Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
வீட்டில் உள்ள அசுத்தங்களை எளிதில் நீக்குவதற்கான சில டிப்ஸ்...
வீடு ஒரு சோலையாக, நல்வாழ்வை மற்றும் சுகாதாரத்தை ஊக்குவிக்கும் பாதுகாப்பு மற்றும் அமைதியை கொடுக்கும் இடமாக இருக்க வேண்டும். அத்தகைய வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து கடுமையான இரசாயன சுத்திகரிப்புகள், பாக்டீரியாவை எதிர்க்கும் சோப்புக்களைக் கொண்டு சுத்தம் செய்த பின்னரும், வீடு ஒரு பாதுகாப்பான இடமாக இல்லாமல் இருக்கலாம். ஆகவே பலர் இயற்கைப் பொருட்களைக் கொண்டே வீட்டை சுத்தம் செய்ய ஆசைப்படுவார்கள்.
சுவரின் மீதான கறைகள், அடைப்பு உள்ள அசுத்த நீர் குழாய்கள், கறைப் படிந்த குளியலறை கதவுகள் முதலியவற்றினால் வீடானது அசிங்கமாக காணப்படும். ஆனால் அவற்றை சுத்தம் செய்வது என்பது கடினமான விஷயம் அல்ல. ஏனெனில் இத்தகைய அசுத்தங்களை சுத்தம் செய்வதற்கு வீட்டிலேயே எளிமையான பொருட்கள் பல உள்ளன.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வீட்டு குறிப்புகள், வீட்டில் உள்ள அசுத்தத்தை சுத்தம் செய்யும் வேலையை எளிதாக்க உதவும்.

வீட்டுத் தரை மற்றும் சுவர்கள்
வீட்டுத் தரை அல்லது சுவர்களில் சூயிங் கம் படிந்து விட்டால், அதனை எளிதில் நீக்குவதற்கு அங்கு சிறிது வேர்க்கடலை வெண்ணெயை தடவி, வெண்ணெயில் உள்ள எண்ணெயானது சூயிங் கம்மை எளிதில் வெளியேற்றும்.

மரப்பொருட்களில் உள்ள மெழுகை அகற்றுதல்
மரப் பொருட்களில் மெழுகு இருந்தால், முதலில் ஹேர் ட்ரையரைக் கொண்டு மெழுகினை மென்மையாக்க வேண்டும். பின் வினிகர் மற்றும் நீரைக் கலந்து, அதனைப் பயன்படுத்தி துடைத்து, பின்பு காகிதத் துண்டை பயன்படுத்தி துடைத்து விடவும்.

குரோம் சாதனங்கள்
குளியலறை மற்றும் சமையலறையில் உள்ள குரோம் பூசப்பட்ட சாதனங்களை துணி கண்டிஷனரான மென்மையான பேப்பரைக் கொண்டு நன்றாக துடைத்தால், பிரகாசிக்க செய்ய முடியும். மேலும் அங்கு ஒரு எலுமிச்சை பழக் கூழை கொண்டு, தேய்ப்பதாலும் பொருட்கள் நனறாக பளபளக்கும்.

அடைப்பட்ட குழாய்கள்
பாத்திரம் கழுவும் சிங்க்கில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், அங்கு ஒரு கப் உப்பு மற்றும் பேக்கிங் சோடா போட்டு, பின்பு அதில் ஒரு டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்ற வேண்டும்.

சுவர்களில் உள்ள கிரேயான் கறைகள்
வீட்டில் ஒரு குறுநடை போடும் குழந்தை இருந்தால், அந்த வீட்டில் குழந்தைகள் சுவற்றில் கிரேயானைக் கொண்டு எழுதி விளையாடுவதற்கு விரும்புவர். இதனை சாதாரணமாக பயன்படுத்தும் இரப்பரைக் கொண்டு தேய்த்து, எளிமையான முறையில் சுவற்றில் எழுதியவற்றை அழித்து விடலாம். இல்லையெனில் ப்ளோ ட்ரையரைப் பயன்படுத்தி, எழுதியதன் மீது 5 முதல் 10 நிமிடம் வரை பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்பு அதனை ஒரு உலர்ந்த காகித துண்டைப் பயன்படுத்தி துடைத்து விடவும்.

