Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
நெயில் பாலிஷ் ரிமூவரை வெச்சு வீட்டையும் சுத்தம் செய்யலாம்!!!
அழகுப் பொருட்களில் ஒன்றான நெயில் பாலிஷ் ரிமூவர், நெயில் பாலிஷ்ஷை ரிமூவ் செய்வதற்கு மட்டும் பயன்படவில்லை. பல பொருட்களையும் சுத்தம் செய்வதற்கு பயன்படுகிறது. அதிலும் சாதாரண கறைகளை நீக்கப் பயன்படுவதைவிட, கடினமான கறைகளை அகற்றப் பயன்படுவதில் சிறந்தாது என்று சொல்லலாம். சரி, இப்போது அந்த நெயில் பாலிஷ் ரிமூவர் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்ப்போமா!!!
* நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி, பசையை நீக்கப் பயன்படுகிறது. அதாவது பசையானது ஏதாவது ஒன்றில் நன்கு ஒட்டிக கொண்டால், அபபோது கைகளை வைத்து பிரிக்க வேண்டாம். ஏனெனில் பசையை கைகளால் தொட்டால், அவை சருமத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே அப்போது ஒரு காட்டனில் சிறிது நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி, ஒட்டிக் கொண்ட இடத்தில் தேய்த்தால், எளிதாக பிரித்துவிடலாம்.

* டைல்ஸ் மிகவும் அழுக்குடன், பளபளப்பின்றி காணப்பட்டால், நெயில் பாலிஷ் ரிமூவரின் உதவியால், அந்த அழுக்கு உள்ள இடத்தை சுத்தம் செய்தால், டைல்ஸ் சுத்தமாக பளிச்சென்று காணப்படும்.
* சில மை கறைகளை, நீரில் அலசினால் போகாமல் இருக்கும். அதிலும் அவ்வாறு நீரில் அலசும் போது, அந்த இடமே ஒரு வித்தியாசமான நிறத்தில் காணப்படும். எனவே அத்தகைய கறைகளைப் போக்க, நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி, அலசினால், கறைகள் சுத்தமாக நீங்கிவிடும்.
* அலுவலகங்களில் மார்க்கரைப் பயன்படுத்தி எழுதும் போது அழிக்க முடியவில்லையா? அல்லது பெயிண்டிங் செய்யும் போது தவறாக வரைந்தவற்றை சரிசெய்ய முடியவில்லையா? அப்படியெனில் அப்போது நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி, அழித்தால் சரிசெய்துவிடலாம்.
* உலோகப் பொருட்களில் துரு, பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்றவை எளிதில் வந்துவிடும். இவை அனைத்தையும் போக்க நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தினால், எளிதில் போய்விடும். பின் பார்ப்பதற்கே புதிது போல் காட்சியளிக்கும்.
மேற்கூறியவையே நெயில் பாலிஷ் ரிமூவரின் இதர நன்மைகள். வேறு எப்படியெல்லாம் நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
