!!!
அனைவரது வீட்டிலுமே காய்கறி நறுக்கும் கத்தி இருக்கும். அத்தகைய கத்தி, காய்கறிகளை நறுக்குவதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று நினைக்க வேண்டாம். அது பல புதுமையான வழிகளிலும் பயன்படுகிறது. மேலும் வீட்டில் செய்யப்படும் வேறுபல காரியங்களுக்கும் கத்தியானது பயன்படுகிறது. அத்தகைய வழிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து, கத்தியை சமையலறைக்கு மட்டும் பயன்படுத்தாமல், இதர வேலைகளுக்கும் பயன்படுத்துங்கள்.
கத்தியை பயன்படுத்தும் சில புதுமையான வழிகள்:
* நிறைய வீடுகளில் ஸ்க்ரூ ட்ரைவர் நிச்சயம் இருக்கும். ஆனால் அது இருக்கும் இடம் தான் பலருக்கு தெரியாது. அவ்வாறு தெரியாத போது, சமையலறையில் உள்ள கத்தியை ஸ்க்ரூ ட்ரைவர் போன்று பயன்படுத்தலாம்.

* குழந்தைகளது பென்சிலை கூர்மையாக்கும் கருவி அவசரத்திற்கு காணாமல் போய்விட்டால், அப்போது கத்தியைக் கொண்டு எளிதில் கூர்மையக்கலாம். அக்காலத்தில் எல்லாம் பென்சிலை கூர்மையாக்குவதற்கு ப்ளேடு தான் பயன்படுத்தினார்கள். அப்போது எப்படி ப்ளேடோ, அதேப் போல் இப்போது கத்தி உதவியாக உள்ளது. ஆனால் குழந்தைகளை, இந்த செயலை செய்யவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அவர்கள் கைகளை கிழித்துக் கொள்வார்கள்.
* உணவுப் பொருட்கள் இருக்கும் பாக்கெட்டுகளை வீட்டிற்கு வாங்கி வந்த பின்னர், அதனை திறக்கப் பயன்படுத்தும் கத்தரிக்கோலை காணவில்லையா? அப்படியெனில் வீட்டில் இருக்கும் கத்தியைப் பயன்படுத்தி எளிதில் திறக்கலாம்.
* பொதுவாக டேப்பை வெட்டுவதற்கு, கத்தரிக்கோல் தான் பயன்படுத்துவோம். ஆனால் அது இல்லாத பட்சத்தில், கத்தியைப் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, கத்தரிக்கோலை விட, கத்தி இன்னும் விரைவில் வெட்டும்.
* வீட்டில் பாட்டிலைத் திறக்கப் பயன்படும் கருவி இல்லாவிட்டால், அப்போது கத்தியைக் கொண்டு எளிதில் திறக்கலாம்.
* நீண்ட நாட்களாக ஜன்னல் மூடியிருந்தால், அது திறக்க முடியாதவாறு இருக்கும். அப்போது நன்கு ஒட்டிக் கொண்டிருக்கும் அதனை திறப்பதற்கு, நன்கு கூர்மையான கத்தியை முனைகளில் விட்டு திறந்தால், எளிதில் திறந்துவிட்லாம்.
* தோட்டத்திலோ அல்லது தொட்டியிலோ செடிகளை வைக்க நினைத்தால், அப்போது மண்ணை தோண்டுவதற்கு, கத்தியைப் பயன்படுத்தலாம்.
இவையே காய்கறி நறுக்கும் கத்தியை வேறுவிதமாக பயன்படுத்தும் புதுமையான வழிகள். இவ்வாறு நீங்கள் காய்கறி நறுக்குவதைத் தவிர, வேறு எப்படியெல்லாம் கத்தியை பயன்படுத்தியிருக்கிறீர்கள்?



Click it and Unblock the Notifications