குளியலறை கண்ணாடி கதவுகள்
வெள்ளை நிற வினிகரில் நனைத்த ஈரமான பஞ்சைக் கொண்டு குளியலறை கதவை தேய்த்தால், கதவுகள் சுத்தமாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்கும்.

குளியலறையில் உள்ள பூஞ்சை காளானை நீக்குதல்
ஹைட்ரஜன் பெராக்சைடுக் கொண்டு குளியலறை டைல்ஸை துடைத்தால், ஹைட்ரஜன் பெராக்சைடானது தரையில் உள்ள பூஞ்சை காளான்கள் மீது நேரடியாக படுவதால், அது அழுக்கை மென்மையாக்கிவிடும். பின்பு ஒரு துணியை வைத்து துடைத்தால், எளிமையாக அழுக்கை நீக்கிவிடலாம்.

கண்ணாடி விளக்குகள்
கண்ணாடி விளக்குகள் மீது படிந்துள்ள தூசிகளை, ஒரு ரோலிங் லிண்ட் பயன்படுத்தி துடைத்தால், தூசிகள் அறவே நீங்கும்.

தளர்வான ஜாடி மூடிகள்
லேடக்ஸ் கையுறைகளை பயன்படுத்தி, நன்றாக மூடப்படாத பாத்திரங்களின் மூடிகளில் பொருத்தி மூடினால், டப்பாவானது இறுக்கமாக மூடும்.

கத்திரிக்கோலை கூர்மையாக்குதல்
கூர்மை இல்லாத கத்திரிக்கோலை எடுத்து 10-12 முறை மூன்று அடுக்குகள் உள்ள ஈய தகட்டின் மீது தேய்த்து வெட்டுவதால், கத்திரிக்கோல் கூர்மையாகிவிடும்.

கடுமையான கறை
துரு போன்ற கடுமையான கறையை நீக்க, போரக்ஸ் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு செய்யப்பட்ட பேஸ்ட்டை, அதன் மீது தேய்த்து, பின் ஒரு வெட்டப்பட்ட எலுமிச்சை துண்டைக் கொண்டு தேய்த்தால், லேசான கறையாக இருந்தால், அதை எளிதாக நீக்க முடியும்.

ஸ்டைன்லெஸ் ஸ்டீல் சிங்க்
ஸ்டைன்லெஸ் ஸ்டீல் சிங்க்கை அல்லது அந்த வகையைச் சேர்ந்த சாதனங்களை சிறிது மாவுக் கொண்டு தேய்த்தால், அது பளபளப்பாகிவிடும்.

சில்வர் பாத்திரங்கள்
சில்வர் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய, பேஸ்ட்டை அதிலும் வெள்ளை நிற பேஸ்ட்டைப் பயன்படுத்தவும். எப்படியெனில், சிறிது பேஸ்டை எடுத்து வெள்ளிப் பாத்திரத்தின் மீது தேய்த்து, பின்பு கழுவி விட வேண்டும்.

குளிர்சாதன பெட்டி துர்நாற்றம்
குளிர்சாதன பெட்டியில் நல்ல வாசனை ஏற்படுவதற்கு, பஞ்சு உருண்டையை வெண்ணிலா சாற்றில் நனைத்து, குளிர்சாதன பெட்டியின் பின்புறத்தில் ஒரு இடத்தில் வைக்கவும். இதனால் அது குளிர்சாதன பெட்டியில் சில நேரங்களில் உண்டாகும் துர்நாற்றத்தை உறிஞ்சிக் கொள்ளும்.

புதிய துண்டுகள்
புதிய துண்டுகளை துவைக்கும் போது, எப்போதும் நீரில் ஒரு கப் உப்பு சேர்க்கவும். இதனால் உப்பானது துண்டுகள் விரைவாக மங்காத வண்ணம் காக்கிறது.



Click it and Unblock the Notifications
